உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடத்தில் விற்று தீர்ந்தது

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: 10 நிமிடத்தில் விற்று தீர்ந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, அக்டோபர் 17ம் தேதி சொந்த ஊர் செல்வோருக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடங்களில் முடிந்தது.தீபாவளி பண்டிகை, வரும் அக்., 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக, ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு, இன்று (ஆகஸ்ட் 18) தொடங்கியது.அக்டோபர் 17ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (ஆகஸ்ட் 18) காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.அக்டோபர் 18ம் தேதிக்கான ரயில் டிக்கெட்டை, நாளை ஆகஸ்ட் 19ம் தேதி புக்கிங் செய்யலாம்.அதேபோல, 19ம் தேதிக்கான முன்பதிவு வரும் 20ம் தேதியும், தீபாவளி நாளான, 20ம் தேதிக்கான முன்பதிவை, வரும், 21ம் தேதியும் செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் பதிவு செய்துகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

SUBRAMANIAN P
ஆக 18, 2025 13:40

ஏற்கனவே ஏஜெண்டுகள் அத்தனை டிக்கெட்டையும் முன்பதிவு செய்துவிட்டார்கள்.. ரயில்வே சுத்த ஏமாற்று வேலை. பெரும் ஊழல் துறை.


Rameshmoorthy
ஆக 18, 2025 10:53

All are Indians, please believe yourself


RAVINDRAN.G
ஆக 18, 2025 10:38

டிக்கெட் எடுத்தாலும் சீட் கிடைக்காது . சீட் கிடைத்தாலும் அங்கு வடக்கன் இருப்பார் .


அப்பாவி
ஆக 18, 2025 10:12

ஊருக்குப் போறோமோ இல்லியோ, டிக்கெட்ட போட்டு வெச்சிருவோம்.