உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு

ராட்சத ராட்டினத்தில் கோளாறு: அந்தரத்தில் தவித்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை ஈ.சி.ஆரில் உள்ள வி.ஜி.பி.,தனியார் பொழுதுபோக்கு பூங்காவின் ராட்சத ராட்டினத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ராட்டினத்தில் தவித்து வரும் 30க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பாக வி.ஜி.பி., நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது:ராட்சத ராட்டினத்தை இயக்கியபோது மோட்டாரில் திடீரென சத்தம் கேட்டது. சத்தம் கேட்ட உடனே ராட்டினத்தை இயக்குவது நிறுத்தப்பட்டது.உடனே ராட்டினத்தில் சிக்கியிருந்த 30க்கும் மேற்பட்டோரை மீட்க, எங்களிடம் இருந்த கிரேன் மூலம் முயற்சித்தோம். கிரேன் உயரம் குறைவாக இருந்ததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தோம். அவர்கள் வந்து உடன் மீட்பு பணிகள் நடைபெறகிறது. விரைவில் அனைவரும் மீட்கப்படுவர்.இவ்வாறு வி.ஜி.பி., நிர்வாகம் தரப்பில் கூறினர். சிறிதுநேர போராட்டத்துக்குப் பின்னர் ராட்டினத்தில் சிக்கி தவித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

lana
மே 28, 2025 11:26

ராட்டினம் உயரத்துக்கு கிரேன் இல்லை என்றால் எப்படி N.O.C கொடுக்க பட்டது. அவர்கள் ஒழுங்காக cutting கொடுத்தால் கிடைக்கும்


Padmasridharan
மே 28, 2025 06:47

அவர்கள் வந்து உடன் மீட்பு பணிகள் நடைபெ"றகிற"து.. இதை கவனிக்கவும்.. சொல், பொருள் கொடுத்தாலும் செய்தியியை பெ"றுகிற" அவசரத்தில் எழுத்துப்பிழை காணப்படுகின்றது. தமிழை காப்பாத்துங்கோ.. சாமி


Anantharaman Srinivasan
மே 28, 2025 00:46

ராட்சத ராட்டினத்துக்கு ஏற்ற உயரத்தில் கிரேன் வைத்திருக்க வேண்டும்.


மீனவ நண்பன்
மே 27, 2025 23:56

சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கியிருந்தார் ...நாம் ஓவரா ரியாக்ட் பண்ணுகிறோம்


Kothandaraman Ramanujam IITM
மே 27, 2025 23:22

ஒழுங்காக பாராமரிப்பதில்லை ,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை