உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வை அவர் குறிப்பிட்டாரா: அண்ணாமலை பேச்சு குறித்த கேள்விக்கு இ.பி.எஸ்., பதில்

அ.தி.மு.க.,வை அவர் குறிப்பிட்டாரா: அண்ணாமலை பேச்சு குறித்த கேள்விக்கு இ.பி.எஸ்., பதில்

சென்னை: பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, 'அ.தி.மு.க.,வை அவர் குறிப்பிட்டாரா' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில், 'பா.ஜ., தீண்டத்தகாத கட்சி. நோட்டா கட்சி. பா.ஜ., வந்ததால் தோற்றோம் என்றவர்கள் இன்று பா.ஜ., வேண்டும் என தவம் இருக்கும் சூழ்நிலையை எங்கள் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் உருவாக்கி உள்ளது பெருமை அளிக்கிறது. பா.ஜ., இல்லாமல் அரசியல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாகி உள்ளது. மற்றபடி எந்த கட்சியையும், தலைவரையும் குறைத்து பேசவில்லை' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ai7x33zt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (மார்ச் 08) பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க., தவம் கிடக்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அளித்த பதில்:எங்க அ.தி.மு.க.,வை குறிப்பிட்டாரா? தவறாக பேசாதீங்க, தயவு செய்து தவறாக பேசாதீங்க. எங்க அப்படி யார் சொன்னது. தவறாக நீங்க வந்து போட்டு கொடுத்து வாங்காதீங்க. ஏற்கனவே சொல்லிவிட்டேன். 6 மாதம் கழித்து கூட்டணி குறித்து பேசப்படும் என்று தெளிவுபடுத்தி விட்டேன். பத்திரிகை, ஊடகங்களுக்கும் அதுதான் செய்தி. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

சரித்திரம் கிடையாது

இது குறித்து நிருபர்கள் சந்திப்பில், இ.பி.எஸ்., கூறியதாவது: அ.தி.மு.க., பொறுத்தவரைக்கும், கட்சி துவங்கியதில் இருந்து, இன்று வரை எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்த சரித்திரம் கிடையாது. முதலில் புரிந்து கொள்ளுங்கள். அ.தி.மு.க.,வை பொறுத்தவரைக்கும் பலம் உடைய கட்சி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

S. Balakrishnan
மார் 09, 2025 10:50

சுதாரிப்புடன் அரசியல் தெளிவுடன் இரண்டு் கட்சி தலைவர்களும் பேசி இருக்கிறார்கள். தொடரட்டும் இரண்டு கட்சிகளின் அரசியல் பயணம் தெளிந்த நீரோடை போல.


saravanan
மார் 08, 2025 22:29

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக மிகப்பெரிய எதிர்கட்சியாக அதாவது எழுபதிற்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற முடிந்தது ஆனால் எதிர்கட்சிகளின் சதிவலையில் இந்த பிரிந்து போனதால் பாராளுமன்ற தேர்தலில் அதன் தாக்கம் நன்றாகவே எதிரொலித்து. அடுத்து வரப்போகும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக, தேதிமுக மற்றும் இதர ஒத்த கருத்துடைய கட்சிகளின் இணைவில் கூட்டணி அமையுமானால் அது வாகை சூடும் அணியாகவே இருக்கும்


முருகன்
மார் 08, 2025 19:44

அம்மாவின் அதிமுக இரும்பு கோட்டையை துருபிடிக்கா வைத்த உங்களை என்ற மக்கள் உங்களை இந்த தேர்தலோடு காணமால் செய்ய போவது உறுதி


Jegaveeran
மார் 08, 2025 19:39

எடப்பாடி அடங்கி போய் விட்டதைத்தான் இது காட்டுகிறது. இதை பயன் படுத்தி அண்ணாமலை இன்னும் ஏறி அடித்து 50 தொகுதிகளை பெற வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால் 2026 தேர்தலுடன் அ.தி.மு.க. பரிதாபகரமான நிலைக்கு சென்றுவிடும் என்று மிரட்டி எடப்பாடியை பணியவைத்து பின் அ.தி.மு.க.வை கைப்பற்ற வேண்டும். சபாஷ் அண்ணாமலை.


K.Ramakrishnan
மார் 08, 2025 18:20

துப்பினால் கூட துடைத்து விட்டு போய் விடுவார்களோ... அதிமுக நிலை பரிதாபத்துக்குரியது.


Maruthu Pandi
மார் 08, 2025 17:50

ஏற்கனவே அவர் 11 சதவீதம் ஓட்டுக்களை கோவையில் வாங்கியதை மறக்க வேண்டாம். விடியல் ஆட்சிகள் இனி பிழைப்பு நடத்த முடியாது


KUMARAN TRADERS
மார் 08, 2025 16:19

இந்த மாதிரி கேள்வி இந்த நிருபர் சீமானிடம் கேட்டிருந்தால் செருப்பாலே அடிச்சிருப்பார்


Velan Iyengaar
மார் 08, 2025 15:11

இன்னும் ரெண்டு ரைடு வேணும் வேணும் ... அதுவும் நவீன அமாவாசையோட சம்பந்தி வீட்டில் வேணும் எனும் என்பது போல இருக்கு இந்த பேச்சு


Yes your honor
மார் 08, 2025 15:02

ஒருசில சமூக சிந்தனையற்ற பணத்தை மட்டுமே பிரதானமாக கருதும் ஊடகங்களுக்கு இதைவிட்டால் வேறு பிழைப்பு கிடையாது, பாவம்.


venugopal s
மார் 08, 2025 14:16

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல் அண்ணாமலை பேச்சு தேர்தல் வந்தால் தெரிந்து விடும். ஐயோ பாவம் என்று தன்னந்தனியே நின்று அவமானப் படப் போகிறார்!


Maruthu Pandi
மார் 08, 2025 17:52

குடுத்த 200 ரூவாக்கு நல்லாவே கூவுறீங்க வேணு. தனியா போய் கூவுங்க... தமிழ்நாடு இனி வாழ வேண்டும்..


முத்துக்குமார்,பாலமேடு
மார் 09, 2025 14:12

வேணு உன்னைப் பற்றி நீ யாரு எப்படி நீ திமுகவிற்கு முரட்டு முட்டு கொடுப்பாய் என்பது ஏற்கனவே நம் தினமலர் வாசகர்களுக்கு நன்கு தெரியும் எனவே இன்று முட்டுச் சந்தில் மாட்டாமல் சுற்றிக் கொண்டு தப்பித்து ஓடி விடு அதுதான் இப்போது உனக்கிருக்கும் ஒரே வழி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை