உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பதவியில் நீடிக்க தி.மு.க.,வுக்கு தகுதி இல்லை: அன்புமணி

பதவியில் நீடிக்க தி.மு.க.,வுக்கு தகுதி இல்லை: அன்புமணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்தார்.அவரது அறிக்கை: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த மது போதையில் இருந்த 3 மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையின் டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை.

போதைப்பழக்கம்

13 வயது சிறுமிக்கு அவர் வாழும் வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழகத்தில் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது? அனைத்துக் குற்றங்களுக்கும் மூல காரணம் மது மற்றும் போதைப்பழக்கங்கள் தான்; அதனால் அவற்றுக்கு முடிவு கட்டுங்கள் என்று தமிழக அரசை பா.ம.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருபுறம் போதையின் பாதையை தவிருங்கள் என்று கூறிக் கொண்டு இன்னொரு புறம் மது வணிகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கான இலக்கணமா? என்பது தெரியவில்லை.

நடவடிக்கை

சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், மதுக்கடைகளை உடனடியாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை.

பொறுமை

தமிழக அரசுக்கு எதிராக மக்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றனர். வெகு விரைவிலேயே அவர்கள் கொதித்தெழுவார்கள். அரியலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்றைய ரயில்வேத் துறை அமைச்சர் அழகேசனுக்கு எதிராக தி.மு.க.,வினர் முழக்கிய வாசகங்களை இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் முழங்குவார்கள். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அன்புமணி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

pmsamy
நவ 22, 2024 08:37

குழந்தைகளை பெற்றவர்கள் பாதுகாப்பார்களா அல்லது அரசாங்கம் பாதுகாக்க வேண்டுமா


K.n. Dhasarathan
நவ 21, 2024 16:48

அன்புமணி அவர்களே உங்களுக்கு எதை பேசுவது எதை பேச கூடாது என்பது தெரியாதது மிகவும் கவலைக்குரியது. அதுவும் மத்திய அமைச்சராக இருந்த ஒருவர், நாட்டில் நடக்கும் அனைத்துக்கும் முதல்வர் பதவி விளக கோருவது சிறுபிள்ளைத்தனமாக இல்லையா ? இந்தியா முழுதும் நடப்பதற்கு பிரதமர் பதவி விளக கோரா முடியுமா ? பாவம், ஐயா, முதலில் உங்கள் கட்சியை வளர்க்க பாருங்கள், அடுத்த கட்சியை தூற்றினால் நம் கட்சி வளரும் என்று உங்களுக்கு யார் சொன்னார்கள்.? கீறல் விழுந்த ரெகார்ட் போல தினமும் பேசினால் உங்கள் பேச்சை இனி யார் கேட்பார்கள். ?


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 16:48

தமிழ் நாட்டின் மக்கள் தொகை சுமார் 8 கோடி. இதில் தோராயமா 4 கோடி மகளிர். ஒவ்வொருவரின் கூட ஒவ்வொரு போலீஸ் போடணுமா?


வைகுண்டேஸ்வரன்
நவ 21, 2024 16:44

2026 ல் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பபோகிறவர்களின் அறிக்கை இங்கே டெய்லி வரும். சீமான், அன்புமணி, ராமதாஸ் இதில் முக்கியமானவர்கள். அவங்க என்ன சொல்றாங்க என்பதல்ல, அவங்க திமுக அரசைத் திட்டுவாங்க, அதைப் போடணும். அவ்ளோ தான்.


Ms Mahadevan Mahadevan
நவ 21, 2024 15:55

பா ம க , மதுவிலக்கை 2026 இல் கொண்டு வரும் என்று வாக்குறுதி அளியுங்கள். தனித்து நின்று ஜெயிக்கலாம்.


Oviya Vijay
நவ 21, 2024 15:34

பாமக ஜாதிக் கட்சி இல்லையென மக்களைக் கூறச் சொல்லுங்கள் Mohammed Ali... பார்க்கலாம். அவர்கள் செய்த அட்டூழியங்கள் தமிழக மக்களின் பார்வையில் படாமல் இல்லை... அதனால் தான் மக்கள் அதை தூரவே வைத்திருக்கிறார்கள்... பெரிய மாங்காய் இப்போது ஓய்ந்து விரக்தியில் உட்கார்ந்து இருக்கிறார்... அவ்வளவே...


raja
நவ 21, 2024 15:21

தகுதி உள்ள ஏவனையும் இந்த தமிழக மக்கள் வளர விடமாட்டார்கள்.....சாதி, மதம் சொல்லி அவனை ஒதுக்குவது செய்யாத குற்றத்தை மெய்ப்படுத்தி குற்றவாளி ஆக்குவது இதுதான் தமிழக மக்களின் எண்ணமும் திராவிட சித்தாந்தமும் அதில் இருந்து தமிழக மக்கள் என்றுதான் விழித்துகொள்வார்களோ தெரியவில்லை காலம்தான் பதில் சொல்லும்...


Nallavan
நவ 21, 2024 14:36

அன்று மரம் வெட்டி ரோட்டில் போட்டு அரசு இயங்கவிடாமல் அடித்த போது சட்டம் ஒழுங்கு எப்படி இருந்தது மக்கள் மறந்துவிடவில்லை, நீங்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது


SUBRAMANIAN P
நவ 21, 2024 13:44

இன்னிக்கி அடுத்தவன் வீட்டுல நடக்குற கெடுதல் சம்பவம் நாளைக்கு நமக்கும் நடக்கலாம் அப்படின்னு நெனைக்குற தொலைநோக்கு சிந்தனை தமிழக மக்களுக்கு இருந்திருந்தா இந்த திராவிட ஏமாற்று மக்கள் விரோத கட்சிகள் ஆட்சிக்கே வந்திருக்க முடியாது.


Ms Mahadevan Mahadevan
நவ 21, 2024 13:27

நீங்கள் சொல்லுவது எல்லாம் சரி தான். உங்கள் கட்சியை பற்றியும் உங்கள் ஊழல், சம்பாத்தியம், ஜாதி பெயர் சொல்லி அரசியல் செய்வது எல்லாம் அறிந்துதான் மக்கள் உங்களை அரியணை ஏற விடவில்லை. அப்படி விட்டால் சட்டம் ஒ ழுங் கு பற்றிய பயம் ஒரு காரணம்