தி.மு.க., தொகுதி பார்வையாளர்கள் 28ல் ஆலோசனை
சென்னை:முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சட்டசபை தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம், வரும், 28ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடக்கிறது.தி.மு.க., தலைமை அறிக்கை:முதல்வர் ஸ்டாலின் தலைமையில், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில், சட்டசபை தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், வரும் 28ம் தேதி சென்னை அறிவாலயத்தில் நடக்கிறது. அதில், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.