உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதலீடு விவகாரத்தில் திமுக அரசின் மோசடி: அன்புமணி குற்றச்சாட்டு

முதலீடு விவகாரத்தில் திமுக அரசின் மோசடி: அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை: தொழில் முதலீடு குறித்த திமுக அரசின் அறிவிப்புகளில் 90 சதவீதம் பொய் மூட்டை என்று பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதியளிக்கவில்லை என்று பாக்ஸ்கான் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசு எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.தமிழக முதல்வர் ஸ்டாலினை பாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்திருந்தார்.ஆனால், திமுக அரசு கட்டி எழுப்பிய இந்த பொய் பிம்பங்கள் அனைத்தும் அரை மணி நேரத்தில் நொறுங்கி விட்டன. இது தொடர்பாக பாக்ஸ்கான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' தமிழக முதல்வரை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சந்தித்து பேசியது உண்மை. ஆனால் இந்த சந்திப்பின் போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை; உறுதியளிக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்கள். ஆனால், திமுக அரசின் புளுகு அரை நாளில் அம்பலமாகியிருக்கிறது.தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களை திமுக அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது. திமுக அரசின் இத்தகைய மோசடிகளை ஆதாரங்களுடன் கூடிய ஆவணமாக பாமக விரைவில் வெளியிட்டு அம்பலப்படுத்தும்.இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Raju
அக் 14, 2025 21:57

தினமலருக்கு ஒரு அன்பு வேண்டுகோள் கூகுள் நிறுவனம் 1.2 லட்சம் கோடி முதலீட்டில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தகவல் மையம் அமைக்க உள்ளது. இதை சுந்தர் பிச்சை அவர்களே உறுதி செய்துவிட்டார். ஆஹ இதை போன்று எத்தனை வெளிநாட்டு முதலீடுகளை ஆந்திரம் பெற்றுள்ளது? அவைகளை ஈர்க்க சந்திரபாபு நாயுடு அவர்கள் எத்தனை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்? போன்ற தகவல்களையும், நமது மாநில முதல்வர் கடந்த 4.5 ஆண்டுகளில் எந்தெந்த நாடுகளுக்கு அவரும், குடும்ப உறுப்பினர்கள் உட்பட முதலீடு ஈர்க்க பயணம் செய்தார், அதன் மூலம் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு முதலீடு உண்மையாகவே வந்துள்ளது? போன்ற தகவல்களை ஒரு ஒப்பீடு செய்தியாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்.


புதிய வீடியோ