உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக கவுன்சிலர் ரவுடித்தனம்: வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்தினார் அண்ணாமலை

திமுக கவுன்சிலர் ரவுடித்தனம்: வீடியோ வெளியிட்டு அம்பலப்படுத்தினார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திருவாரூர் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமனின் ரவுடித்தனத்தை வீடியோவாக வெளியிட்டு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.திருவாரூர் நகராட்சி 30வது வார்டு திமுக கவுன்சிலர் புருஷோத்தமன். திருவாரூர்கட்டபொம்மன் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவுக்காக பேனர் வைக்க ஆதரவாளர்களுடன் வந்தார். கிஷோர் (வயது 26) என்பவரது வீட்டின் முன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7r0j6eqz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இங்கெல்லாம் பேனர் வைக்க கூடாது என கிஷோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கவுன்சிலர் புருஷோத்தமனும் அவரது ஆதரவாளர்களும் கிஷோரை சுற்றி வளைத்து தாக்கினர். தடுக்க வந்த கிஷோரின் நண்பர் விக்னேஷுக்கும் அடி உதை விழுந்தது. படுகாயமடைந்த கிஷோர், விக்னேஷ் திருவாரூர் அரசு ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளளனர்.வீடியோ அடிப்படையில் கவுன்சிலர் புருஷோத்தமன் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை: திருவாரூர் வார்டு கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் அவரது கும்பல், தனது வீட்டின் முன் பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவரைத் தாக்கினர். அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை, குண்டர்கள் என்பது திமுகவின் அரசியல் கலாசாரம். குண்டர்கள் மற்றும் வன்முறையில் செழித்து வளரும் உங்கள் கட்சியின் செயல்பாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டு விட்டு தப்பி விட முடியாது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

N R Sampath
ஆக 27, 2025 13:08

இதுதான் திராவிட மாடல் ஆட்சி.


pmsamy
ஆக 27, 2025 08:12

எதிர்க்கட்சி பண்ண வேண்டியத நீ ஏண் பண்ற நீ அதிமுக அல்ல கையா?


Kasimani Baskaran
ஆக 27, 2025 03:59

திராவிடம் என்பதே ரவுடித்தனம்தான். அளவு மட்டும் வேறுபாடும் - அது தீக்காவில் இருந்து ஆரம்பித்தது. வன்முறை அவர்களின் கலாச்சாரம்.


swaminathan
ஆக 27, 2025 00:37

செருப்பால் அடித்து சிறையில் போட வேண்டும் ..... தி மு க ஒரு ரவுடி கட்சி ....


ManiMurugan Murugan
ஆக 26, 2025 23:53

பேனர் அவர்கள் வீட்டு வாசலில் வைக்க வேண்டியது தானே வேறு யாராவது அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக கட்சி தி மு கா கூட்டணி ஒத்துக் கொள்ளுமா இவர்களுக்கு என்றால் இரத்தம் மற்றவர்களுக்கு தக்காளி சட்னி என்பதா


K.n. Dhasarathan
ஆக 26, 2025 21:09

அண்ணாமலை ஒரு கவுன்சிலர் பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்தால் இந்த கூச்சல் போடுகிறீர்கள் ஆ .தி மு க முன்னாள் அமைச்சர்கள் மேலே வழக்கு போட்டும் அனுமதி கொடுக்காமல் கடந்த பல வருடங்கலாகா இழுத்தடிக்கும் ஒன்றிய அரசின் மேல் என்ன சொல்லலாம்,? ஊழலுக்கு துணை போகும் உங்களை போன்றவர்களை என்ன செய்யலாம் ? பொய்யர்கள் கூட்டம் விரைவில் கூடாரம் காலியாகும், அப்போது இருக்கு கச்சேரி பொய்யர்களும் தப்பிக்க முடியாது.


Rameshmoorthy
ஆக 26, 2025 19:45

Now a days public should join hands and beat rowdies


Rameshmoorthy
ஆக 26, 2025 19:43

As per CM, TN is showing the way to the world


திகழ்ஓவியன்
ஆக 26, 2025 19:30

தம்பி உங்க பிஜேபி ஆளும் மாநிலங்கள் எல்லாம் பாருங்க ஒரு பிஜேபி MLA சொல்லுகிறார் கவுன்சிலர் எல்லாம் 50 லட்சம் கீழே பிரச்னை எல்லாம் நீங்களே தீர்த்து கொள்ளுங்கள் அதற்கு மேல் இருந்தா வாருங்கள் என்று , இது ஒரு மாட்டர்


MARUTHU PANDIAR
ஆக 26, 2025 20:13

வந்துட்டான்யா வந்துட்டான்யா ரூ 200 பிரியாணி குவாட்டரு .


Kjp
ஆக 26, 2025 21:08

நம்ம மாநிலம் நாறிக்கிடக்கிறது திகழ் கான்.மற்ற மாநிலத்தை பற்றி கவலைப்பட வேண்டாம்.எதிர்கட்சிகள் மாநிலங்கள் எல்லாம் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டு இருக்கிறது.மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டு இருக்கிறது.எல்லா மாநிலங்களையும் பின்னுக்கு தள்ளி கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் உள்ளது இதற்கு பதில் சொல்ல முடியாமல் மற்ற மாநிலங்களை சுட்டி காட்டும் வேலை வேண்டாம்.


Anantharaman Srinivasan
ஆக 26, 2025 22:55

உன் முதுகிலிருக்கும் அழுக்கு தானாக தெரியாது. நான் தான் பாத்து சொல்லணும்.


Priyan Vadanad
ஆக 26, 2025 19:26

குலைக்கிதாம் என்கிற வார்த்தையும் குரைக்கிதாம் என்கிற வார்த்தையும் ஒரே அர்த்தம்தான். Colloquial language.


சமீபத்திய செய்தி