உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி: தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்

மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி: தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மதுரை ஆதீனம் கார் விபத்து திட்டமிட்ட சதி என தருமபுரம் ஆதீனம் திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நாளை (மே 3) தொடங்கி 5ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாடு தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் நடக்க உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bana1j37&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம், மதுரையில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார், உளுந்தூர்பேட்டை அருகே ரவுண்டானாவில் விபத்தில் சிக்கியது.அவரின் கார் மீது மற்றொரு கார் மோதியதே இதற்கு காரணம். விபத்தில் நல்வாய்ப்பாக மதுரை ஆதீனம் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். இந் நிலையில் தருமபுரம் ஆதீனம் தமது சமூக வலைதள பக்கத்தில் விபத்து திட்டமிட்ட சதி என்று குற்றம்சாட்டி உள்ளார். அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது;சென்னை வந்துகொண்டிருந்த மதுரையாதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானம் காரினை பின்னே வந்து காரில் மோதியுள்ளனர். இது திட்டமிட்ட. சதியாக தெரிகிறது.இறையருளால் ஆதீனகர்த்தர் உயிர் தப்பினார். காருக்கு சேதமாயிற்று என்ற விபரமறிந்த குருமணிகள் மதுரையாதீனத்துடன் தொடர்புகொண்டு பேசி நலம் விசாரித்தனர். இவ்வாறு தருமபுரம் ஆதீனம் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

c.mohanraj raj
மே 03, 2025 00:15

சதியாக இருக்கலாம்


sridhar
மே 02, 2025 21:05

நாம் கோவில் போகும்போது மட்டும் ஹிந்து , மற்ற நேரங்களில் விழிப்புணர்வு இல்லவே இல்லை .


BALAMURUGAN G
மே 02, 2025 20:36

அவர்களின் ஏஜென்டுகள் தமிழகத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்று உள்ளனர். குண்டு வெடிப்பு நடந்தால் அது சிவகாசி பட்டாசு என்று தொடங்கி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது என்று முரட்டு முட்டுக் கொடுக்க தயாராக உள்ளது அந்தக் கும்பல்


sankaranarayanan
மே 02, 2025 18:58

கடவுள் இல்லை இல்லை என்பவர்கள் அது எப்படி வாடிகனில்மட்டும் கடவுள் இருக்கிறார் என்று மவுனஅஞ்சலி செலுத்தினார்கள் ஓஹோ அவர்கள் அவர்களா சொல்லவே வேண்டாம்


vbs manian
மே 02, 2025 18:01

எதற்கும் துணிந்தவர்கள்.


Raja k
மே 02, 2025 17:49

ஐ எஸ் ஐ காரணமாக இருக்கலாம், அல்லது லஸ்கர் இ தொய்பாவின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம்,


krishna
மே 02, 2025 17:47

கடவுள் இல்லை என்று சொன்னால் இல்லாமலா போய் விடுவார். இருக்கதான் செய்கிறார்.காண்பதற்கு கண், கேட்பதற்கு காது இருப்பது போல் கடவுளை அறிவதற்காக pineal gland என்று ஒரு பகுதி மூளையில் இருக்கிறது. அதை நாம்தான் பக்தி, தவம் இவற்றின் மூலம் activate செய்ய வேண்டும். கடவுளை அறிய விருப்பம் இல்லை என்றால் அதனால் கடவுளுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்குத்தான் நஷ்டம்.


GSR
மே 02, 2025 18:30

தியானம் அதிக நேரம் செய்யும்பொழுது ஒரே முறை சிஸ்டம் இருக்கும் என சொல்ல முடியாது. நியோரோசை மெடிடேஷன் ஒரு நுட்ப தன்மை உடையது. அதை செய்து வர நீங்கள் உங்கள் மனதின் சக்தியை / கடவுள் வழி காட்டுவதை போல் சம்பவங்கள் நடப்பதை உணருவீர்கள். மனம் ஒரு universe


R.P.Anand
மே 02, 2025 17:44

தீய சக்திகள் ஆளும்போது கடவுள் மறைந்திருப்பர் . நல்ல சக்திகள் வரும் பின்னர் வருவார்


arumugam mathavan
மே 02, 2025 17:44

பின்னால் இருந்து மோதியது, சதிசெயல், ஆதினவிபத்து குறித்த குற்றாசாட்டை விசாரித்து குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும். ஆதீனங்கள் சைவசமயத்திற்கான வேர்கள் , பாதுகாகாக்க வேண்டியது கடமை


thehindu
மே 02, 2025 17:14

விபத்து எந்த ரூபத்தில் வந்திருந்தாலும் , கடவுள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் .


Svs Yaadum oore
மே 02, 2025 17:25

வாடிகனில் கூட சமீபத்தில் போய் சேர்ந்துட்டாரு ....அதுக்கு விடியல் அஞ்சலி ...சாவு எந்த ரூபத்தில் வந்தாலும் மேய்ப்பர் கடவுள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்தான் ..


N Sasikumar Yadhav
மே 02, 2025 17:35

உங்க திராவிட மாடல் எஜமானிடம் கேளுங்க கடவுள் இருக்கிறாரா இல்லையா என


மீனவ நண்பன்
மே 02, 2025 19:13

மெரினாவில் முரசொலி பேப்பர் தயிர்வடை வைத்து படையல் செய்வர் …இந்து அறநிலைய அறங்காவலர்களாக இருக்கும் உடன்பருப்புகள் பதவி விலக வேண்டும்


தமிழ்வேள்
மே 02, 2025 20:04

அப்புறம் எதுக்குய்யா மொட்டை வெயிலில் பாலைவனத்தில் தொங்கோட்டம் ஓடி கொத்து கொத்தாக சாகிறீர்கள்?


Venkatesh
மே 03, 2025 21:01

200 ரூபாய் உ.பிஸ்,, உனக்கு புரிதல் அவ்வளவு தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை