உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்

மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்

சென்னை:எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச்சங்கம் சார்பில் நடந்த, தொடர் காத்திருப்பு போராட்டம், அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.'மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுவதை போல, மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பில் உயரம் குறைந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இலவச பஸ் பயண அட்டை வழங்க வேண்டும்' என்பது உட்பட, எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தலைமை அலுவலகத்தின் முன், உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று முன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி அழைத்து பேசினார். அதைத்தொடர்ந்து, அவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்.இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் ராகுல் கூறியதாவது:எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். துறை செயலருடன் நடந்த பேச்சு வார்த்தையில், வாகனம் வழங்குவது, இலவச பயண அட்டை, இலவச வீடு கட்டும் திட்டம் ஆகிய கோரிக்கைகள், மூன்று மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று, செயலர் உறுதியளித்தார். அதை ஏற்று, போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மீண்டும் போராட்டத்தை துவக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ