உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநகராட்சிகளில் ஊழல் பணத்தை பிரிப்பதில் தகராறு: இபிஎஸ்

மாநகராட்சிகளில் ஊழல் பணத்தை பிரிப்பதில் தகராறு: இபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பரங்குன்றம் : ''தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள்,'' என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்று பயணத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் பேசியதாவது: மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேயரின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேயரின் ஒத்துழைப்பு இல்லாமல் முறைகேடு நடந்திருக்க முடியாது. எனவே, மதுரை மேயர் கைது செய்யப்பட வேண்டும். மதுரை மேயரைக் காப்பாற்ற திமுக அரசு முயல்கிறது. தமிழகம் முழுவதும் பல மாநகராட்சிகளில் ஊழல் செய்த பணத்தைப் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறார்கள். காஞ்சிபுரம், நெல்லை, கோவையிலும் இவ்வாறு நடந்துள்ளது. மற்ற நகர்ப்புற பகுதிகளிலும் ஊழல்கள் நடந்துள்ளது. டிஜிபி பதவியைக் கூட உரிய நேரத்தில் நியமிக்க முடியாத, கையாலாகாத அரசு திமுக அரசு. புதிய டிஜிபி தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. 8 டிஜிபிக்கு பிறகு 9வது டிஜிபியாக இருப்பவர் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஓய்வுபெறும் நாள் இந்த அரசுக்கு முன்பே தெரிந்தும், திட்டமிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவரை நியமிப்பதற்காக சட்டப்படி நடந்து கொள்ளவில்லை.இதனால், தகுதியுள்ள 8 டிஜிபிக்கள் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. காவல் துறையிலேயே சரிவு ஏற்பட்டுள்ளது. நாட்டை ராணுவம் பாதுகாக்கிறது, மக்களை காவல்துறை பாதுகாக்கிறது. மக்களைக் காக்கிற காவல்துறையின் டிஜிபி பதவியைக் கூட உரிய காலத்தில் நியமிக்க முடியாத அளவுக்கு திமுக அரசு சென்றுவிட்டது.மக்களுடைய பிரச்னை தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இப்படியெல்லாம் விமர்சனம் செய்தால் உங்களுக்கு அடுத்தாண்டு தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது. நான்கு ஆண்டுகள் தூங்கிவிட்டு தேர்தல் வருவதால் தந்திரமாக ஏமாற்றுகிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு வாங்கப்பட்ட மனுக்கள் திருப்புனவத்தில் ஆற்றில் வீசி எறியப்பட்டுள்ளது. எந்தளவுக்கு மக்களை மதிக்கிறார்கள் என்று பாருங்கள். இவர்களா மக்களை காப்பாற்றுவார்கள்?. இவ்வாறு இபிஎஸ் பேசினார்.

முற்றுப்புள்ளி

திருமங்கலம் பகுதியில் இபிஎஸ் பேசியதாவது: கிராமப் புறங்களில் உள்ள ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகியிருக்கிறார்கள். பள்ளிகளை தொடர்ச்சியாக தரம் உயர்த்தி அதிக பள்ளிகளைத் திறந்தோம். ஆனால் திமுக ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. திருமங்கலம் தொகுதியில்தான் எய்ம்ஸ் வருகிறது. திமுக அரசு அழுத்தம் கொடுத்து பணிகளை முடிக்க முடியவில்லை. மதுரைக்கு எந்த ஒரு பெரிய திட்டமும் கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளுமே சிறப்பாக செயல்பட்டது ஊழல் செய்தததுதான் திமுகவின் சாதனை. அடுத்தாண்டு தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 03, 2025 02:28

திருமங்கலம் தொகுதியில்தான் எய்ம்ஸ் வருகிறது. திமுக அரசு அழுத்தம் கொடுத்து பணிகளை முடிக்க முடியவில்லை. - உம்மோட கூட்டணி கட்சியான பாவக்கா கிட்டே சொல்லி முடிக்கவைக்க திராணி இல்லையே ?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 02, 2025 00:52

இவங்க கூட்டணியின் பங்குப் பணம் சரியா வரலை


Tamilan
செப் 01, 2025 22:32

இப்படி அடியாள் வேலை செய்வதற்கு பாஜ கும்பலிடமிருந்து எவ்வளவு பணம் வந்தது


Arasu
செப் 01, 2025 21:46

நம்ம ஆட்சில எப்புடி


T.sthivinayagam
செப் 01, 2025 21:43

உங்களை போல் பத்து ஆண்டுகளாக அனுபவம் திமுகாவிற்கு இல்லை


திகழ்ஓவியன்
செப் 01, 2025 21:06

ACCUST 1 ஊழலுக்கு சிறை போனவர் உங்கள் கட்சி தலைவி , கொரானாவில் தயிர் ஸாதம் 450 என்று அடிச்சி சேர்த்து வைத்தவர் நீங்கள் , கொடநாடு யில் கொள்ளை அடிச்சி ஜெயா சொத்துக்கள் பங்கு போட்டு கொண்டவர் நீர் , இன்று சம்பந்தை காப்போம் மகனை மீட்போம் என்று ஊர்வலம் போகும் நீர் ஊழல் பற்றி பேசலாமா


முருகன்
செப் 01, 2025 21:02

எப்படி பேசினாலும் ஆட்சிக்கு வர முடியாது உங்கள் வரலாறு அப்படி


ஆரூர் ரங்
செப் 01, 2025 20:54

நேரு வுக்காக எல்லாம் செய்வர். நேர்மைக்காக ஏதும் செய்யமாட்டார்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 03, 2025 02:30

அப்பாடா, இன்னக்கி நேருவை இழுத்தாச்சி. பேட்டா காசு வந்துடும்


சமீபத்திய செய்தி