உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலவரம் ஏற்படுத்துவது தி.மு.க; அதற்கு பலியாவது காவல்துறை

கலவரம் ஏற்படுத்துவது தி.மு.க; அதற்கு பலியாவது காவல்துறை

கோவை: ஹிந்து முன்னணி சார்பில், 38ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா, கோவை பூமார்க்கெட் தெப்பக்குளம் மைதானத்தில் நேற்று நடந்தது. விழாவில், பா.ஜ. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: முதல்வர் ஸ்டாலினுக்கு, 2026ல் ஓய்வு. அதற்காக ஜெர்மனிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அரசியல் மாற்றம் வந்தால்தான், ஹிந்து மதத்துக்கு பாதுகாப்பு. ஒரு மதத்துக்கு எதிராக செயல்படுகிறது தி.மு.க. குடும்பம். தி.மு.க.வினர் வரக்கூடிய நாட்களில், கவர்ச்சிகர விஷயங்களை கூறுவர்; நம்பாதீர்கள். தேசிய அளவில் 31 நகரங்களில்நடந்த ஆய்வில், பெண்களுக்கு பாதுகாப்பான நகரப் பட்டியலில், சென்னைக்கு,21ம் இடம் கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள, 48 சதவீதம் பெண்கள் பாதுகாப்புடன் இல்லை எனத் தெரிவித்துள்ளனர். கலவரத்தை ஏற்படுத்துவது அரசுதான். அதற்கு பலியாவது காவல்துறை. இதுதான் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு லட்சணம். இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, ஹிந்து முன்னணி மாவட்டத் தலைவர் தசரதன், கோவை காமாட்சிபுரி ஆதினம் ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

'தேர்தல் வரும்போது மறந்து விடுகிறோம்'

விழாவில், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பேசுகையில், ''தி.மு.க., அரசு ஏதாவது ஒரு ஊரில் விநாயகர் சிலை எண்ணிக்கையை குறைத்தால் விருது என, தெரிவித்துள்ளது. சென்னிமலையில் அந்நிய மதத்தினரை துாண்டி விட்டனர். இந்த அரசு அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. ஹிந்துக்கள் மத்தியில் இன்று பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அது முருக பக்தர்கள் மாநாட்டில் தெரிந்தது. ஹிந்து விரோதிகளை தோற்கடிக்க வேண்டும். தேர்தல் வரும்போது நமக்கு நடந்ததை மறந்து விடுகிறோம். 2026ல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !