உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் கமகம பிரியாணி விருந்து

தி.மு.க., - எம்.எல்.ஏ.,வின் கமகம பிரியாணி விருந்து

திருச்சி:மண்ணச்சநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., கதிரவன், மக்களுக்கு பிரியாணி விருந்து அளிப்பது, மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தைச் சேர்ந்த கதிரவன் உள்ளார். இவர், அமைச்சர் நேருவின் உறவினர். முதல்வர் அறிவித்து செயல்படுத்தும் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் போல, 'மக்களுடன் மண்ணச்சநல்லுார் எஸ்.கதிரவன்' என திட்டம் அறிவித்து, மக்களை சந்தித்து வருகிறார். அத்திட்டத்தின் படி, தொகுதியின் 63 கிராம பஞ்சாயத்துகளில், தினமும் ஒரு பஞ்சாயத்துக்கு சென்று, கடந்த 14ம் தேதி முதல், மக்களிடம் எம்.எல்.ஏ., கதிரவன், குறைகளை கேட்டு வருகிறார். மக்கள் சந்திப்புக்குப் பின், கமகமக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல், முட்டை, சிக்கன் கிரேவி, இனிப்பு என அசைவ விருந்து அளிக்கப்படுகிறது. சைவ விருந்தும் போடப்படுகிறது. இதுவரை எட்டு பஞ்சாயத்துகளில் விருந்து முடிந்துள்ளது.வரும் செப்., 30 வரை, இந்த விருந்தை தொடர, எம்.எல்.ஏ., கதிரவன் முடிவு செய்துள்ளதால், தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

suresh guptha
ஜூலை 26, 2025 17:07

EVEN I CAN,IFI HAVE MEDICALCOLLEGE AND HOSPITAL ,IF DID TRASPLANTIONOF ORGAN


Vijayan
ஜூலை 24, 2025 15:29

முதல்வர் மருத்துவமனையில் அட்மிட் எம்எல்ஏ பிரியாணி விருந்து


udayanan
ஜூலை 24, 2025 12:58

தெலுங்கன் நம்மை ஆளுகிறான். தமிழன் அவன் போடும் பிரியாணிக்கு அடிமை.


அம்பி ஐயர்
ஜூலை 24, 2025 09:24

எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு.... கடைசியில் தான் மக்கள் ஞாபகம் வரும் போல. கமகம பிரியாணி விருந்துக்கான செலவு.... கிட்னி திருடி வித்த காசு..... கிட்னி திருடன்...


Kjp
ஜூலை 24, 2025 08:51

எப்படியோ பணம் வருகிறது தினமும் கூட பிரியாணி விருந்து போடலாம்.


ravi subramanian
ஜூலை 24, 2025 07:19

Kidney Thirudan.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 24, 2025 05:52

தின்று விட்டு செல்லும் மாக்கள் என்று டாஸ்மாக் தலைவன் முன்னாள் கூறினார் இந்நாளில் இவர்கள் நிரூபிக்கிறார்கள்


Mani . V
ஜூலை 24, 2025 03:51

சோற்றுக்கு செத்த பிண்டங்களாக மக்கள் இருக்கும் வரையில் இது போன்ற கொள்ளையர்கள்தான் பதவிக்கு வருவார்கள். நாலேகால் வருடம் மக்களின் நினைப்பு வருவதே இல்லை. சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது என்றவுடன் இவர்களுக்கு மக்கள் மீது கரிசனம் வந்து விடுகிறது. விலையே மதிக்க முடியாத வாக்கை குவாட்டர், கோழிப் பிரியாணி, தோடு, கொலுசு, மூக்குத்தி, அண்டா, குண்டாவுக்கு விற்கும் கேடுகெட்ட மக்கள் இருக்கும் வரையில் கொள்ளையர்களுக்கு கொண்டாட்டம்தான்.


சமீபத்திய செய்தி