உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்

தே.மு.தி.க. பொறுப்புகளில் திடீர் மாற்றம்: பெயர் மாறி இளைஞரணி செயலாளரான விஜய பிரபாகர்

சென்னை: தே.மு.தி.க.,இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தையில் இன்று(ஏப்.30) தே.மு.தி.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் ஏராளமான தொண்டர்கள் வருகை புரிந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tfw0cwsi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர்களில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.பொதுக்குழு கூட்டம் நடக்கும் திருமண மண்டபத்தின் நுழைவு வாயிலில் தடுப்புகள் வைத்து பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு தங்களுக்குரிய அடையாள அட்டை பெற்ற பின் அதை காண்பித்த பின்னரே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். செய்தி சேகரிக்க சென்ற நிருபர்களையும் திருமண மண்டபத்திற்குள் அனுமதிக்கவில்லை. மண்டபத்தில் அருகில் அசைவ விருந்து மதியம் வழங்கப்பட உள்ள நிலையில் அங்கும் யாரையும் அனுமதிக்கவில்லை.இந் நிலையில் தே.மு.தி.க.,இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ளார். கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டு உள்ளார். தலைமை நிலைய செயலாளராக பார்த்தசாரதி, அவை தலைவராக இளங்கோவன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வழக்கமாக விஜய பிரபாகரன் என்றே அறிவிப்புகளில் அவரது பெயர் இடம்பெற்று இருக்கும். அவரின் சமூக வலைதளபக்கங்களிலும் இதே பெயர் தான் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால், இன்றைய அறிவிப்பில் அப்படி இல்லாமல் விஜய பிரபாகர் என்றே விளிக்கப்பட்டு இருந்தது. மேலும், பிரேமலதாவின் கையெழுத்திட்ட கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிலும் விஜய பிரபாகர் என்றே இருந்தது.விஜய பிரபாகரன் என்பது, விஜய பிரபாகர் என்று திருத்தம் செய்துள்ளது ஏன் என்பது தொண்டர்களுக்கு புரியாத ஒன்றாக இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nallavan
மே 02, 2025 08:48

இந்தியன் படத்தில் செந்தில் கவுண்டமணியிடம் சொல்வது போல் ....


Yes your honor
ஏப் 30, 2025 15:34

இந்தப் பேருக்கும் அந்தப் பேருக்கும் என்ன 500 கிமீரா வித்தியாசம். எதோ ஒரு பேரு. பிரியாணில பிஸ் சரியாகக் கிடைத்ததா என்பது தான் தொண்டர்களின் கவலையாக இருக்குமே ஒழிய, பெயரின் கடைசியில் ர் இருந்தால் என்ன டுர் இருந்தா என்ன யாரு கவலைப்படப் போகிறார்கள்.