உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பவன் கல்யாண் மீது பாய்கிறது தி.மு.க.,

பவன் கல்யாண் மீது பாய்கிறது தி.மு.க.,

சென்னை: ''ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தமிழக அரசியலைப் பற்றி தெரியாது,'' என தி.மு.க.,வைச் சேர்ந்த டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். தி.மு.க., எம்.பி., கனிமொழியும், பவன் கல்யாணை குறை கூறி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.தேசிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாக தி.மு.க., குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதனை மறுத்த மத்திய அரசு, மூன்றாவது மொழியாக, விரும்பும் மொழியை தேர்வு செய்யலாம் என விளக்கமளித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில், ஜனசேனா கட்சியின் 12ம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், '' நம் நாட்டில் பல மொழிகள் இருப்பது நல்லது. தமிழக அரசியல்வாதிகள் ஏன் ஹிந்தியை எதிர்க்கிறார்கள் என தெரியவில்லை. ஆனால், தமிழ் படங்களை ஹிந்தியில் 'டப்' செய்து வெளியிட அனுமதிக்கின்றனர். சமஸ்கிருதத்தை சிலர் ஏன் விமர்சிக்கின்றனர் என்றே என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை. ஆனால், ஹிந்தி தேவையில்லையா? எனக்கூறியிருந்தார். இவரின் பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.அவரை குறை கூறும் வகையில், தி.மு.க., எம்.பி., கனிமொழி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். பா.ஜ.,வுக்கு முன், பா.ஜ.,வுக்கு பின் என்று வெவ்வேறு காலகட்டங்களில் ஹிந்திக்கு எதிர்ப்பாகவும், ஆதரவாகவும் பவன் கல்யாண் வெளியிட்ட பதிவுகளை கனிமொழி பகிர்ந்துள்ளார். தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவினரும், பவன் கல்யாணுக்கு எதிராக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். பவன் கல்யாணின் பேச்சு தொடர்பாக தி.மு.க., செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்., இளங்கோவன் கூறியதாவது: 1938ம் ஆண்டு முதல் ஹிந்தியை எதிர்த்து வருகிறோம். இரு மொழிக் கொள்கையை தான் பின்பற்றுவோம் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இதற்கு கல்வியில் சிறந்து விளங்கும் நிபுணர்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளே காரணம்; நடிகர்கள் அல்ல.1968களில் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, பவன் கல்யாண் பிறந்திருக்க மாட்டார். தமிழக அரசியலைப் பற்றி அவருக்கு தெரியாது. ஹிந்தியை நாங்கள் எதிர்ப்பது இது முதல் முறை அல்ல. தாய்மொழியில் கல்வி அளிப்பதே சிறந்தது என கருதுவதால், நாங்கள் ஹிந்தியை எதிர்க்கிறோம். பா.ஜ.,விற்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவு அளித்தால், அதன் மூலம் பா.ஜ., அரசிடம் இருந்து ஏதாவது பலன் கிடைக்கும் என அவர் நினைக்கிறார். இவ்வாறு டி.கே.எஸ்., இளங்கோவன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 76 )

Sivakumar
மார் 16, 2025 10:40

Mellath Thamizh Ini (Ch)Saahum - Andre Sonnaan Bharathi


மூர்க்கன்
மார் 21, 2025 14:57

ஹிந்தியே சேத்துக்கிட்ட இப்பவே சாகும்


கிளார்க்
மார் 16, 2025 08:00

எல்லா சாராய ஆலைகளை நடத்தும் திராவிடாஸ் தான் எல்லா இந்தி பள்ளிகளையும் நடத்துகின்றனர். இந்தி சேனல்களும் கேடி பிரதர்ஸ் நடத்துகிறார்கள்.


தத்வமசி
மார் 16, 2025 00:22

பவன் ஐயா கேட்டதில் என்ன தப்பு உள்ளது ? சன் டிவிக்கு எத்தனை மொழிகளில் சேனல் உள்ளது ? திமுக கட்சியின் உறுப்பினர்களுக்கு எத்தனை மாநிலங்களில் தொழில்கள் உள்ளன ? எல்லாமே தமிழை மட்டுமே வைத்தது வியாபாரம் எய்கிறார்களா ? அல்லது இவர்கள் சொல்லும் லிங்க் மொழி ஆங்கிலத்தை வைத்தா ? இரண்டும் இல்லை. உள்ளூர் மொழி இல்லையென்றால் தொழில் செய்ய இயலாது. அப்புறம் பவன் அய்யா சொல்வதில் என்ன தவறு உள்ளது ?


மூர்க்கன்
மார் 21, 2025 14:58

அரைகுறைக்கு பேரு தத்வமஸியா??


M R Radha
மார் 23, 2025 20:30

ஊழல் புடை நாற்றமெடுக்கும் திருட்டு த்ராவிஷன்கள் ஏன் ஓர் கருத்துக்கு இப்டி வரிசை கட்டி எதிர் கருத்துக்கள் போடுகிறார்கள்? அதற்கு ஒத்து ஊதும் ஊசிப்போன பிரியாணி 200ரூவா கிராக்கிகள். வேறொருவர் சொன்ன மாதிரி பாஜக வண்ணை ஸ்டெல்லா, தீப்பொறி போன்றவர்களை களமிறக்கி த்ராவிஷன்களை வாட்டி எடுக்க வேண்டும். த்ராவிஷ்களுக்கு இனிமே அடிக்கு அடி, வார்த்தைக்கு வார்த்தை தான் சரிப்படும். த்ராவிஷன்களின் கேஷ் சப்ளை ரூட்டை அடைக்க வேண்டும்.


Bala
மார் 15, 2025 22:02

Pavan Kalyanji speaks truth unlike our dravida model politicians. Pavan Kalyaanji people of Tamilnadu very much support you. Keep it up.


Suppan
மார் 15, 2025 21:09

ஓவியா விஜய் பிழையில்லாமல் தமிழ் எழுதத்தெரியவேண்டும் என்கிறீர்கள். ஆனால் "நிஜ தமிழன்" அல்ல நிஜத் தமிழன். :"பதிவிட தெரிந்த " அல்ல "பதிவிடத் தெரிந்த" . நீங்களே கோட்டை விட்டு விட்டீர்களே


நிக்கோல்தாம்சன்
மார் 15, 2025 21:03

இந்தியை எதிர்ப்போம் அதன் காப்பி பேஸ்ட் மொழியான வந்தேறி மொழியை ஆதரிப்போம்


தனி
மார் 15, 2025 20:15

இன்னும் இவன்கள் தமிழர்களை இவன்களுடைய கட்டூபாட்டில் வைக்க விரும்புகிறான்கள். 60களில் மாணவர்களை தூண்டி ஆதாயம் கண்ட இந்த குள்ளநரிக்காட்டம்


sankaranarayanan
மார் 15, 2025 19:41

தாமரை வெறுப்பவர்கள் அவர்களுடைய பொண்ணுக்கு வைத்த பெயர் சாரண தாமரை அல்ல பொண்ணு பெயர் செந்தாமரை பி.ஜெ.பியை முற்றிலும் ஆதரிப்பவர்கள் போலத்தான் ஆனால் வெளிவேஷம் போட்டுக்கொண்டு அரசியல் நடத்துகிறார்கள்


Visu
மார் 15, 2025 19:11

தாய்மொழியில் கற்பதே சிறந்தது உண்மைதான். சன் க்ஷன்ல படிக்கிறவங்க தமிழர் இல்லையா தமிழில் பேசினால் அபராதம் வேறு


T.sthivinayagam
மார் 15, 2025 19:00

உலகம் முன்னேறிக்கொண்டுள்ள இந்த காலத்தில் எத்தனையோ அப்ளிகேசன்கள் மொழி பெயர்ப்புக்காக வந்துவிட்ட நிலையில் மும்மொழி இரு மொழி பல மொழி கொள்கை என்று கூறுவதா...