உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரிவினைவாதத்தை தூண்டுகிறது தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் காட்டம்

பிரிவினைவாதத்தை தூண்டுகிறது தி.மு.க.,: நயினார் நாகேந்திரன் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படவில்லை. பிரிவினை வாதத்தை தூண்டுகிறது தி.மு.க.,'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார்.மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டசபையில் வளாகத்தில் பா.ஜ., எம்.எல்.ஏ.,யும், தமிழக பா.ஜ., தலைவருமான நயினார் நாகேந்திரன் கூறியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qf5fso3w&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படவில்லை. விருப்ப மொழியை தேர்வு செய்து படிக்கலாம். ஏனென்றால், தெலுங்கு, மலையாளம் பேசுவோரும் தமிழகத்தில் உள்ளனர்.பிரிவினைவாதத்தை தூண்டுகிறது தி.மு.க.,. நாடு வல்லரசு நாடாக வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இல்லை.அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என அம்பேத்கர் கூறினார். தனித் தமிழ்நாடு வேண்டும் என்று இவர்கள் நினைக்கின்றனர்; மாநிலங்கள் ஒன்றாக இணைந்தால் தான் நாடு வல்லரசாகும். மாநிலத்திற்கு தனியாக முழு அதிகாரம் கொடுக்க முடியாது. மாநில சுயாட்சி கோரிக்கையை ஏற்க முடியாது வெளிநடப்பு செய்துள்ளோம். தேர்தல் வரும் நேரத்தில் ஏதோவொரு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். பெண்கள் குறித்து அவதூறாக பொன்முடி பேசி கொண்டு இருக்கிறார். இதனை மீடியாக்கள் பெரியதாக காட்டுவதாக தெரியவில்லை. மற்ற விஷயங்கள் ஏதாவது இருந்தால் அடிக்கடி பிரேக்கிங் செய்தி என திரும்ப திரும்ப போடுகிறார்கள். பொன்முடி பேசியது குறித்து அடிக்கடி போட வேண்டும். நம்ம எல்லோருக்கும் தாய் பெண். பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

நச் பதில்

பா.ஜ., சட்டமன்ற தலைவர் மாற்றம் இருக்குமா என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''மாற்றம் இருந்தால் சந்தோஷம் தான். ஒரே ஆளே எல்லா பதவிகளையும் வைத்து கொண்டு இருந்தால் என்ன இருக்கிறது'' என நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Jay
ஏப் 16, 2025 07:27

மாநில ஆட்சிக்கு கீழே வரும் எம்எல்ஏவுக்கோ மேயருக்கோ, உள்ளாட்சித் தலைவர்களுக்கு முழு அதிகாரத்தை திமுக கொடுத்துவிடுமா? நீங்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொடுப்பதில்லை பிறகு ஏன் அதிகாரத்தை மேலே கேட்கிறீர்கள்? எதார்த்தத்தில் நம் நாட்டை ஆளுவது மத்திய அரசுதான். சில துறைகளையும் மட்டும் மாநில அரசுக்கு கொடுத்து பார்த்துக்கொள்ள சொல்லி இருக்கிறார்கள். மாநில அரசுகளுக்கான அதிகாரங்களை குறைத்து மத்திய அரசு நாட்டினை ஒன்றிணைக்க வேண்டும். நம் நாட்டிற்கு அண்டை நாடுகளில் இருந்து அச்சுறுத்தல், முன்னேறிய நாடுகளிடமிருந்து எதிர்ப்பு என பல பிரச்சினைகளை கையாண்டு வருகிறது. வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து வேண்டியதை வாங்கிக் கொண்டு இங்கு நாட்டிற்கு எதிராக குறிப்பாக மாநில கட்சிகள் நடந்து கொண்டு வருகின்றன. இதை ஒடுக்கி நிலையான ஆட்சியை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்


K.Ramakrishnan
ஏப் 15, 2025 18:24

மாநில அரசுகளை டம்மியாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தெற்கத்திக்காரர் துணை போகலாமா? இவர் நியாயம் பேசுவார் என்று பார்த்தால் அண்ணாமலை பாணியில் பயணிக்கத் துவங்கி விட்டாரே?


sankaranarayanan
ஏப் 15, 2025 18:06

மாநிலங்கள் ஒன்றாக இருந்தால் தான் நாடு வல்லரசாகும். மாநிலத்திற்கு தனியாக முழு அதிகாரம் கொடுக்க முடியாது. மாநில சுயாட்சி கோரிக்கையை ஏற்க முடியாது இது தனி நாடக பிரியாத்தான் வழி வகுக்கும் இந்த கொள்கையை கைவிட்டுத்தான் கலைஞரே இந்திரா இருந்தபோது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார் இப்போது இவருக்கும் அதே கத்தி உண்டாகும் ஜாக்கிரதை


Dr.C.S.Rangarajan
ஏப் 15, 2025 17:39

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உருவகப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை தான் இந்த சுயாட்சி கோரிக்கை என்றால் சுயாட்சி என்பது உள்ளிருந்து வெளியேவா அதாவது ஒன்றிய அரசும் அதன் பார்வையில் அதிக மாநில அதிகாரங்களுடன் செயல்படுவதா அன்றி தனி நாடாக பிரிந்து செயல்படுவதா? இன்றைய நிலைப்பாட்டிலேயே கணக்குபோடமுடியாத வகையில் விஞ்ஞான ஊழல் எனும்போது, சுயாட்சி கடமை, கண்ணியம், கட்டுப்பாடற்ற ஊழலுக்கு வானமும் எல்லை இல்லை என எல்லாமும் கட்சியாளருக்கே என ஆகாது என மூக்கணாம் கயரினை போடக்கூடியவர் யார் சார்?


TRE
ஏப் 15, 2025 17:05

நாலு கோடி நயினாறு ஆனாரு தமிழ்நாடு RSS பிஜேபி ஆனாரு.


Rajkumar
ஏப் 15, 2025 16:59

அதிமுக அடிமைகள் மூலம் பாஜகவில் தெலுங்குத் தலைவரை திமுக தீர்மானிக்கிறது. 2026ல் ஸ்டாலின் ஆட்சி.


Barakat Ali
ஏப் 15, 2025 14:01

இன்னிக்கு நேத்தா பிரிவினை வாதத்தை திமுக தூண்டுது ????


முருகன்
ஏப் 15, 2025 16:39

இந்தியா என்பது பன்முக தன்மை கொண்ட ஒரு நாடு வரலாற்றை படிக்கவும்


Barakat Ali
ஏப் 15, 2025 17:04

அட முறுக்கு ..... பன்முகத்தன்மை என்பது மொழியில், இனத்தில், மாதத்தில் கலாச்சாரத்தில் இருந்தாலும் தேசியம் மதிக்கப்படவேண்டும் .... பல மாநிலங்கள் இணைக்கப்பட்ட ஒன்றியம் என்றாலும் அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு, ஒன்று பட்ட தேசம் ..... நாரசொலி தவிர அரசியல் சட்டமும் கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் ... கழகக் கொத்தடிமைகள் பிறருக்குப் பாடமெடுக்கத் தகுதியற்றவர்கள் ....


Indian
ஏப் 15, 2025 13:39

நேற்று முளைத்த காளான்


Iniyan
ஏப் 15, 2025 13:36

சட்ட சபையில் நான்கு வருடம் இவர் தூங்கி கொண்டு இருந்தார் போல


Venkataraman
ஏப் 15, 2025 13:32

இதற்கு முன்பே அண்ணாதுரை இருந்தபோது மாநில சுயாட்சி என்று கூச்சல் போட்டு விட்டு மத்திய அரசு மிரட்டியவுடன் திரும்ப பெற்றுக் கொண்டு விட்டார். பிறகு அதை பற்றி பேசவில்லை. இப்போது தேர்தல் நெருங்கி வருவதால் ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கி மக்களின் கவனத்தை திருப்ப நாடகம் ஆடுகிறார்கள். ஏற்கனவே டாஸ்மாக், மணல் கொள்ளை போன்ற ஏராளமான ஊழல்களில் செமையாக மாட்டிக்கொண்டிருப்பதால் அதையெல்லாம் திசை திருப்ப , இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். இவர்களை மத்திய அரசு நெருங்கிக். விரைவில் இவர்கள் ஆட்டம் முடிவுக்கு வரும்.


VARUN
ஏப் 15, 2025 14:30

வெங்கட்ராமன் போன்றவர்களை தமிழ்நாட்டிலிருந்து துரத்தி அடிக்கவேண்டும் .


S Ramkumar
ஏப் 15, 2025 15:11

வெங்கட்ராமனை துரத்த நீங்கள் யார் வருண்.


சங்கி
ஏப் 15, 2025 15:30

வருண், அவனா நீ? அப்ப சரி நீ பேசு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை