உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனத்தை மதித்து, சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ள செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இரண்டாம் நாளிலேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்பட்டதற்காக தமிழக முதல்வருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஊழல் கறை படிந்தவரை உடனடியாக அமைச்சராக்கியதன் மூலம் தமிழகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் பெரும் களங்கத்தைச் சேர்த்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெறுவதற்காக செந்தில்பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் ஒருவரான வித்யாகுமார் என்பவர், சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்தும், உடனடியாக பிணையை ரத்து செய்யக் கோரியும் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதியரசர் ஏ.எஸ். ஓகா தலைமையிலான அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”என்ன இது. செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் நேரடியாக அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். இது நிறுத்தப்பட வேண்டும். அவர் அமைச்சராக்கப்பட்டதால், வழக்கின் சாட்சிகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற பொதுமக்களின் அச்சம் நியாயமாக்கப்படும்” என்று தமிழக அரசின் சார்பில் வாதாடிய வக்கீல் சித்தார்த்தா லூத்ராவை நோக்கி வினா எழுப்பியுள்ளார்.அவர் எழுப்பிய வினாக்களையும் தெரிவித்த கண்டனத்தையும் தமிழக அரசை தலைமையேற்று நடத்தும் முதல்வர் ஸ்டாலினை நோக்கி எழுப்பப்பட்ட வினாவாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் மாத இறுதியில் பிணை வழங்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டாவது நாளே செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது மட்டும் சிக்கல் அல்ல. அதையும் தாண்டி செந்தில் பாலாஜியை தியாகி என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருந்தார்.அப்போதே அதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நான், முதல்வர் என்பவர் ஏழரை கோடி தமிழ்நாட்டு மக்களுக்கும் பொதுவானவர். நடுநிலை தவறாத நீதிபதியாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியது தான் அவரது கடமை. ஆனால், அவரோ கடமையை மறந்து விட்டு மோசடி செய்தவருக்கு வழக்கறிஞராக மாறி அவருக்காக வாதாடிக் கொண்டிருக்கிறார். இது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. செந்தில் பாலாஜியை முதலமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும் போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை” என்று கூறியிருந்தேன். எனது ஐயம் சரியானது தான் என்பது இப்போது நீதியரசர் தெரிவித்த கருத்தின் மூலம் உறுதியாகியிருக்கிறது.தமிழகத்தில் மிக அதிக அதிகாரம் பெற்ற அமைச்சராக செந்தில் பாலாஜி திகழும் நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தமிழகத்தில் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதாக இருக்காது. எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி சுப்ரீம் கோர்ட்டுக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Dominic
டிச 03, 2024 11:27

எல்லோருக்கும் எல்லாம். நீ சம்பாரிச்ச சொத்து 1000 கோடி. மத்தவன் எல்லாம் ...


ஆரூர் ரங்
டிச 03, 2024 11:23

விஞ்ஞான முறைப்படி வழக்கு விசாரணை. சந்தில் பாலாவிடம் பணம் கொடுத்து வேலை கேட்டவர்கள், வேலை கிடைத்தவர்கள். ஏமாந்தவர்கள், பணம் கொடுக்காதவர்கள், ஏமாறாதவர்கள் என ஆயிரம் பேரை சகட்டு மேனிக்கு வழக்கில் சேர்த்துள்ளனர். ஆக விசாரணை முடிய நூறாண்டுகள் ஆக்கப்படும். அதுவரை வாக்காளர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற மனிதப்புனிதரை அமைச்சராக ஆக்காமல் காக்கவைக்க முடியுமா? வழக்குப் போட்ட தமிழக அரசுக்கே இல்லாத கவலை கோர்ட்டுக்கு ஏன்?


GMM
டிச 03, 2024 10:48

சட்ட விரோத பண பரிமாற்றம். அமலாக்க துறையின் கடின உழைப்புக்கு மதிப்பின்றி செந்தில் பிணையில் விடுவிப்பு. பேரவை உறுப்பினர் கைதியானால், முடக்கப்பட்ட உறுப்பினர் என்று பொருள். விடுவிக்கும் வரை ஒரு அரசு கிளார்க் பதவி கூட கொடுக்க முடியாது. முதல்வருக்கு விதிகள் தெரியாது. அமைச்சர் பதவி கொடுத்து விட்டார். கவர்னர் தேர்தல் ஆணையம் மூலம் செந்தில் பதவியை பறிக்க முடியும். சபாநாயகர், முதல்வரிடம் விளக்கம் கேட்க முடியும். நடவடிக்கை எடுக்க முடியும். ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க முடியும். அரசு அமைப்புகளை வழக்குகள் மூலம் கொத்தடிமை போன்று நடத்தும் முறை மாற வேண்டும்.


MADHAVAN
டிச 03, 2024 10:29

ஜெயலலிதா, சசிக்கலா போன்றவர்கள் குற்றவாளி என்று தீர்ப்பு வந்து, சிறைவாசம் அனுபவித்தவர்கள், நீ பல்லை கிழித்துக்கொண்டு அவர்கள் கூட கூட்டணி போட்டு, காசு வாங்கி தின்னுட்டு, இப்போ என்னமோ யோக்கியன் மாதிரிபேசுறது ஓவர்,


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 03, 2024 10:25

திராவிடம் என்று பெயரை வைத்துக்கொண்டு எல்லா திருட்டுத் தனங்களையும் செய்வோம். யாரும் கேட்கக்கூடாது. ஏனென்றால் நாங்கள் திராவிட மாடல். சமூக நீதி பேசுவோம். ஆனால், நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்போம். எல்லோருக்கும் எல்லாம் என்போம் ஆனால், நாங்கள் மட்டுமே பல லட்சம் கோடிகளை கொள்ளையடித்து சுகமாய் வாழ்வோம். இது போல பல இருக்கிறது. அதனால் நாங்கள் திராவிட மாடல். ஏனென்றால் தமிழன் இளித்தவாயன்.


அப்பாவி
டிச 03, 2024 10:20

அணிலுக்கு பதில் அன்பை அமைச்சராப் போட்டா டபிள் சந்தோஷம்.


AMLA ASOKAN
டிச 03, 2024 10:09

ஊழல் குற்றத்திற்காக சிறை சென்று, ஜாமினில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜியை பற்றி குமுறும் இவர், அதானியின் ஊழல் குற்றச்சாட்டு பற்றி வாயே திறக்காதது ஏன்? கூட்டணி தர்மமா? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டிலிருந்து அன்புமணியை காப்பாற்றவா ?


orange தமிழன்
டிச 03, 2024 09:44

இந்த திராவிட கட்சிக்கு ஒட்டு போட்ட மக்களை சொல்ல வேண்டும்.. எப்படி ஒரு முதல் அமைச்சர் ஊழல் புரிந்த மந்திரியை தியாகி என்கிறார்.....வெட்க கேடு.....


sankar
டிச 03, 2024 09:19

"அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்"- வெயிட் பண்ணுங்க கணம் கோர்ட்டார் அவர்களே அதற்கான உத்தரவை பிறப்பிப்பார்


vbs manian
டிச 03, 2024 09:08

கண்ணகி பாண்டிய மன்னன் முன்பு வாதாடியது ஞாபகம் வருகிறது.


புதிய வீடியோ