உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் செல்வாக்கை தி.மு.க., இழந்துவிட்டது: இ.பி.எஸ்.,

மக்கள் செல்வாக்கை தி.மு.க., இழந்துவிட்டது: இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: '' மக்களின் செல்வாக்கை தி.மு.க., இழந்துவிட்டது. இதனால் தான் விடுபட்ட மகளிருக்கும், விதிகளை தளர்த்தி மாதம் ரூ. ஆயிரம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டினார்.மக்களை பாதுகாத்தோம்கடலூரில் நடந்த பேரணியில் அவர் பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் பெண் தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட விலையில்லா ஆடு, கோழி, கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தை தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் நிறுத்திவிட்டது. பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் நிறுத்திவிட்டது. எங்கள் மீது கோபம் இருந்தால், எங்களுடன் பேசுங்கள். ஏழை மக்களின் திட்டங்களை ஏன் நிறுத்தினீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதனை வழங்குவோம். ஏழைகள், மக்கள் பாதிக்கும் போது ஓடோடி வந்த அரசாக அதிமுக அரசு இருந்தது.எதிர்ப்பு காரணம்பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக ஸ்டாலின் கூறுகிறார். தேர்தல் நேரத்தில் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என சொல்லி ஆட்சிக்கு திமுக வந்தது. ஆனால், 28 மாதங்கள் வழங்கப்படவில்லை. பெண்களிடம் எதிர்ப்பு வரும் என்பதாலும், அதிமுக தொடர்ந்து வற்புறுத்தியதால் ஆயிரம் ரூபாயை ஸ்டாலின் கொடுத்தார். பெண்கள் மீது இரக்கப்பட்டு கொடுக்கவில்லை. தற்போது விடுபட்டவர்களுக்கு, விதிகளை தளர்த்தி, 30 லட்சம் பெண்களுக்கு ரூ. ஆயிரம் கொடுப்பதாக அறிவித்துள்ளார். தி.மு.க., மக்களிடம் செல்வாக்கு இழந்துவிட்டது. எட்டு மாதத்தில் தேர்தல் வருகிறது. தற்போது 52 மாதங்கள் பிறகு, மாதம் ஆயிரம் வழங்குவோம் நிதி வழங்குவோம் என்று சொல்கிறீர்களே ?இது நியாயமா, மக்களை ஏமாற்றுவது இல்லையா? தேர்தலுக்காக முன்கூட்டியே மாதந்தோறும் நிதி கொடுத்து தந்திரமாக ஓட்டு பெற உள்ளனர். உஷாராக இருக்க வேண்டும்.சூப்பர் முதல்வர்கடன் வாங்குவதில் ஸ்டாலின் சூப்பர் முதல்வராக உள்ளார். ஆயிரம் ரூபாய் தொகையை கூட அரசின் வருமானத்தை அதிகரித்து கொடுக்கவில்லை. கடன் வாங்கி தான் கொடுத்துள்ளார். இந்தக் கடன் உங்கள் மீது தான் வந்து விழும். ஸ்டாலினுக்கு வருவதற்கு முன்பு, காங்., திமுக,அதிமுக ஆட்சி மாறி மாறி நடந்தது. 2021ம் ஆண்டு 5 .18 லட்சம் கோடி கடன் இருந்தது. ஸ்டாலின் 4 ஆண்டுகளல் 4.38 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளார். 2025 -2026 சட்டசபை தேர்தலுக்குள் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. இதற்காகவா ஆட்சி கொடுத்தனர். பிறக்கும் குழந்தை மீதும் 1.5 லட்சம் கடன் உள்ளது. கடன் மேல் கடன் வாங்கி மக்களை தத்தளிக்கவிட்ட அரசு திமுக., அரசு. இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

pmsamy
ஜூலை 13, 2025 09:01

அதிமுக ஏற்கனவே பாஜகவுடன் சேர்ந்து படுதோல்வி சந்தித்தது. இப்பொழுது மறுபடியும் கூட்டணி பாஜகவுடன் சேர்வதற்கு காரணம் தோல்விக்கு பாஜக கூட்டணி தான் என்று சொல்லிவிடுவான் இ பி எஸ்


முருகன்
ஜூலை 12, 2025 22:53

இதை சொல்வது ஒவ்வொரு தேர்தலில் படுதோல்வி அடைந்தவர்


Oviya Vijay
ஜூலை 12, 2025 22:19

அதிமுக வென்றதெல்லாம் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை மட்டுமே... பின் அவரது மறைவிற்கு பிறகான மீதமுள்ள ஆட்சிக் காலத்தைத் தான் ஓபிஸ் மற்றும் இபிஎஸ் பகிர்ந்து கொண்டனர்... 2021 சட்டமன்ற தேர்தலில் கூட முழுமையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியவில்லை... அதோடு முடிந்தது அதிமுகவின் வெற்றிச் சரித்திரம்... இனி ஆட்சியில் அமர்வதாக கனவு கூடக் காணாதீர்கள்... அரசியலில் இருந்து ஒதுங்கி வாழ்க்கையில் வியர்வை சிந்த உழைக்க பழகுங்கள். மனதில் நிம்மதியாவது கிட்டும். இதுவரை கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தை மக்களுக்காக செலவழித்து கடைசிக் காலத்தில் புண்ணியமாவது தேடுங்கள்... கொண்டு செல்லக் காத்திருக்கும் காலனுக்குத் தெரியாது பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம்... மரணிக்கையில் அனைவருமே சமம் தானேயன்றி வேறுபாடு எதுவும் இல்லை... தரையில் கிடக்கப்போவது சலனமற்ற உடல்... அவ்வளவே... ஆகையால் இதுவரை நீங்களிருந்த நோகாமல் நொங்கு தின்னும் வாழ்க்கையிலிருந்து வெளியேறுங்கள்... உங்களுக்காக யாருமிங்கே காத்திருக்கவில்லை...


தமிழரசன்,விழுப்புரம்
ஜூலை 12, 2025 22:46

இதே வார்த்தையை ஸ்டாலினுக்கும் சொல்லியிருந்தால் நீங்க யோக்கியன் என்று கூறலா. அப்பத்துக்கு மதம் மாறிய உமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?


Oviya Vijay
ஜூலை 13, 2025 00:42

உன்னைப் போன்ற சங்கிகளுக்குத் தெரிவதில்லை மத நல்லிணக்கம் என்றால் என்னவென்று. மதுரையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் திருமலை நாயக்கர் மகால் அருகிலிருக்கும் புகழ்பெற்ற சர்ச் இருக்கும் பள்ளியில் பயின்ற எனக்கு அனைத்து மத நண்பர்களும் உண்டு. எங்கள் நட்பில் என்றைக்கும் மத பாகுபாடு என்பது இருந்தது கிடையாது... பண்டிகை என்பதே குதூகலத்திற்குத் தானே... ஆகையால் அனைத்துப் பண்டிகைகளையும் கொண்டாடுவோம்... ஒருவர் பிறக்கும் போது அவர் எந்த மதமோ அதிலிருந்து மாறுவதில் எனக்கு என்றைக்குமே உடன்பாடு இருந்ததில்லை... அது நம் தாய் தந்தையர் நமக்குக் கொடுக்கும் அடையாளம். அதற்காக நம் மதத்தை உயர்த்திக் காட்டுவதற்கு மற்ற மதங்களை தாழ்த்துவதிலோ இல்லையேல் சீண்டிக் கொண்டிருப்பதிலோ ஒரு பயனும் இல்லை... நான் பிறந்த ஹிந்து மதத்திலிருந்து என்றைக்கும் எந்த மதத்திற்கும் மாறி விட மாட்டேன்...


vivek
ஜூலை 13, 2025 05:39

இவர் முன்பு வைகுண்டேஷ்வர் என்ற போலி பேரில் கருத்து போட்டு கொண்டு இருந்தார்....இப்போது ஓவியம் என்ற புது அவதாரம்


vivek
ஜூலை 13, 2025 05:42

ஏல நீ அந்த போலி வைகுண்டம் தானே....அதே சாயலில் கருத்து போடுகிறாய்


K.n. Dhasarathan
ஜூலை 12, 2025 21:08

பாவம் எடப்பாடி தோல்வி பயத்தில் இப்போதே பிதற்ற ஆரம்பித்துவிட்டார் , தன் வாயாலே தானே கெடுகிறார். யார் எழுதிக்கொடுத்தாலும் ஒரு தடவை சரி பார்க்க வேணாமா ?


G Mahalingam
ஜூலை 12, 2025 21:26

கேடுகெட்ட திமுக ஆட்சியை மீண்டும் வரவிடாமல் தடுக்க வேண்டும்.


Natchimuthu Chithiraisamy
ஜூலை 12, 2025 20:02

நான்கு வருட எடப்பாடி ஆட்சி காலம் செல்வாக்கான காலம் ஆனால் திமுக வென்றது. மக்கள் செல்வாக்கு திமுக பெற்றது என்று இவர் கூறக்கூடாது. MGR போல் திமுக மக்கள் செல்வாக்கு எப்போதும் பெற்றதில்லை. எதிரி வலுவிழந்த நேரம் பார்த்து ஒவ்வொரு தடவையும் திமுக வென்று இருக்கிறது என்பதை மக்கள் நன்கு அறிவர்.


Ramesh Sargam
ஜூலை 12, 2025 19:47

மக்கள் செல்வாக்கை இழந்தாலும், தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு ஏதாவது இலவசங்கள் அறிவித்து அவர்களின் செல்லும் வாக்குகளை அள்ளிவிடும் இந்த திமுக.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை