உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் வெறுப்பு அரசியலை வளர்க்கும் திமுக: மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் வெறுப்பு அரசியலை வளர்க்கும் திமுக: மத்திய அமைச்சர் முருகன் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தமிழகத்தில் வெறுப்பு அரசியலை விதைத்து, அதை திமுக வளர்த்து வருகிறது. பாஜவுக்கு முதல்வர் ஸ்டாலின் வகுப்பு எடுக்க தேவையில்லை,'' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் வேலை தேடி வரும் பீகாரைச் சேர்ந்த கடின உழைப்பாளிகளை திமுக-வினர் அவமதிப்பதையும், வன்மத்துடன் தகாத வார்த்தைகளால் அவதூறு பரப்புவதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டிப் பேசியிருந்தார். உண்மை வெளிப்பட்டு விட்டதே என்ற ஆத்திரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழர்களுக்கு எதிராக பாஜ பேசுவதாக சரடு விடுகிறார். திமுகவை பார்த்து பாஜ கேள்வி எழுப்பினால் அது எப்படி தமிழர்களுக்கு எதிரானதாகும்?பீகார் உட்பட வட மாநில மக்கள் மீது வன்மத்தை கக்கி, தாக்குதலுக்குத் தூண்டி, மன மகிழ்ச்சி கொள்ளும் வக்கிர மனம் கொண்டவர்கள் திமுகவினர் தானே? 2021ம் ஆண்டு தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இந்த வெறுப்பு பிரசாரம் உச்சத்திற்கு சென்றுள்ளதே! வட மாநில மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்ய மிக மோசமாக 'வடக்கன்' என்ற வார்த்தையை உருவாக்கி சமூக வலைளதங்களில் பரவிடச் செய்வது திமுகவினர் தானே?தன் மீதான கேள்விகளுக்கு பதிலளிக்க திராணியற்ற முதல்வர் ஸ்டாலின், தமிழர்களுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என விஷமப்பிரசாரம் செய்ய வேண்டாம். தமிழகத்தில் நல்லிணக்கம் ஏற்பட உழைக்காவிட்டாலும், வெறுப்பை விதைப்பதை நிறுத்தினால் நன்று. காங்கிரஸ் கட்சியும் மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். பீகார் மக்கள் மீது வன்மத்தை கக்கும் திமுகவினரை காங்கிரஸ் என்றாவது ஒருநாள் கண்டித்தது உண்டா? ஆளுக்கொரு வேஷம், நேரத்திற்கு ஒரு பேச்சு என பச்சோந்தியாகவே மாறி விட்ட காங்கிரஸ் கட்சி இந்திய மக்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் மத்திய அமைச்சர் முருகன் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தாமரை மலர்கிறது
அக் 31, 2025 21:04

வடமாநில தொழிலாளிகள் தமிழகத்தில் வேலை செய்யாவிடில், தமிழகம் நாறி விடும். இந்த லட்சணத்தில், வடமாநில அப்பாவி தொழிலாளிகளை திமுக துன்புறுத்துகிறது. அவர்களின் மீது வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பிவருகிறது. வடமாநில தொழிலாளிகள் தமிழகத்தை விட்டு வெளியேறினால் தமிழகத்தின் பொருளாதாரம் அதலபாதாளம் சென்றுவிடும். இலவச பஸ் பயணம், இலவச ஆயிரம் ரூபாய், தொழில்கள், வேலைவாய்ப்புகள் எல்லாம் போய்விடும். அது புரியாமல் திமுகவின் டாஸ்மாக் அணில்குஞ்சுகள் வடக்கன் என்று கொக்கரிக்கின்றன.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 19:38

பீகார் தேர்தலுக்கு இங்கே எதுக்கு பிரச்சாரம் பண்றானுங்கன்னே தெரியலை


Gokul Krishnan
அக் 31, 2025 19:18

டபிள் என்ஜின் சர்கார் சாதனைகளை சொல்லி பிரதமர் வாக்கு சேகரிக்கலாமே ஒடிசா மாநிலத்தின் தேர்தலின் போதும் பூரி கோவிலின் சாவி குறித்து யார் அது போல் பேச்சை தொடங்கியது என்று உங்களுக்கு தெரியாதா


திகழ்ஓவியன்
அக் 31, 2025 18:42

பீஹார் தேர்தல் தமிழனை இழிவா பேசுகிறார் ஒருத்தர். கொஞ்சம் கூட ரோசம் இன்றி பேசுறீங்க


அப்பாவி
அக் 31, 2025 16:33

இந்தியை திணிச்சு அவிங்க வெறுப்பேத்தறாங்க.


தலைவன்
அக் 31, 2025 16:11

தோல்வி பயத்தில் பிஹார் மக்களிடம் தமிழக மக்களுக்கு எதிராக வன்மத்தை திணிப்பது உங்க எசமாந்தாங்கோ??


தலைவன்
அக் 31, 2025 16:08

கும்ப லக்னம் மீன ராசி அதிர்ஷ்டம் அது இஷ்டத்துக்கு பேச சொல்லுது?? எங்கூர்ல ஒரு சொலவடையுண்டு ஒட்டகம் ஒணானை பார்த்து முதுகு கோணியிருக்குனு சொல்லிச்சாம். அது மாதிரி இருக்கு.


T.sthivinayagam
அக் 31, 2025 16:06

தமிழகத்தில் இருந்து அதிக வரி வருவாய் பெற்றுக் கொண்டு ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் அவர்கள் தமிழர்களை தரக்குறைவாக பேசுவது சரியா, நீங்களும் தமிழர் தானே , பாஜாகாலில் சேர்த்தால் ஜீன் மாறிவிடுமா என தொண்டர்கள் கேட்கிறார்கள்.


Rajarajan
அக் 31, 2025 16:00

இல்லனா தமிழ்நாட்டுல இவங்க வண்டியை எப்படி ஓட்டுறது ?? ஆரியன், வடக்கன், குல்லுகப்பட்டர், வந்தேறி, கைபர் போலன் கனவாய்க்காரன், முதலில் ......... அடி . இப்படித்தானே இன்னிவரைக்கும் இவங்க வண்டி ஓடுது. நாட்டை ஒருங்கிணைத்த படேல் எங்கே ?? நாட்டை காட்டிக்கொடுத்த அந்த பெரியானவர் எங்கே ??


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 19:35

குல்லுகபட்டர் , இது புதுசா இருக்கே இப்படி எல்லாம் அவங்க திட்டுறாங்கன்னு சொல்லி நீ நல்லா திட்டிட்டே. சந்தானம் ஜோக் மாதிரி, அவங்க செஞ்சாங்களோ இல்லையோ, ஆனா நீ நல்லா செஞ்சிட்டே


M.Sam
அக் 31, 2025 15:52

உங்க கட்சி காட்டும் என்ன விருப்பு அரசியில படத்துறீங்க பிஜேபி என்றாலே வெறுப்பு அரசியில் தான் அதன் இலக்கணமே புரிந்தால் சரி


சமீபத்திய செய்தி