உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் கலைப்பு

 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் கலைப்பு

சென்னை: கிராமப்புற விவசாயிகளுக்கு உதவ, தமிழக அரசு சார்பில், மாநிலம் முழுதும், 54 நடமாடும் கால்நடை மருத்துவமனைகள் துவக்கப்பட்டன. பின், அவற்றின் எண்ணிக்கை 45 ஆக குறைக்கப்பட்டன. நடமாடும் மருத்துவமனை திட்டத்தில், ஒரு வாகனத்திற்கு, ஒரு கால்நடை மருத்துவர், உதவி கால்நடை மருத்துவர், உதவியாளர், பணியாளர் என, நான்கு பேர் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இத்திட்டம் தற்போது கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று பணியிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகம் முழுதும் 245 கால்நடை ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது போதுமானது என்பதால், நடமாடும் கால்நடை மருத்துவமனை திட்டம் கலைக்கப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை