உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணி ஒற்றுமையை உறுதி செய்ய பொதுக்கூட்டம் நடத்துகிறது தி.மு.க.,

கூட்டணி ஒற்றுமையை உறுதி செய்ய பொதுக்கூட்டம் நடத்துகிறது தி.மு.க.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கூட்டணியில் எந்த உரசலும் இல்லை என்பதை வெளிப்படுத்த, மாவட்ட வாரியாக, கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் நடத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கூட்டம், வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் நடக்கிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடும், அக்கட்சி தலைவர் திருமாவளவன், அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுத்த விவகாரமும், தி.மு.க., கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திருமாவளவனை அழைத்துப் பேசி, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர், அந்த சூட்டோடு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டத்தையும் அறிவித்து உள்ளார்.சென்னை அறிவாலயத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த மாவட்டம்தோறும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, கூட்டணி கட்சி தலைவர்கள் 20 பேரும் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம், வரும் 28ல் காஞ்சிபுரத்தில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க., அறிவிப்பு

தி.மு.க., பவள விழாவை ஒட்டி, கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம், வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் நடக்கவுள்ளது. அமைச்சர் துரைமுருகன் தலைமை வகிப்பார். முதல்வர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுவார்.கி.வீரமணி, செல்வப்பெருந்தகை, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர்மொய்தீன், திருமாவளவன், கமல், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன், ஸ்ரீதர் வாண்டையார், பொன்.குமார், எர்ணாவூர் நாராயணன், முருகவேல்ராஜன், தமீமுன் அன்சாரி, கருணாஸ், அதியமான், திருப்பூர் அல்தாப், அம்மாவாசி ஆகியோர் வாழ்த்துரை வழங்குவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Barakat Ali
செப் 19, 2024 13:50

இஸ்லாத் வெறுக்கும் ஹராம் ஆகிய போதைப்பழக்கத்தை தமிழகம் ஊக்குவிப்பது ஏன் ?? அதை இஸ்லாமியர்களும் கண்டுகொள்ளாதது ஏன் ??


Duruvesan
செப் 19, 2024 12:21

பாஸ் மொத்த ஓட்டு சதவீதம் 70%. தீயமுக 27%, கொங்கிரஸ் 7%, கமீஸ் விசிக இன்னும் லெட்டர் பேடு எல்லாம் 4%. மொத்தம் 38%. அதிமுக விஜி சார் கட்சி கூட்டணி 18%,சீமான் 8%, பிஜேபிக்கு 6%. இங்க கருத்து எழுதுபன் எல்லாம் காசு குவாட்டர் பிரியாணி வாங்கிட்டு விடியலுக்கு தான் ஓட்டு போடுவானுங்க. இப்போ தேர்தல் நடந்தால் தீயமுக கூட்டணி 234 சீட் ஜெயிக்கும்


Loganathan Balakrishnan
செப் 19, 2024 10:58

இங்க கருத்துக்கள் எல்லாம் தி மு கவுக்கு எதிராக இருக்கு ஆனா தேர்தலில் வெற்றி பெறுவது அவர்கள் தான் இதே மாதிரி தான் mp தேர்தல் முன்னாடியும் கருத்துக்கள் வந்தன ஆனால் வெற்றி பெற்றது அவர்கள் தானே


ஆரூர் ரங்
செப் 19, 2024 10:35

கூட்டத்திற்கு வருக வருக. திரும்பச் செல்லும் போது தாம்பூலம் ஸ்வீட் பாக்ஸ் உண்டு. கூட்டத்தில் தப்பித்தவறி மினிஸ்டர் போஸ்ட் கேட்டா பின்னாடியே வீட்டுக்கு ஆட்டோ.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 19, 2024 10:10

தேர்தலுக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் இப்பொழுதே கூட்டணி ஒற்றுமையை எப்படி இறுதி / உறுதி செய்ய முடியும் ????? வரப்போகும் இரண்டு ஆண்டுகளில் திமுகவுக்கு ஆதாயமான சம்பவங்களும் நடக்கலாம் .... விரயமான சம்பவங்களும் நடக்கலாம் .....


Sundar R
செப் 19, 2024 09:43

கூட்டணி கட்சியினர் ஸ்டாலினை காலணாவுக்கு மதிப்பதில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. ஸ்டாலின் வீட்டில் யாராவது வயதானவர் இறந்து போனால், ஸ்டாலின் கூட்டணி கட்சியினர் வீட்டுக்கு கார்களை அனுப்பி தன் வீட்டிற்கு வரவழைப்பது போல் இச்செயல் இருக்கிறது


Venkateswaran Rajaram
செப் 19, 2024 09:30

இவர்கள் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று துளி கூட எண்ணம் இல்லை ,எப்படியாவது வோட்டு வாங்கி ஆட்சியை பிடித்து கூட்டாக கொள்ளை அடிக்க வேண்டும்


sankaranarayanan
செப் 19, 2024 09:26

இப்படியே தினந்தோறும் மாவட்டம் கிராமம் தோறும் கூட்டங்கள் நடத்திக்கொண்டு செல்லுங்கள் மக்களுடைய தேவைகள் எதுவுமே பூர்த்தி செய்ய வில்லை எந்த அபிவிருத்திகளையம் செய்வது கிடையாது சாலைகள் பராமரிப்பு மழை வெள்ளம் வடிகால் புனரமைப்பு மேலும் மக்களும் அன்றாட தேவைகளை எதுவுமே பூர்த்தி செய்யாமல் கூட்டம் போட்டுக்கிண்டே செல்லுங்கள்


Barakat Ali
செப் 19, 2024 14:38

அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றவில்லை என்று மக்கள் கோபித்துக்கொண்டு தேர்தலைப் புறக்கணிக்கவா போகிறார்கள் ?? தேர்தல் வரும்போது மக்கள் எதிர்பார்ப்பதைக் கொடுத்துவிட்டால் ??


வைகுண்டேஸ்வரன்
செப் 19, 2024 09:21

பரிதாபமான கருத்துக்கள். நன்றி. காலையில் சிரிக்க வைப்பதற்கு. ஒவ்வொரு கூட்டணித் தலைவரும், கூட்டணி யை உறுதியாக வைத்திருக்கத்தான் முயற்சி செய்வார். அது தான் அரசியல் தலைவர்களின் வேலை, திறமை. ஒருவர் வீட்டில் விசேஷம் என்றால் ஏன் தெரிந்தவர்களை வீட்டுக்கு அழைக்கிறார்? உறவு விட்டுப் போகக்கூடாது என்றும், அவர்களின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கேட்பதற்குத் தானே? திமுக வில் விசேஷம். தெரிந்தவர்களை அழைத்து அவர்களின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் கேட்கிறார்.


Barakat Ali
செப் 19, 2024 14:34

பாஜகவின் என் டி ஏ கூட்டணி, பாஜக வின் உட்கட்சி விவகாரம் .. இவற்றையெல்லாம் நாம் விமர்சிப்பது மட்டும் சரியா ?


karthik
செப் 19, 2024 08:32

ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது இந்த த்ரவிட கும்பல்களுக்கு சரியாக பொருந்தும். திராவிட கும்பல் வேண்டாம் என்று நினைப்பவர்கள் தான் தமிழ் நாட்டில் அதிகம் ஆனால் அவர்கள் எல்லாம் 4 5 கட்சியாக பிரிந்து கிடக்கிறார்கள்.. திராவிட கும்பலுக்கு கிறிஸ்துவ முஸ்லீம் மற்றும் தெலுங்கு மலையாள மாற்றும் கொஞ்சம் தமிழ் அடிமை கூட்டத்தை எப்படி ஒன்று சேர்த்து தேவையான ஒட்டு வாங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தெளிவாக தெரியும்


புதிய வீடியோ