உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., தோல்வியை மறைக்க வாக்காளர்கள் பெயர் நீக்கம்: எல்.முருகன் குற்றச்சாட்டு

தி.மு.க., தோல்வியை மறைக்க வாக்காளர்கள் பெயர் நீக்கம்: எல்.முருகன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ‛‛ தி.மு.க.,வின் தோல்வியை மறைக்க வாக்காளர் பட்டியலில் இருந்து பல வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது '' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: ‛ஸ்டிராங் ரூம் ' ல் சிசிடிவிக்களில் தொழில்நுட்ப கோளாறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. காரணம் சொல்வதை விட்டு, 24 மணி நேரமும் அந்த அறையை கண்காணிக்க வேண்டும்.தமிழகத்தில் பல இடங்களில் பாஜ., ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. கோவை, தென்சென்னை, நீலகிரி என தமிழகம் முழுவதும் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. தி.மு.க.,வின் தோல்வியை மறைக்க வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு உள்ளது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்த முடியாது என தேர்தல் கமிஷன் பல முறை விளக்கம் அளித்து உள்ளது. காங்கிரசும், ‛ இண்டியா' கூட்டணியும் தோல்வியை திசைதிருப்ப தேவையில்லாமல் இந்த புகாரை கூறுகின்றனர். 500 ஆண்டுகால மக்களின் போராட்டம், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு உள்ளது. அங்கு செல்ல மாட்டேன் என ராகுல் கூறுவது, கடவுள் மீது அவருக்கு நம்பிக்கையில்லை என்பதை காட்டுகிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

muthu
ஏப் 28, 2024 23:47

Ragul is basically muslim and his father born to muslim So he not to go to ram templeAs BJP why late you are telling missing of voters that too BJP voters As a minister what good jobs did to TN


venugopal s
ஏப் 28, 2024 20:15

அதற்குள் புலம்ப ஆரம்பித்து விட்டாரே, தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஒப்பாரி வைக்கலாமே!


Rajathi Rajan
ஏப் 28, 2024 18:55

உங்க பயம் புரிகிறது இதுவரை புற வாசல் வழியாக மக்களை சந்திக்காமல் மந்திரியா இருக்கீங்க? இப்ப மக்களை சந்தித்த பின்பு உங்க வகுசி தெரிந்துகிட்டு மந்திரி நீ எந்திரி என எழுப்பிவிட்டுடுவாங்கனு பயப்படுறீங்க,, அதனால் வந்த இந்த உளறல்,,, இந்த உளறலை இவர தவிர வேற யாரும் கண்டுக்கிடல போல


ஆரூர் ரங்
ஏப் 28, 2024 20:08

இப்போ சோனியா எந்த வாசல் வழியாக எம்பி யாகி யுள்ளார் ? மன்மோகன் சிங் எப்போதுமே ராஜ்யசபா எம்பி யாகவே இருந்தார். இந்திரா....கருணாநிதி கூட ஒருமுறை மேலவை உறுப்பினராக இருந்தார்கள்.


Rajathi Rajan
ஏப் 28, 2024 18:55

உங்க பயம் புரிகிறது இதுவரை புற வாசல் வழியாக மக்களை சந்திக்காமல் மந்திரியா இருக்கீங்க? இப்ப மக்களை சந்தித்த பின்பு உங்க வகுசி தெரிந்துகிட்டு மந்திரி நீ எந்திரி என எழுப்பிவிட்டுடுவாங்கனு பயப்படுறீங்க,, அதனால் வந்த இந்த உளறல்,,, இந்த உளறலை இவனை தவிர வேற யாரும் கண்டுக்கிடலா போல


GMM
ஏப் 28, 2024 14:34

தேர்தலில் வெற்றி பெற திராவிட, காங்கிரஸ் வாக்காளர்கள் எப்போதும் திராவிடம் சாராதவர் சேர்வது கடினம் பெயர் நீக்கம் அதிகம்? சிறுபான்மை மக்கள் அவர்களின் அமைப்பு உதவி மூலம் அட்டை பெற்று விடுவர் சொல்லும் கட்சிக்கு வாக்கு அதனால் தான் ஸ்டாலின், எடப்பாடி, காங்கிரஸ்க்கு சிறுபான்மை பாசம் வாக்காளர் தேர்வு, பதிவு பணிகள், ஆசிரியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தேர்தல் நடத்துவது மிக எளிய அரசு துறைகள் வாக்காளர் அடையாள அட்டையில் தேர்தல் ஆணையம் கையெழுத்து மட்டும்? தேர்தல் ஆணையம் மாநில போலீசார், அரசு ஊழியர்களை கடன் வாங்கி, தேர்தல் நடத்தும் திராவிட மாடல் வாக்காளர் அட்டை இருந்தும் பெயர் நீக்கம்? பிஜேபி வந்த பின், உண்மை வெளி வருகிறது சிறுபான்மை நீக்கம் அதிகம் இருக்காது?


முருகன்
ஏப் 28, 2024 14:05

தோல்வி உறுதி என தெரிந்துகொண்டு பேசும் பேச்சு மக்களிடம் எடுபடாது


thangavel
ஏப் 28, 2024 13:35

room pottu yosicheengala sir


ramesh
ஏப் 28, 2024 13:19

முருகன் அவர்களே தாங்கள் நிற்கும் தொகுதிக்கும் சேர்த்து தான் தேர்தல் நடந்து உள்ளது தானாக டெபாசிட் வாங்குகிறீர்களா என்பதை பார்க்கலாம் பிறகு கோவையை பற்றி பேசலாம்


vijai
ஏப் 28, 2024 14:37

jalara dmk


ரமேஷ்
ஏப் 28, 2024 12:59

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்க மாநில அரசால் முடியாது. சாஹு ந்னு ஒருத்தர் பத்து வருஷத்துக்கு மேலே பென்ஹ்சை தேச்சிக்கிட்டிருக்கார். அவரைக் கேளுங்க.


G Mahalingam
ஏப் 28, 2024 14:13

மாநில அதிகாரிகள் தான் வாக்காளர் பட்டியலை தயாரிக்கிறார்கள் அது திமுக ஆட்சி கட்டுப்பாடு பாராளுமன்ற சட்ட மன்ற பஞ்சாய தேர்தலை நடத்துவது 45 சதவீதம் மாநில அரசு அதிகாரிகள் தான்


மேலும் செய்திகள்