பழனிசாமி குடும்பத்தினரால் அ.தி.மு.க.,வில் இடையூறு
அ.தி.மு.க., தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் 250 கடிதம் அளித்துள்ளேன். அனைத்தும் மிக முக்கியமானவை. தற்போது இருப்பது, உண்மையான அ.தி.மு.க., இல்லை என்பதை எல்லாரும் தெரிந்து கொள்வீர்கள். அ.தி.மு.க.,வில் பழனிசாமியின் மகன் கட்சி விஷயங்களில் தலையிடுகிறார்; மைத்துனர், 'டிவி'யில் வருகிறார்; மாவட்டத்திலும், தொகுதியிலும் தலையிடுகிறார். மருமகனும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அவர்களின் செயல்பாடுகள், கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக இருக்கின்றன. எங்கே இருந்து கொண்டு, யார் யாரெல்லாம் இயக்குகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிந்ததுதான். ஆனால், பழனிசாமிக்கு மட்டும் தெரியாதா? என்னை பா.ஜ.,வோ; வேறு எந்த இயக்கமோ இயக்க முடியாது. பழனிசாமியுடன் இருப்பவர்கள், என்னோடு பேசிக்கொண்டு உள்ளனர். யார் யார் என்பது அவர்களுக்கும், எனக்கும் மட்டும்தான் தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்; நல்லதே நடக்கும். அ.தி.மு.க., கரைந்து கொண்டு வருகிறது. - செங்கோட்டையன் முன்னாள் அமைச்சர்