‘டிஜிட்டல்’ கல்வி பணியாளர்கள் உண்ணாவிரதம்
சென்னை: பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று, ‘டிஜிட்டல்’ கல்வி பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, தமிழ்நாடு டிஜிட்டல் கல்வி பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரதத்தில், கண்களில் கருப்பு ரிப்பன் கட்டி, பணியாளர்கள் பங்கேற்றனர்.