மேலும் செய்திகள்
விஜய் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம்: தினகரன்
15-Sep-2025
காரைக்குடி: ''கல்வி நிலையங்களில் ஜாதி வெறி வருவதற்கு முக்கிய காரணம் தி.மு.க., தான்,'' என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார். அவர் நேற்று அளித்த பேட்டி: தி.மு.க.,வை எதிர்ப்பதற்காக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கிய விடுதலை சிறுத்தைகள், கம்யூ., போன்ற கட்சிகள், தற்போது தி.மு.க., கூட்டணியில் உள்ளன. சொல்லப்போனால், அக்கூட்டணியே சந்தர்ப் பவாத கூட்டணிதான். இப்படிப்பட்ட் ஒரு கூட்டணியில் இருந்து கொண்டுதான், உலக மகா கூட்டணி போல தி.மு.க., பெருமை பேசுகிறார் துணை முதல்வர் உதயநிதி. சந்தர்ப்பவாதத்தால் துணை முதல்வர் ஆனவர் உதயநிதி. தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உரிய போலீஸ் அனுமதி பெற்று தான் கரூருக்கு சென்றார். மீண்டும் அவர் அங்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு கோருகிறார். அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டியது போலீசாரின் கடமை. கடமை தவறிய கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். 1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மட்டுமே வென்றார். அப்போது சட்டசபைக்கு செல்ல பயந்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். கரூரில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற அனைத்து கட்சி தலைவர்களும் செல்கின்றனர். அதுபோல விஜய் சென்று பார்ப்பதற்கும் யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. ஜி.டி.நாயுடு, தேவர் திருமகன் என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். எனவே, ஜாதி பெயரை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கல்வி நிலையங்களில் ஜாதி வெறி வருவதற்கு முக்கிய காரணம் தி.மு.க., தான். தி.மு.க., வருவதற்கு முன்பு வரை பெயரில் தான் ஜாதி இருந்தது. ஆனால், யாருக்கும் மனதில் ஜாதி வெறி இல்லை. ஜாதி பெயரை எடுத்தாலும் மக்களின் உணர்வை மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
15-Sep-2025