நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
தி.மு.க.,வையும், முதல்வர் ஸ்டாலினையும் ஒருவர் எப்போது பாராட்டி பேசுகிறாரோ, அப்போதே, அ.தி.மு.க., குறித்து பேசும் தகுதியை அவர் இழந்து விடுகிறார். தி.மு.க.,வின் மன்னராட்சியை அழித்து, ஜனநாயகம் மலர வேண்டும் என்ற லட்சியத்துடன் பொதுச்செயலர் பழனிசாமி, அ.தி.மு.க.,வை மீட்டு தமிழக மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளார். அ.தி.மு.க., விசுவாசிகள் உட்பட அனைவரும் தினகரனின் உண்மை முகத்தை புரிந்து கொண்டனர். எங்கள் அரசியல் பாதையை தினகரன் தீர்மானிக்க தேவையில்லை. நம்பிச் சென்றோரை எல்லாம் தி.மு.க.,வுக்கு வழி அனுப்பி வைத்தவர் தினகரன். தினகரனை நம்பி, 18 எம்.எல். ஏ.,க்கள் கையெழுத்து போட்டனர். அவர்களை அரசி யல் அனாதையாக்கினார். - உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,