உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செயின் பறிப்புகள் எண்ணிக்கை: அறிக்கை கேட்கிறார் டி.ஜி.பி.,

செயின் பறிப்புகள் எண்ணிக்கை: அறிக்கை கேட்கிறார் டி.ஜி.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மாநிலம் முழுதும் நடந்த செயின் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களை தடுக்க, ரோந்து பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது தொடர்பாக, 15 வகையான தகவல்கள், அந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.அதில், செயின் பறிப்பு, வழிப்பறி நடந்த இடம், அப்பகுதி எந்த காவல் நிலைய எல்லையில் உள்ளது; குற்றம் நடந்தது பகலிலா, இரவிலா; குற்றவாளிகள் விபரம், அவர்கள் மீது ஏற்கனவே உள்ள வழக்குகள்; அவர்களின் கூட்டாளிகள் விபரம் போன்றவை, சுருக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, குற்றத்திற்கு பயன்படுத்திய வாகனம், பறிக்கப்பட்ட நகைகள் மதிப்பு, மீட்கப்பட்டவை விபரம், எந்த கடையில் இருந்து மீட்கப்பட்டது உள்ளிட்ட விபரங்களுடன், அந்த அறிக்கையை, எஸ்.பி.,க்கள் மற்றும் கமிஷனர்களுக்கு, சம்பந்தப்பட்ட போலீசார் அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Diraviam s
நவ 02, 2024 11:33

The chain snatchers are doing this in dangerous manner while snatching.. those culprits shall be tried in attempt to murder cases.


RAJ
நவ 02, 2024 09:52

இவரை மாத்திப்புட்டு... வேலை செய்யற ஆள போடுங்க.. எல்லாம் சரி ஆகிடும்..


N.Purushothaman
நவ 02, 2024 09:50

இப்படி ஒரு டீ ஜி பி தமிழகத்துல இருக்கிறதே இப்போதான் தெரியுது ...அடேயப்பா .....


Ramanujam Veraswamy
நவ 02, 2024 06:14

It is obvious. Night patrolling has been given low priority, if not nil practically, over so called VIP Security, Bandhubust etc. All in higher positions are aware of this but afraid of coming out ly.


Kasimani Baskaran
நவ 02, 2024 05:50

வெலா வாரியாக தகவல் கேட்பதைப்பார்த்தால் யார் குற்றவாளி என்ற தகவலை காவல்துறை முன்னரே அறிந்து கொண்டு நடவடிக்கை எடுக்காமல் யாரது உத்தரவுக்கோ காத்து இருப்பது போல இருக்கிறது. காவல்துறையை தனியாருக்கு விற்றுவிடலாம்.


புதிய வீடியோ