உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதுகில் குத்தும் தி.மு.க., அரசு: ஹிந்து முன்னணி

முதுகில் குத்தும் தி.மு.க., அரசு: ஹிந்து முன்னணி

திருப்பூர்: ''திருப்பரங்குன்றம் மலை வழக்கில், முருக பக்தர்கள் முதுகில் தி.மு.க., அரசு குத்தி விட்டது'' என ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்குகளை, மதுரை ஐகோர்ட் கிளை விசாரிக்கிறது. அதில், தி.மு.க., அரசின் காவல்துறை, 'மலையில் ஆடு, கோழி பலியிடுவது காலங்காலமான வழக்கம்; நெல்லிதோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை இல்லை' என அப்பட்டமான பொய்யை கோர்ட்டில் கூறி, முருக பக்தர்களின் முதுகில் குத்தியுள்ளது, மதுரை கலெக்டர் மற்றும் தி.மு.க., அரசு சார்பிலான வாதங்களில், 'திருப்பரங்குன்றம் மலை, நீண்ட காலமாக சிக்கந்தர் மலை என்றே அழைக்கப்படுகிறது; ஆடு, கோழி பலியிட்டால், தீட்டு என்பது மனித சமூகத்துக்கு எதிரானது. 18ம் படி கருப்பண்ணசாமிக்கு பலியிட்டு தான் வழிபடுகின்றனர்'' என, அபத்தமான சிண்டு முடிக்கும் வாதத்தை முன் வைத்துள்ளனர். ஆங்கிலேய ஆட்சியிலேயே, மலை முழுதும் கோவிலுக்கே சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், தி.மு.க., அரசு, பொய் வாதங்களை முன்வைத்து, கோவிலின் புனிதத்தை கெடுக்க முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. ஹிந்து அறநிலையத்துறை சார்பில், வலுவான வாதங்களை முன்வைத்து, கோவிலுக்கு ஆதரவாக உள்ள, முந்தைய தீர்ப்புகளை, எடுத்துரைக்க வேண்டும். மலையில் தீபம் ஏற்ற கோர்ட் பிறப்பித்த உத்தரவை உடனே, நடைமுறைப்படுத்த வேண்டும். முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு, தி.மு.க., அரசு மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

rajan_subramanian manian
ஆக 14, 2025 10:58

தவறு. இந்துக்களை விடியல் அரசு முதுகில் குத்தாது. நேராக மார்பில் தான் குத்தும். குத்து வாங்கியும் வலிக்காதமாதிரி விடியலிடமே காலை பிடிக்கும் இந்துக்கள் இருக்கும் வரை டெய்லி குத்துதான்.


ஆரூர் ரங்
ஆக 14, 2025 10:37

அடுத்து தொழுகை நடத்தும் இடங்களில் .. பலி கொடுக்க அரசு ஆதரவு தருமா?.


sribalajitraders
ஆக 14, 2025 09:41

சகோதரர்களாக பழகும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் இவரை போன்றவர்களை நாம் புறக்கணிக்கவேண்டும்


P. SRINIVASAN
ஆக 14, 2025 09:38

யாரெல்லாம் இந்துக்கள் என்பது தெளிவுபடுத்தவேண்டும். எங்களை ஏன் கருவறைக்குள் அனுமதிக்க மறுக்கிறீர்கள்? அப்போ நாங்கள் இந்துக்கள் இல்லையா? உங்களுடன் போராட நாங்கள் வேண்டும். ஆனால் சலுகை மட்டும் உங்களுக்கு. இன்னும் எத்தனை காலம்தான் ஏமாத்தடவீர்கள்?


vivek
ஆக 14, 2025 11:03

முதலில் நீ இந்து பெயரில் வரும் போலி....உண்மையான பெயரில்.கருத்து போடு


ஆரூர் ரங்
ஆக 14, 2025 14:58

எல்லா சமூகத்தவர்களும் பூசாரிகளாக இருக்கிறார்கள். எங்கள் பூர்வீக வீட்டின் அருகில் மிகவும் பிற்பட்ட வகுப்பு பூசாரி குடும்பம் பணி செய்கிறார்கள். அங்கு முன்னேறிய வகுப்பினர் கூட கருவறைக்குள் செல்ல முடியாது. அப்படியும் யாருக்கும் வருத்தமில்லை. முன்னாள் அமைச்சர் திரு கக்கன் பட்டியல் வகுப்பினர். அவரது தந்தை பூசாரி கக்கன் கூட ஒரு ஆலயத்தில் பூசாரியாக இருந்தார். நாத்திகர்கள் மட்டுமே கருவறை பற்றிப் பிரச்னை செய்கிறார்கள்.


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஆக 14, 2025 06:55

அந்த ஊர் மக்களே அதனை தெளிவாக உணர்ந்து அண்ணன் தம்பியாக உள்ள நிலையில் உங்க வாதம் எடுபடாது


guna
ஆக 14, 2025 08:25

who is this information technology officer association???


Priyan Vadanad
ஆக 14, 2025 05:39

முகத்துல குத்தாம முதுகிலே குத்துறதுக்கு நன்றி சொல்லணும் சார். ரொம்ப வலிக்காது. வேற வேல இல்ல போங்க.


krishna
ஆக 14, 2025 05:55

EERA PRIYAN ORU KILO ARISIKKU MADHATHA VITHAA PERA MAATHIKOO MIRUGA JENMAME.


vivek
ஆக 14, 2025 06:16

பிரியன். அவர் சொல்வது ஹிந்து மத கடவுளை பற்றி..


krishna
ஆக 14, 2025 04:54

SIR IDHU DRAVIDA MODEL AATCHI.ALLELUYA BABU MATTRUM THUNDU SEATTU MINORORITY KAALAI NAKKI VOTTU VAANGA HINDHUKKALAI EVVALAVU KEVALAMA NSDATHINAALUM TASMAC DUMILANS HINDHUKKAL PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU. PANAM VAANGI NAKKA THONGA POTTU MEENDUM DRAVIDA MODEL AATCHIKKU VOTTU POTTU KEVALA PADUM JENMANGAL.


புதிய வீடியோ