உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாகரிகம் இல்லாத கட்சி தி.மு.க.,: சீமான் சாடல்

நாகரிகம் இல்லாத கட்சி தி.மு.க.,: சீமான் சாடல்

சென்னை: ‛‛நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்று கொடுப்பதற்கும், அடுத்தவர்களுக்கு போதிக்கும் தகுதியும், நேர்மையும் தி.மு.க.,விற்கு இல்லை'' என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: அந்த பாட்டுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த பாட்டை பாடி இசையமைத்து வெளியிட்டது அதிமுக. ஜெயலலிதா இருக்கும் போது அதிமுக மேடைகளில் அந்த பாட்டு ஒலிபரப்பப்பட்டது. அன்றைக்கு தி.மு.க.,வினருக்கு எந்த வருத்தமோ, கோபமோ, இழிவோ ஏதும் தெரியவில்லை. அதை நாங்கள் திருப்பி பாடும் போது கோபம் வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vgrlw2py&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவதூறு பேசுவது, அசிங்கமான அரசியல் பேசுவது இவற்றின் ஆதித்தாய் தி.மு.க., தான். ஒவ்வொரு தலைவர்களை பற்றி கருணாநிதி பேசி உள்ளார். கருவாட்டுகாரியின் சீமந்தபுத்திரர், மரமேறி கட்டபீடி என விமர்சித்துள்ளார். இழிவாக பேசுவதற்கு தி.மு.க., ஆட்களை வைத்துள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் மாற்று கட்சி பெண்களை இழிவாக பேசுகின்றனர். நாகரிக அரசியல், கண்ணிய அரசியல் கற்று கொடுப்பதற்கும், அடுத்தவர்களுக்கு போதிக்கும் தகுதியும், நேர்மையும் தி.மு.க.,விற்கு இல்லை.சண்டாளன் என்ற சமூகம் இருப்பது எங்களுக்கு தெரியாது. சண்டாளன் என கிராமங்களில் இயல்பாக பேசுவர். சினிமா படங்களில் பாடல்கள் வந்துள்ளன.சங்க இலக்கியங்கள், மந்திரங்கள், கந்த சஷ்டியில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு உள்ளது.சண்டாளன் என்ற வார்த்தையை கருணாநிதி அதிகமாக பயன்படுத்தி உள்ளார். படங்களிலும் இந்த வார்த்தையை பயன்படுத்தினார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது, சேதுசமுத்திர திட்டத்தை அதிமுக எதிர்த்ததற்காக, அக்கட்சியை சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தி விமர்சித்தார்.சண்டாளன் என நாங்கள் பாடவில்லை. அதை எழுதி வெளியிட்டது அதிமுக. அப்போது எங்கு சென்றீர்கள். காதில் பஞ்சுவைத்து படுத்து கொண்டீர்களா. இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

M Ramachandran
ஜூலை 13, 2024 19:42

யாருக்கும் இஙகு வெக்கமில்லை. எருமைய்ய மாட்டின் மேலால் மழை பெய்தால் அது அதைய்ய பற்றி எண்ணு அது பாட்ரிக்கு மேதுவாக சென்று கொண்டிருக்கும். சேறு கண்ட இடமும் விருப்பமான இடமாகும்


அப்புசாமி
ஜூலை 13, 2024 18:40

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நீதிநூல்கள் அதிகம். ஆதிகாலத்திலிருந்து தமிழன் நாகரிகமற்றவனாத்தான் இருந்தான் போலிருக்கு. நாகரிகத்தை தொல் இலக்கியங்களில்தான் காண முடியுது.


Bala
ஜூலை 13, 2024 16:37

என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட"


கல்யாணராமன்
ஜூலை 13, 2024 16:23

இந்து என்றால் திருடன் என்று சொன்ன கருணாநிதி அதை நான் சொல்லவில்லை யாரோ ஒருவர் எழுதிய ஒரு புத்தகத்தை காட்டில் யாரோ ஒருவர் எழுதியுள்ளார்அதில் உள்ளதைத்தான் சொன்னேன் என்றார் அதுபோல சீமான் சொல்கிறார் பாடல் யாரோ பாடினார்கள் யாரோ வெளியிட்டார்கள் அதைத்தான் நாங்கள் பாடினோம் என்கிறார்..


Rajesh
ஜூலை 13, 2024 15:50

எல்லாம் நாகரீகத்தை பற்றி பேசுறீங்க .... கொடுமை


sham
ஜூலை 13, 2024 15:17

சீமான் வருவார், சின்ன சகோதரர்களுக்கு முட்டை கொடுப்பார், இது பல ஆண்டுகளாக நடக்கிறது, நடக்கும்..


Godyes
ஜூலை 13, 2024 14:34

அவர் சொன்னதை எதிர்ப்பவர்கள் இல்லை.அவர் காட்டில் மழை. பெய்தது.


கூமூட்டை
ஜூலை 13, 2024 14:14

கூடாரம் திராவிட கட்சிகள் பணம் துட்டு வேண்டும் மக்கள் எப்படி செத்தாலும் பரவலை


ganapathy
ஜூலை 13, 2024 13:44

யோவ் சண்டாளன் என்ற வார்த்தை கந்த ஷஷ்டி கவசத்துல எங்கய்யா இருக்கு? சந்தடி சாக்குல எதாவது உளறி கொளுத்தி போடவேண்டியது. உன்னோட அரசியல உன்னோட வச்சுக்க. ஸனாதன தர்மத்தை இழுத்து இழிவா பேச உனக்கு எந்த அருகதையும் கிடையாது.


மோகனசுந்தரம்
ஜூலை 13, 2024 13:36

உங்களைப் போன்ற ஆட்களால் தான் இந்த சமுதாயம் சீரழிகிறது. திருட்டு திராவிட கட்சிக்கு முட்டா.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை