உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.10 கோடி நிலத்தை அபகரிக்க உடந்தை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் கைது

ரூ.10 கோடி நிலத்தை அபகரிக்க உடந்தை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை, : போலி ஆவணம் வாயிலாக, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்ற கும்பலுக்கு உடந்தையாக இருந்த, பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி., ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டார்.பத்திரப்பதிவு துறையில், சேலம் சரக டி.ஐ.ஜி.,யாக இருப்பவர் ரவீந்திரநாத். அவர், சென்னையில் நிர்வாக பிரிவு மாவட்ட பதிவாளராக இருந்தபோது, தாம்பரம் வரதராஜபுரத்தை சேர்ந்த சையது அமீன் என்பவருக்கு சொந்தமான, 10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலி ஆவணம் வாயிலாக, ஒரு கும்பல் அபகரிக்க உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த நிலத்தை, காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு, பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று, சேலத்தில் இருந்து ரவீந்திரநாத்தை அழைத்து வந்து, சென்னையில் விசாரணை நடத்தி, கைது செய்தனர்.கோவையில், 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்ற வழக்கு தொடர்பாக, கோவையில் சார் பதிவாளராக இருந்த மணிமொழியான் மற்றும் உதவியாளர்கள் லதா, சபரீஷ் ஆகியோரை கைது செய்திருந்தனர். அப்போது, மணிமொழியான் அளித்த வாக்குமூலத்தில், 'நான் தாம்பரத்தில் சார் பதிவாளராக இருந்தபோது, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்கு, அடமான பத்திர ஆவணத்தை நீக்கிவிட்டு, ஏற்கனவே கிரயம் செய்தது போல, போலி ஆவணங்களை சேர்த்தேன். அதை வில்லங்க சான்றிலும் திருத்தம் செய்தேன்.'இதற்கு, அப்போது சென்னையில் நிர்வாக மாவட்ட பதிவாளராக இருந்த ரவீந்தரநாத், எட்டு முறை வில்லங்க சான்றில் திருத்தம் செய்ய அனுமதி அளித்து, குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார்' என, தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் ரவீந்திரநாத்திடம் விசாரணை செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

R S
செப் 26, 2024 14:04

கறைபடிந்த களங்க விளக்குகள்


sugumar s
செப் 26, 2024 13:55

கழகம் மக்கள் மட்டும் தான் கொள்ளை அடிக்கணுமா நாங்க அடிக்க கூடாது என்றும் அதிகாரிகளும் கிளம்பி விட்டார்கள் . தமிழ் நாடு உறுபட்டாபோல தான்


Kanns
செப் 26, 2024 12:48

Arrest-Defame-Prosecute-Punish All Land Mafia incl Ruling PartyMen without Bail


Lion Drsekar
செப் 26, 2024 11:58

இதுவும் கடந்து போகும், வந்தே மாதரம்


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 26, 2024 11:49

இரண்டு நாட்களுக்கு முன் இரண்டு காவலர்கள் இன்ஸ்பெக்டர் கையெழுத்து போல தாங்களே கையெழுத்து இட்டு மோசடி செய்ததாக செய்தி வெளியானது. இன்று டி ஐ ஜி போன்ற மிக உயர் பதவியில் இருக்கும் காவல் துறை அதிகாரியே மோசடி வழக்கில் கைதாகிறார். காவல் துறை கழக கூடாரம் ஆகிவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது


G Mahalingam
செப் 26, 2024 10:47

அரசு அதிகாரிகள் திமுக அதிமுக அமைச்சர்கள் அழுத்தம் மூலம்தான் இது போல் செய்வார்கள். கடைசியில் அமைச்சர்கள் தப்பித்து விடுவார்கள். அதிகாரிகள் தைரியமாக இருக்க வேண்டும். 5 சதவீதம் அதிகாரிகளுக்கு 95 சதவீதம் அமைச்சர்களுக்கு.


Dharmavaan
செப் 26, 2024 10:37

குற்றம் இந்நாட்டில் அதிகமாக காரணமே குற்றவாளிகளிடம் காட்டும் பரிவே காரணம்


Karthik
செப் 26, 2024 10:26

ரூ.10கோடி என்பது எப்படி கணிக்கப்படுகிறது? "tem"திலேயே கோளாறு இருக்கு. நிலத்தின் விலை விற்பவரிடம் ஒரு மதிப்பும், அரசு பத்திரப்பதிவேட்டில் ஒரு மதிப்பும் இருக்கு. இதையும் சரி செய்யுங்க.


karunamoorthi Karuna
செப் 26, 2024 09:03

யார் கொடுத்த அழுத்தம் என்று மட்டும் வெளியே வரவே வராது


SRIDHAAR.R
செப் 26, 2024 09:02

யோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ளே வை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை