உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கருணாநிதி தவிர வேறு புலவரே தி.மு.க.,வுக்கு தெரியாது: சீமான்

 கருணாநிதி தவிர வேறு புலவரே தி.மு.க.,வுக்கு தெரியாது: சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: ''தி.மு.க.,வினருக்கு கருணாநிதி தவிர வேறு புலவரே தெரியாது,” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழக அரசு ஏற்கனவே, 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் உள்ளது. இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கையை, கூடுதலாக்கி உள்ளனர். திராவிட கட்சிகள் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தும், ஒரு நாளைக்கு, 30 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில் தமிழக பெண்கள் உள்ளனர். பெருமைக்குரிய தமிழ் இனத்தின் பெண்களை, இப்படி கையேந்த செய்து விட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன்; வெட்கப்ப டுகிறேன். போக்குவரத்து துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்; மின்சார துறையில், ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன். இந்த கேடுகெட்ட கேவலமான ஆட்சி முறையை சாதனை என்கின்றனர். மூன்று முறை 'நிதி ஆயோக்' கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத்துறை ரெய்டு வந்ததும், பிரதமரை போய் சந்திக்கிறார். பாரதி விழாவில் நான் பங்கேற்று பேசியதை விமர்சிக்கின்றனர். ஆனால், 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் திராவிடர் கழகம் போல் ஒரு சமூக இயக்கம் தான்' என சொன்னது யார்? ஆர்.எஸ்.எஸ்., சார்ந்த 'விஜில்' இலக்கிய அமைப்பினர், பாரதி குறித்து பேச என்னை அழைத்தனர். நான் அங்கு சென்று பேசினேன். திராவிட இயக்கத்தினரையும், பாரதி குறித்து கூட்டம் போட சொல்லுங்கள்; அங்கும் சென்று பேசுகிறேன். தனியார் கல்வி நிறுவன நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் முருகன் என இருவரும் பங்கேற்கும் நிலையில், தி.மு.க., அமைச்சர்களும், கூட்டணியை சேர்ந்த எம்.பி., கமலும் கலந்து கொள்கின்றனர். இது எந்த வகையில் சரி? பாரதியாரை பாடாத தமிழன் எவன் இருக்க முடியும். அவரை, பாடாத தமிழன், உயிரோடு ஏன் இருக்க வேண்டும். தி.மு.க.,வினருக்கு கருணாநிதியை தவிர, வேறு புலவனே கிடையாது; தெரியாது. மக்கள் வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்களுக்கு, ஜாதி, மதம், கடவுள் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. இத்தனை ஆண்டு இல்லாமல், திடீரென முருகன் மேல் ஏன் இந்த பக்தி? தேர்தல் வரப் போவதால், இந்த சேட்டை. அயோத்தியில் ராமரை வைத்து, பா.ஜ., அரசியல் செய்தது. ஆனால், அங்கு தாழ்த்தப்பட்டவரை வெற்றி பெற வைத்து, பா.ஜ.,வை எதிர் அணியினர் தோற்கடித்து விட்டனர். இதேபோல தான் இங்கும் நடக்கும். தமிழகத்தில் முருகனை கையில் எடுத்து அரசியல் செய்கிறது பா.ஜ., குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுத்தாலும், பா.ஜ., எண்ணம் நடக்காது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில், இரு சமய தலைவர்களை அழைத்து பேசி, இரு மத வழிபாடுகளையும் நடத்த பரிந்துரை செய்திருக்க வேண்டும். பிரச்னை ஆக்கியதே தி.மு.க., அரசின் காவல் துறை தான். கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தி.மு.க.,தான் பாதுகாப்பு என நினைக்கின்றனர். ஆனால், பா.ஜ.,வுக்கு சதி திட்டம் தீட்டி கொடுப்பதே தி.மு.க., தான். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

கூத்தாடி வாக்கியம்
டிச 15, 2025 15:11

செங்கல் மேலே இருந்து காட்டி 500 நோட்ட கீழே இருந்து காட்டி குவட்டரும் பிரியாணியும் ஊட்டி நீட் விலக்கு ன்னு சொல்லி வாங்கின ஓட்டு....


Sun
டிச 14, 2025 14:56

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே ? ஒரு பழைய தமிழ் திரைப்படப் பாடல் இப்ப போய் ஞாபகத்துக்கு வருது!


sundarsvpr
டிச 14, 2025 14:23

கருணாநிதியே புலவர் இல்லை. ராம காவியம் எழுதிய வால்மீகி ஒரு வேடன். பின்னால் புனித காவியம் எழுதும் கவியானார் முனியானார். . முத்துவேல் கருணாநிதி மேலும் சில ஆண்டுகள் நில உலகில் உயிருடன் இருந்துஇருப்பாரானால் மனம் மாறி திரு ரெங்கநாத காவியம் எழுதியிருப்பார். புனித கவி அன்புநிதியார் என்று கூறப்பட்டு இருப்பார் பாவம் கருணாநிதி கலியுகத்தில் ஜனித்தார்


Rajamani Ksheeravarneswaran
டிச 14, 2025 11:45

கருணாநிதி புலவர் என்று சீமான் சொல்லவில்லை. திமுகவை பொருத்தவரை கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி ஏன் இன்பநிதி கூட புலவர்கள்தான். சூடு சொரணையற்ற திமுகவினர் ஒரு குடும்பத்தை தாங்கி பிடித்து தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். சீமான் கூறியது போல் திமுக அரசு இரு மதத்தினரையும் அரவணைத்து உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தி இருக்க வேண்டும். திமுகவும் பாமகவும் இதை அரசியலாக்கி குளிர் காண்கின்றனர்.


GoK
டிச 14, 2025 11:22

அவர் புலவர் இல்லை


vbs manian
டிச 14, 2025 09:59

இவர் பாட்டன் என்று சொல்லும் முருகனுக்கு கோடிக்கணக்கான தமிழர்களுக்கு தெய்வமான முருகனுக்கு ஒரு எதிர்மறை நிகழ்வு மதுரையில் நடக்கிறது.


Mennon Kasirajam
டிச 14, 2025 09:01

சினிமாவில் பாடி ஆடி கருணாநிதியையே மிஞ்சிய உதயநிதியே இருக்கிறாறே அவரை திமுக அடையாளம் கண்டு பாட்டிசைப் புலவர் பட்டம் கொடுத்து கெளரவிக்கலாம்.


திகழ்ஓவியன்
டிச 14, 2025 12:04

உண்மை தானே MGR பேமஸ் ஆனா மந்திரி குமாரி க்கு வசனம் தயாரிப்பு கலைஞ்சர் , மேகலா PICTURE நிறுவனம் மூலம் தான் ஜெயா அறிமுகம் அப்ப தான் கலைஞ்சர் ஜெயா வுக்கு ஏதோ நடந்திருக்கு ,


திகழ்ஓவியன்
டிச 14, 2025 12:07

உதய நிதி ஒற்றை செங்கல் வெச்சி 40 தொகுதியில் உங்களை டெபாசிட் இழக்க செய்த வீரர்


பாலாஜி
டிச 14, 2025 08:25

புலவர்கள் பற்றி என்ன தெரியுமாம் சீமானுக்கு.


Skywalker
டிச 14, 2025 07:13

Calling karunaanidhi a poet is like calling rahul gandhi a doctor


Mani . V
டிச 14, 2025 06:20

கருப்பன் குசும்பன். அடுத்த பெட்டிக்கு அடித்தளம் போடுகிறான்.


சமீபத்திய செய்தி