உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,- எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்கக்கோரி கட்சியினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

தி.மு.க.,- எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்கக்கோரி கட்சியினர் ஒட்டிய போஸ்டரால் சர்ச்சை

ஆண்டிபட்டி: தி.மு.க., - -எம்.எல்.ஏ., மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, அக்கட்சி எம்.பி.,யின் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் நேற்று முன்தினம் நடந்த, 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாமில், தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி தி.மு.க., -- எம்.எல்.ஏ., மகாராஜன் இருவரும் மேடையிலேயே ஒருவருக்கொருவர், 'முட்டாப்பயலே, ராஸ்கல்' என ஒருமையில் திட்டிக் கொண்டனர். தேனி கலெக்டர் ரஞ்ஜித் சிங் முன் நடந்த இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஆண்டிபட்டியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக, தி.மு.க., நிர்வாகிகள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். ஆண்டிபட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம், பேரூர் கழகம் என்ற பெயரில் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'கடந் த 25 ஆண்டுகளுக்கு மேல், மக்கள் பணியில் ஈடுபடும் எம்.பி., தங்கதமிழ்செல் வனை ஒருமையில் பேசி அவமதித்த எம்.எல்.ஏ., மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும். கட் சியினரை மதிக்காத மகாராஜன் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக, போஸ்டர் ஒட்ட மகாராஜன் தரப்பினர் தயாராகி வருகின்றனர். எம்.பி., - -எம்.எல்.ஏ., மோதலில், தி.மு.க.,வினரே போஸ்டர் ஒட்டியது, கட்சியினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் தான் ஒட்டினரா; யார் ஒட்டியது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையில், இந்த பிரச்னையை வளர்த்துக் கொண்டே செல்லக் கூடாது என்பதற்காக, இரு தரப்பிடமும் கட்சித் தலைமையில் இருந்து பேசியிருப்பதாக கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

krishna
ஆக 04, 2025 11:59

INDHA THEEYA SAKTHI DRAVIDA MODEL


M Ramachandran
ஆக 04, 2025 11:00

தானாக தமிழ் செல்வன் வேறு கட்சியில் இருந்து வந்து ஒட்டிக்கொண்டவர். அதனால் காழ் புணர்ச்சியுடன் நடந்து கொண்டிருக்கு.


karupanasamy
ஆக 04, 2025 10:55

தங்கத்தமிழ் செல்வன் எட்டப்படியார் சந்திப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.


தமிழ் மைந்தன்
ஆக 04, 2025 09:20

இந்த சம்பவம் பெரிய முட்டாளுக்கு தெரிந்தால் மட்டும்?


Jack
ஆக 04, 2025 08:29

ரெண்டு பேரும் அறிவாலயம் வாசலில் பத்து தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பு கேட்கலாம்


Sivakumar
ஆக 04, 2025 07:41

What is the use of putting up posters? No need, just call the royal family in person and tell the Family Head to remove such people from the party membership. Soon, the political party will have very few members remaining!!!


Svs Yaadum oore
ஆக 04, 2025 06:11

கட்சியா இது ...ஊரெங்கும் கொலை கொள்ளை கள்ள சாராயம் பாலியல் போஸ்கொ என்று சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது ..இதை கவனிக்க துப்பில்லை ..எம்.பி., எம்.எல்.ஏ.,க்குள் எவன் கொள்ளையடிப்பது எவன் சம்பாதிப்பது என்ற தகராறில் வாடா போடா என்று மக்கள் அதிகாரிகள் முன்னிலையில் அசிங்கமாக திட்டி கொள்வார்களாம் ....அதற்கு கட்சி தலைமை பஞ்சாயத்தாம் ....இதில் தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலமாக மாற்றி விட்டார்களாம் ....


Balasubramanian
ஆக 04, 2025 05:36

இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் தான் முட்டா பயல்கள்


rama adhavan
ஆக 04, 2025 07:15

அப்போ இங்கு நிறைய முட்டாள்கள் இருக்கின்றனரோ?


Prabakaran J
ஆக 04, 2025 05:28

ivangla innum nambugirargal makkal


முக்கிய வீடியோ