சினிமா விழா போல நடத்தும் தி.மு.க., அரசு
துணை முதல்வர் உதயநிதி, வாரம் முழுதும் மக்களை சந்திப்பதாக கூறுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் போகத்தானே வேண்டும்; அது அவரின் கடமை. விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து, தி.மு.க., பயப்படுகிறது. அதனால் தான், கல்வி நிகழ்ச்சியை கூட, சினிமா விழா போன்று இந்த விளம்பர மாடல் தி.மு.க., அரசு நடத்தி இருக்கிறது. அதற்கு செலவிட்ட தொகையில், ஒரு பள்ளியே கட்டி இருக்கலாம். ஒரு நடிகரை பார்த்து, நடிகர் என விமர்சிக்கும் அமைச்சர்கள், கல்வி நிகழ்வுக்கு நடிகர்களை பயன்படுத்துகின்றனர். ஹிந்து மத நம்பிக்கையை பின்பற்றும் பெண்கள் வளர்ச்சி அடையவில்லை என தமிழக அமைச்சர்கள் பேசுவதை கண்டிக்கிறேன். சில மதங்களில் ஆடை அணிவதில் கூட கட்டுப்பாடு உள்ளது. ஆனால், ஹிந்து மதம் பெண்களுக்கு பல சுதந்திரம் கொடுத்துள்ளது. - தமிழிசை முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,