எம்.பி.,க்கள் கூட்டம்: தி.மு.க., அறிவிப்பு
சென்னை: தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், வரும் 18ல் நடக்க உள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், வரும் 21ம் தேதி முதல் ஆக., 21ம் தேதி வரை நடக்க உள்ளது. அதையொட்டி, தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம், வரும் 18ல் சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமை வகிப்பார். கூட்டத்தில், எம்.பி.,க்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என, கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.