உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமலர் நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி சென்னையில் ஜூன் 14ல் துவக்கம்

தினமலர் நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி சென்னையில் ஜூன் 14ல் துவக்கம்

சென்னை: 'தினமலர்' நாளிதழ் நடத்தும் இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, வரும் 14ம் தேதி துவங்க உள்ளது.தமிழக அரசு சார்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், 'ஆன்லைன்' வாயிலாக, டி.என்.இ.ஏ., எனும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இதற்காக, பி.இ., மற்றும் பி.டெக்., படிக்க விரும்பும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியுடன் இணைந்து, 'இன்ஜினியரிங் கவுன்சிலிங்' வழிகாட்டி நிகழ்ச்சியை, ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தமிழகம் முழுதும் நடக்க உள்ள வழிகாட்டி நிகழ்ச்சி, வரும் 14ம் தேதி சென்னையில் துவங்க உள்ளது.அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லுாரிகளில் உள்ள, இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை, 'ஆன்லைன்' வாயிலாக நடக்கும், கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன.இந்த ஆன்லைன் கலந்தாய்வு அணுகுமுறைகள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்; கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் முறை; கல்லுாரிகளின் 'கட் ஆப்' மற்றும் மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு இந்நிகழ்ச்சியில் இலவசமாக ஆலோசனை வழங்கப்படுகிறது.வழிகாட்டி நிகழ்ச்சி, வரும் 14ம் தேதி, சென்னை, தி.நகர் வாணி மஹாலில், காலை 10:00 முதல் பகல் 1:00 மணி வரையும், குன்றத்துாரில் உள்ள, 'சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' கல்வி நிறுவன வளாகத்தில், மாலை 3:00 முதல் 6:00 மணி வரையும் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சிகளில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நுணுக்கங்கள், சரியாக 'சாய்ஸ் பில்லிங்' பதிவிடுவதற்கான வழிமுறை, 'புரோவிசனல் அலாட்மன்ட்' பெறுதல்.கவுன்சிலிங் முறையில் இந்த ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் உட்பட ஏராளமான தகவல்களை, 'டி.என்.இ.ஏ., 2025' செயலர் டி. புருஷோத்தமன், கல்வி ஆலோசகர் ஆர்.அஸ்வின் உள்ளிட்ட டி.என்.இ.ஏ., அதிகாரிகள், கல்வி ஆலோசகர்கள், மாணவர்களுக்கு நேரடியாக வழங்குகின்றனர்.தமிழகம் முழுதும் பல்வேறு பகுதிகளில் இந்நிகழ்ச்சி நடக்க உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அனுமதி இலவசம்.

.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை