உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி மீது பஸ் மோதல்: 3 பேர் பலி

லாரி மீது பஸ் மோதல்: 3 பேர் பலி

வேலூர் : நாட்றம்பள்ளி அருகே, நின்ற லாரி மீது, டிராவல்ஸ் பஸ் மோதியதில், மூன்று பேர் பலியாயினர்; ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து செங்கல் ஏற்றிய லாரி, நேற்று முன்தினம் இரவு, சென்னை சென்றது. வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, பங்களா மேட்டில் உள்ள நான்கு வழிச் சாலையில், நள்ளிரவு வரும் போது பஞ்சரானது. சாலையோரம் லாரியை நிறுத்தி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன், 45, கிளீனர் கிருஷ்ணகுமார், 22, ஆகியோர் சென்று விட்டனர். ஓசூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற, ஏ.பி.என்., என்ற தனியார் பஸ், நேற்று அதிகாலை, 4.30 மணிக்கு, சாலையோரம் நின்ற செங்கல் லோடு லாரி மீது பயங்கரமாக மோதியது. பஸ்சின் முன் பக்கம் முழுவதும் நொறுங்கியதில், தர்மபுரியைச் சேர்ந்த பஸ் டிரைவர் சங்கர், 45, தூத்துக்குடியைச் சேர்ந்த சரஸ்வதி, 40, பெங்களூருவைச் சேர்ந்த டேவிட் சங்கர், 40, ஆகிய மூவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்; ஏழு பேர் படுகாயமடைந்தனர். வாணியம்பாடி தீயணைப்புப் படையினர், மூன்று மணி நேரம் போராடி, இடிபாடுகளில் சிக்கி, காயமடைந்த ஏழு பேரை மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை