உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது: முருகன்

தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது: முருகன்

சென்னை: மத்திய அமைச்சர் முருகன் பேட்டி:யார் தலைமையில் கூட்டணி என்பதை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவாகக் கூறியுள்ளார். அ.தி.மு.க., கூட்டணியா, பா.ஜ., தலைமையிலான கூட்டணியா என கேட்பதை, திருமாவளவன் விட்டுவிட்டு, தி.மு.க., கூட்டணியா; வி.சி., கூட்டணியா; காங்கிரஸ் கூட்டணியா என, கேட்டால் சரியாக இருக்கும். அவர்கள் கூட்டணியில் நிலைப்புத்தன்மை உள்ளதா என்பதே கேள்விக்குறி. தி.மு.க., கூட்டணியில் பல கட்சிகள் வெளியேற உள்ளன. தி.மு.க.,வினர் ஒருமுறை கடவுள் இல்லை என்பர்; ஒருமுறை உண்டு என்பர். நாங்கள் வேல் எடுத்தால், அவர்களும் வேல் எடுப்பர். முத்துவேல் கருணாநிதி என, ஜாதகம் பார்த்து பெயர் வைப்பர். அவர்களுக்கு தேவைப்பட்டால் கோவிலுக்கு செல்வர்; ஆன்மிகத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பர். இது, தி.மு.க., வின் இரட்டை வேடம், போலி நிலைப்பாடை காட்டுகிறது.நிலத்தடி நீருக்கு மத்திய அரசு வரி விதிப்பதாக கூறுவது, முற்றிலும் திரிக்கப்பட்ட பொய் செய்தி. நீரும், வேளாண்மையும் மாநில அரசுடன் தொடர்புடையது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 30, 2025 09:04

திமுக இரட்டை வேடம் போடுகிறதா ? உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் ..கமலஹாசனின் தசாவதாரத்தை தாண்டி பதினைந்து வேடம் போடும் தகுதியுள்ளது ...


சமீபத்திய செய்தி