உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக.,வுக்கு எதிரிகள் எக்கச்சக்கம்: கூட்டணி குஷாலா இருக்காது: போட்டுடைத்தார் கே.என்.நேரு

திமுக.,வுக்கு எதிரிகள் எக்கச்சக்கம்: கூட்டணி குஷாலா இருக்காது: போட்டுடைத்தார் கே.என்.நேரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: ''திமுக.,விற்கு தற்போது எதிரிகள் அதிகம் உள்ளனர்; லோக்சபா தேர்தலை போன்று, சட்டசபை தேர்தல் கூட்டணி சுமூகமாக அமையும் சூழல் இல்லை'' என அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கூட்டணிக் கட்சிகள் பிரிந்து செல்லாத வகையில் கூட்டணியை பலமாக கட்டிக்காப்பாற்றி வருகின்றனர். அதன் வெளிப்பாடாக உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை தேடித்தந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக.,வின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்து வருகின்றன. இதனால் கூட்டணிக்குள் பிரிவு ஏற்படும் சூழல் இருந்தாலும், அதனை திமுக தலைமை சமாளித்து வந்தது.இந்த நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடியில் திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: லோக்சபா தேர்தலை போன்று, சட்டசபை தேர்தல் கூட்டணி சுமூகமாக அமையும் சூழல் இல்லை. திமுக.,விற்கு தற்போது எதிரிகள் அதிகம் உள்ளனர். ஒருபுறம் சீமான் குறைசொல்லிக் கொண்டிருக்கிறார்; புதிதாக கட்சி துவங்கிய ஒருவர் நமக்கு எதிராக இருக்கிறார். எவ்வளவோ நன்மைகள் செய்தாலும் பாமக நம்மைப் பற்றி குறை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு பேசியுள்ளார். நடிகர் விஜய் புதிதாக கட்சி துவங்கியுள்ளதால் திமுக.,விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேபோல், லோக்சபா தேர்தலில் குறிப்பிட்ட ஓட்டு சதவீதத்துடன் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மாறியுள்ள சீமானின் நாம் தமிழர் கட்சியும் திமுக.,விற்கு எதிராக நிற்பதால், சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு கடினமாகவே இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் விதமாகவே நேருவின் பேச்சு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mani . V
செப் 04, 2024 06:16

நேரு, துரைமுருகன், ஆர். எஸ். பாரதி, ஆ. ராசா,.......


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 03, 2024 17:24

சுழல் முறைப்படி அடுத்த தேர்தலில் பாமக திமுகவுடந்தான் கூட்டணி வைக்க வேண்டி இருக்கும். அதனால் பாமக எதிர்ப்பு என்பது பூஜ்யம். கடந்த சில தேர்தல்களாக அதிமுகவுடன் கூட்டு பொரியல் செய்து சாப்பிட்டு மவனுக்கு நோகாமல் ராஜ்ய சபையில் இடம் பிடித்தாகிவிட்டது. அடுத்த முயற்சியில் அன்னை சௌமியாவுக்கு இணை அமைச்சராகவாவது இடம் பிடித்துவிடலாம் என்ற ஆசையில் தர்மபுரியில் முட்டியது வீணாகிவிட்டது. எனவே இனி மீதம் இருப்பது திமுக மட்டுமே.


தத்வமசி
செப் 03, 2024 15:02

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்பார்கள். அப்படித்தான் கூட்டணிக் கட்சியும், ஆளும்கட்சியும்.


RAMAKRISHNAN NATESAN
செப் 03, 2024 13:40

தவறில்லை ....... உண்மையைப் பேசியுள்ளார் ....... "திமுக வாழ நாம் உதவுகிறோம் .... ஆனால் நமக்கு திமுகவால் பயனில்லை" என்று காங்கிரஸ் சிந்திக்க ஆரம்பித்துவிட்டது .......


ராமகிருஷ்ணன்
செப் 03, 2024 13:02

திமுகவுக்கு எதிரிகள் எக்கச்சக்கம், அவர்களின் ஆட்சியில் சுருட்டுவதும் எக்கச்சக்கமாக இருக்குதே. அமெரிக்க போயி விளம்பர படம் எடுத்து கிட்டு இருக்காங்க, கேவலமாக இருக்கிறது


xyzabc
செப் 03, 2024 12:29

உங்கள் பயன் எப்படியோ எம் பி ஆகி விட்டான் .சும்மா இரு ம்


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 03, 2024 11:25

பாமக குறை சொல்வதை பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அன்னை சௌமியாவுக்கு அமைச்சர் பதவிக்கு உத்தரவாதம் அளித்தால் நாளை முதல், இன்று மாலை முதலே திராவிட மாடலை புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். தோண்டர்களும் அரசு கழக டாஸ்மாக் கடைகளில் அணிவகுத்து நிற்பார்கள்.


முக்கிய வீடியோ