உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  த.வெ.க., கூட்டணியில் தினகரன், பன்னீர் இணைவர்

 த.வெ.க., கூட்டணியில் தினகரன், பன்னீர் இணைவர்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளிலும் த.வெ.க., வெற்றி பெறும். த.வெ.க., தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை, ஆர்.எஸ்.எஸ்., பெற்றெடுத்த பிள்ளை என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். த.வெ.க.,வை பொறுத்தவரை, மதம், மொழிகளுக்கு அப்பாற்பட்ட கட்சி. ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தி, சமத்துவத்தை உறுதிப்படுத்துவதே த.வெ.க., கொள்கை. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் தினகரனின் அ.ம.மு.க.,வை, விரைவில் த.வெ.க., கூட்டணியில் எதிர்பார்க்கலாம். பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே, த.வெ.க., கூட்டணிக்கு அவர்கள் வருவர். மாற்று கட்சிகளை சேர்ந்த பலர், த.வெ.க.,வில் இணைய உள்ளனர். - செங்கோட்டையன், நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர், த.வெ.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ