உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சருக்கு கோ பேக் சொன்ன தர்மபுரி தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்

அமைச்சருக்கு கோ பேக் சொன்ன தர்மபுரி தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: அமைச்சருக்கு 'கோ பேக்' சொன்ன, தி.மு.க., நிர்வாகிகளை நீக்கி, கட்சி பொது செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க.,வில் கோஷ்டி மோதல் பற்றி எரிகிறது.தர்மபுரி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட, தர்மபுரி, பென்னா-கரம் தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு தி.மு.க.,வில் வாய்ப்பளிக்காமல், பாலக்கோடு தொகுதியை சேர்ந்த தர்மபுரி மேற்கு மாவட்ட துணை செயலாளரும், எம்.பி.,.யுமான மணி, கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.இதனால் அதிருப்தியடைந்த கிழக்கு மாவட்ட, அயலக அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பூம்புகார் சின்னசாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வைத்தியலிங்கம், அஜ்ஜனஹள்ளி ஊராட்சி ஓரப்பாச்சியூர் கிளை லோகநாதன் ஆகியோர், சமூக வலைதளத்தில், 'கோ பேக், எம்.ஆர்.கே., கோ பேக், தேவ் ஆனந்த்' என பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கட்சி மேலிடம், நான்கு பேரையும் அதிரடியாக நேற்று நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் தி.மு.க.,வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வைத்தியலிங்கம் கூறியதாவது: நான், 40 ஆண்டுகால கட்சிக்காரன். 1984 ஜூன் முதல் கட்சியில் இருந்து வருகிறேன். இதற்கு எம்.பி., மணி மற்றும் அமைச்சர் பன்னீர்செல்வமே காரணம். இன்பசேகரன் கூட மாவட்ட செயலாளராக இருந்தார். அவர் விமர்சனத்தை பொறுத்துக்கொண்டார். எம்.பி., மணியால் விமர்ச-னத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sankaranarayanan
மே 19, 2025 11:05

யாருக்கோ கோ பேக் என்று ஆரம்பித்த கோஷம் இப்போது தங்களுக்கே வந்துவிட்டது பார்த்திர்களா அரசியல்வாதிகளே உஷார் எச்சரிக்கை தன்வினை தன்னைச்சுடும் என்பது கண்கொள்ளா காட்சியாகிவிட்டதே அந்தகோ பாவம் என்ன செய்வது இனி இதுபோன்று கோஷ்டி சண்டைகள் கட்சிக்குள் எல்லா மாவட்டங்களிலும் ஏற்பட்டு கட்சியே காணாமல் போயிடும்


Kumar Kumzi
மே 19, 2025 10:58

ஓங்கோல் தத்திகளுக்கு கோ_பேக் சொல்லும் காலம் வெகு தூரமில்லை


Anbuselvan
மே 19, 2025 09:46

இப்போதான் யாரோ திமுக ஒரு கட்டுக்கோப்பான கட்சி அதை போல நம் கட்சியும் மாற வேண்டும் என ஊடகம் வாயிலாக யாரோ சொன்னார்கள் போல இருக்கு. அதற்குள்ளவா ?


Krishnamoorthy
மே 19, 2025 09:15

தமிழகம் வெல்லும்


திருட்டு திராவிடன்
மே 19, 2025 08:35

மொத்த அயோக்கிய கூட்டமும் கோ பேக்.


S.kausalya
மே 19, 2025 08:15

Nirvaagikalaal கிடைக்கும் பண பலனை விட அமைச்சரால் கிடைக்கும் பண பலன் அதிகம் அல்லவா?


N Tertainment namaste
மே 19, 2025 07:57

இதென்ன பிரமாதம் . கிளைமேக்ஸ் 2026 தேர்தலில் கெட்அவுட் திமுக என சொல்வார்கள் தமிழக மக்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை