உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.கோவையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: தி.மு.க.,போல் அல்லாமல் தேர்தல் வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம். தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் இருக்கும் மாவட்டம் கோவை. கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தை திறக்க வலியுறுத்துவோம். கோவையில் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hu5ee5q4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கொரோனா தொற்றில் நாம் மாட்டியும் கூட, நம்ம சொன்ன டார்க்கெட்டை நோக்கி போய் கொண்டு இருக்கிறோம். சமீபத்தில், உலகின் 4வது பெரிய பொருளாதார நாடாக மாறி இருக்கிறோம். வேகமாக வளரும் பொருளாதார நாடாக இருக்கிறோம். மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு முடக்க பார்க்கிறது.

அதிக தொகுதிகள்

தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ கூட நிறைவேற்றவில்லை. பெட்ரோல் விலை உயர்வில் மத்திய அரசின் பங்கு ஏதும் இல்லை. தமிழகம் கொடுத்த ஒவ்வொரு பணத்துக்கும் மத்திய அரசு திரும்ப கொடுத்துள்ளது. பா.ஜ., அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது எனது விருப்பம்.

அரசியல் மாற்றம்

நான் பா.ஜ., தொண்டன். உயிர் இருக்கும் வரைக்கு இந்த கட்சியின் வளர்ச்சிக்காக மட்டும் நான் இருப்பேன். மற்ற கட்சியின் வளர்ச்சிக்காக நான் இல்லை. தொண்டனாக கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன். சில இடங்களில் எங்கே வாயை மூடி கொண்டு இருக்க வேண்டுமோ, அங்கே மூடி கொண்டு இருக்கிறேன். உறுதியாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்க வேண்டும்.

கூட்டணி 2 வகை!

கூட்டணிக்கு எண்ணிக்கையை விட எண்ணம் முக்கியம். கூட்டணி இரண்டு. பொருந்தும் கூட்டணி. பொருந்தா கூட்டணி என இரண்டு வகை இருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி பொருந்துகிற கூட்டணியாக வரும் காலத்தில் மாறும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ManiK
ஜூன் 13, 2025 09:00

அண்ணாமவை போல தைரியமான படித்த நபர்கள் தான் நமக்கு வேண்டும். திமுக அரசின் கீழ் போலிஸ் என்பது போலி ஆகிவிட்டதை தான் அவர் தெளிவாக சொல்கிறார். சாதாரண மக்களின் ஆதங்கமும் அதே தான்.


புரொடஸ்டர்
ஜூன் 13, 2025 08:57

எத்தனை வாக்குறுதிகளை பதினோரு ஆண்டுகள் மத்திய அரசு ஆட்சி செய்யும் பாஜக நிறைவேற்றியுள்ளது அண்ணாமலை?


pmsamy
ஜூன் 13, 2025 07:52

அண்ணாமலை விமானம் மற்றும் ரயில் விபத்துகளுக்கு அரசாங்கமும் பொறுப்பு என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசாத


Mario
ஜூன் 12, 2025 23:12

அந்த 15 லட்சம் மாதிரி....அது சரி பாவம் முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க


m.arunachalam
ஜூன் 12, 2025 21:26

குறை மட்டுமே சொல்லாமல் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று சொல்லுங்கள். ஏறக்குறைய 8 கோடி மக்கள் தொகை மாநிலம். அதை நிர்வகிப்பது அவ்வளவு எளிதா? . நீங்கள் கொஞ்சம் நம் மக்களின் மன நிலையையும் உணர்ந்து பேச வேண்டும். தெளிதல் நலம்.


ராஜா
ஜூன் 12, 2025 20:30

அண்ணா நீங்க எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி சொல்லுங்க அண்ணா,எப்பவுமே அடுத்தவனை குறை சொல்லி அரசியல் செய்வது நல்லது இல்லை அண்ணா, அவ்ளோ பெரிய மலை மற்ற மாநிலங்கள் எல்லாம் நல்லா இருக்குனு சொல்லுங்க வடக்கன் எப்பவுமே ப்ராடு தான்


K.n. Dhasarathan
ஜூன் 12, 2025 17:43

அண்ணாமலை நானும் பார்க்கிறேன் எப்போதாவது உண்மை பேசுவீர்கள் என்று, ஆனால் ஒருபோதும் உண்மை பெச மாட்டேன், வாயை திறந்தாலே பொய் மூட்டைகள்தான், பொய் பேச வில்லை என்றால் தலை வெடித்துவிடுமா ? உங்கள் கட்சி தலைமை முதல் கடைக்கோடி வரை பொய்கள் அள்ளிவிடுவதால் பாவம் தான் சேரும், இதற்க்கு தண்டனை அனுபவிப்பீர்கள். கல்வி தொகை கொடுக்காமல் ஏழை மாணவர்களை ஏமாற்றியது யார் ? கட்டாய கல்வி க்கு ஒன்றிய அரசு நிதி கொடுக்காமல் மாநிலா அரசு தன தொகையை கொடுப்பது மூன்று வருடங்களாக தொடர்கிறதே. கண்ணுக்கு தெரியவில்லையா ? படிக்க விடாமல் செய்யும் பாவம் உங்கள் யாரையும் சும்மா விடாது. கோர்ட்டுக்கு இப்போ போயி, சென்னை ஹைகோர்ட் உத்தரவு போட்டாச்சு நிதி கொடுக்க சொல்லி இப்படி கோர்ட்லே குட்டு வாங்குவது வெட்கமாயில்லையா ?


vivek
ஜூன் 12, 2025 18:41

தசரத மகாராஜா சொம்பு....வெட்கமில்லாமல் கருத்து போடாதீங்க


ஜெகதீஸ்வரன் தண்டபானி
ஜூன் 12, 2025 16:01

காஷ்மீர் ஆர்டிகிள் 370, அயோத்தி ராமர் கோவில், வக்ப் பில், முஸ்லீம் ட்ரிபிள் தலாக் இது போதும் எங்களுக்கு?


Nallavan
ஜூன் 12, 2025 15:29

ப ஜ க வும் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை


துர்வேஷ் சகாதேவன்
ஜூன் 12, 2025 20:59

என்ன 15 L உங்களுக்கு வரவில்லையா


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 12, 2025 15:27

இதுக்கெல்லாம் கழக தொண்டர்கள் , தலைவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் ...பொத்தாம் பொதுவாக அணைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக ஜல்லியடிப்பார்கள் . நீட் விலக்கு என்னச்சு என்று கேளுங்கள் .. கோபாலா பீச்சுக்கோ என்று பிச்சுக்குவார்கள் ..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை