வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இதே போல் சென்னையிலும் தியாகராய நகர் பகுதியில் உள்ள பெரிய கொடிக்கம்பத்தில் தேசிய கொடி இரு வருடங்களுக்கு முன்னர் பறந்து கொண்டு இருந்தது. தற்போது அந்த கம்பத்தில் திமுக கொடி பறக்கிறது.
கொடைக்கானல்:தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் தி.மு.க., கொடி ஏற்றப்பட்டதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் ஆவின் பாலகம் பூத் திறப்பு விழா நேற்று நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்றார். கூட்டுறவு பண்டகசாலையின் முகப்பில் உள்ள கம்பத்தில் சுதந்திரதினம், குடியரசு தினத்தில் தேசியக் கொடி ஏற்றப்படும். இக்கம்பத்தில் நேற்று தி.மு.க.,வினர் தி.மு.க., கொடியை கட்டினர். அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரத்தில் அகற்றப்பட்டது.
இதே போல் சென்னையிலும் தியாகராய நகர் பகுதியில் உள்ள பெரிய கொடிக்கம்பத்தில் தேசிய கொடி இரு வருடங்களுக்கு முன்னர் பறந்து கொண்டு இருந்தது. தற்போது அந்த கம்பத்தில் திமுக கொடி பறக்கிறது.