உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களை கொச்சைப்படுத்தும் தி.மு.க.,: எச்.ராஜா குற்றச்சாட்டு

மக்களை கொச்சைப்படுத்தும் தி.மு.க.,: எச்.ராஜா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: “அனைத்து வகையிலும், தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில், தி.மு.க., தலைவரும், நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர்,” என, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ், தற்போது அரசியலில் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, 2014ல் ஆட்சி பொறுப்பேற்ற பின், பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த பாரதம், தற்போது உலக அளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தற்போது ஐ.எம்.எப்., போன்ற சர்வதேச நிதியங்கள், பாரதம் விரைவில் மூன்றாவது இடத்திற்கு வரும் எனக் கூறுகின்றன. விஜய்க்கு, கீழ்மட்ட அளவில் கட்டமைப்பு இல்லை. கட்டமைப்பை உருவாக்கும் முயற்சி இருப்பதாகவும் தெரியவில்லை.அனைத்து வகையிலும், தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் வகையில், தி.மு.க., தலைவரும், அதன் நிர்வாகிகளும் செயல்பட்டு வருகின்றனர். அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'எஸ்.சி., தானே' என ஜாதியை குறிப்பிட்டு பேசுகிறார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., மனு கொடுக்க சென்ற பெண்ணின் மனுவை வாங்கியவரை, தலையில் அடிக்கிறார். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

தஞ்சை மன்னர்
நவ 25, 2024 17:41

நாம கேட்கத கேள்விய உச்ச நீதிமன்றத்தை பற்றி


அசோகன்
நவ 25, 2024 11:55

பாகிஸ்தான் இலங்கை ஆப்கானிஸ்தான் எல்லாம் இந்தியாவிடம் இருந்து கோதுமையை கெஞ்சி பெற்ற அந்த நாடுகளில் பஞ்சம் பட்டினியே இல்லை ஆனால் அந்த நாடுகளுக்கு அதுவும் மனிதாபிமானம் அடிப்படையில் இலவசமாக கொடுத்த இந்தியா பஞ்சத்தில் உள்ளதா?? நீங்களே ஒரு பார்ட்டிக்கு காசுக்கொடுத்து அதை அமெரிக்காவில் வெளியீடுவீர்கள்... அது தெரியாமல் இங்கே இந்திய மக்கள் இருப்பார்கள்.... போ போய் ஏதாவது புதுசா ட்ரை பண்ணு ???


MADHAVAN
நவ 25, 2024 10:48

நுணலும் தன்வயால் கெடும், பிஜேபி இவரால் கெடும்,


pmsamy
நவ 25, 2024 10:40

எச் ராஜாவுக்கு அடுத்தவங்கள குறை சொல்ல தான் தெரியும் ஏன்னா அவன் கட்சியில நல்ல விஷயம் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல


Sundar R
நவ 25, 2024 10:12

தமிழகத்திற்கு கவர்னர் ஆட்சி தான் நல்லது. தகப்பன், மகன், மருமகன் இவர்கள் ஆட்சியில் மக்கள் பணம் குடும்பக் கருவூலத்திற்கு போகிறது. பல லட்சம் கோடி ரூபாய்க்கு கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்துகின்றனர். பாஜக அரசு இதனை தட்டி கேட்பதில்லை. இந்த ஆட்சியை தட்டியும் வைப்பதில்லை. மக்களுக்கு பாஜக மீது ஐயம் வராதிருக்க வாரிசு அரசியல் ஆட்சியை உடனே டிஸ்மிஸ் பண்ணிவிட்டு கவர்னர் ஆட்சி வருவதுதான் நல்லது.


தஞ்சை மன்னர்
நவ 25, 2024 18:07

ஆதாரம் இருந்தால் பி சே பி மாநில தலைமை அலுவலகத்திர்ற்கு அனுப்பவும் அவர்கள் கிழித்து விடுவார்கள் அவர்களே ஏதும் செய்யமுடியாத இடத்தில தானே வாங்குவதை வாங்கிக்கொண்டு பொத்தி கொண்டு இருக்கின்றனர்


Oviya Vijay
நவ 25, 2024 09:44

சொந்த கருத்தை எழுதாமல் மற்றவர்கள் கருத்துக்களின் மீது மட்டும் தன்னுடைய வன்மத்தை காட்டி நொடிக்கொரு முறை தான் ஒரு மட சாம்பிராணி என்பதை இங்கே நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் தர்மவான்... சுயமாக சிந்தித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். மற்றவர் கருத்துக்கள் மீது உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை விடுத்து உங்கள் சொந்தக் கருத்தை பதிவிடுங்கள். உங்கள் மண்டையில் ஒரு சரக்கும் இல்லை என்பதை குறுக்கே மறுக்கே ஓடி வந்து வெளிப்படுத்தாதீர்கள். அனைவருக்கும் அவரவர் கருத்துக்களை சொல்ல இங்கே உரிமை உண்டு. நீங்கள் எதிர்பார்ப்பதைத் தான் மற்றவர்களும் தங்கள் கருத்தாக தெரிவிக்க வேண்டுமென எந்த அவசியமும் இல்லை.


Barakat Ali
நவ 25, 2024 09:36

மக்களை ஓசி ஓசி என்று கொச்சைப் படுத்துபவர்களைத் தானே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் ????


AMLA ASOKAN
நவ 25, 2024 09:13

பொருளாதாரத்தில் 3 வது இடத்திற்கு வரக்கூடிய இந்தியா பசிப்பிணியால் வாடுவோர் பட்டியலில் 105/117 இடத்தில் உள்ளது என்பதை ராஜா உணர்ச்சிவசப்பட்டதில் மறந்து விட்டார் .


கண்ணன்,மேலூர்
நவ 25, 2024 09:47

ஆமா அசோகா நம் நாடு பசி பட்டினியில் பங்ளாதேஷ்க்கு பின்னால் இருக்கிறோம். ஏன் மதம் மாறிட்டாலே மோடி எதிர்ப்பு என்பது இந்திய எதிர்ப்பாக மாறி விடுமா?


ஆரூர் ரங்
நவ 25, 2024 10:56

சமீபத்தில் மேற்கு வங்க இளைஞர்கள் சென்னையில் பட்டினியால் இறந்தனர். அதற்கு காரணம் ஸ்டாலினா மமதாவா?


கிஜன்
நவ 25, 2024 08:56

தமிழகத்தில்.. நான்காவது வர்ணத்திற்கு கீழ் தான் மற்ற மூன்று வர்ணங்களும்.. என்ற நிலையை ஏற்படுத்தியது நீதிக்கட்சியும் ....திராவிட முன்னேற்ற கழகமும் தான் .... மக்கள் அந்த நன்றியை மறக்கவில்லை ...


ஆரூர் ரங்
நவ 25, 2024 10:59

அதாவது வன்கொடுமை, ஆணவக் கொலைகளில். ஈடுபடும் சமூகங்கள் மற்றவர்களை ஆட்டி வைக்கின்றன. வர்ணத்துக்கும் நவீன சாதி முறைக்கும் வேறுபாடு தெரியாதா?


Barakat Ali
நவ 25, 2024 08:53

வாங்கின ஓட்டுக்கு காசு கொடுத்தாச்சு. கொலுசு கொடுத்தாச்சு ..... சரக்கும் கொடுத்தாச்சு ..... முடிஞ்சுது டீலு ......


சமீபத்திய செய்தி