உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அமைச்சர் முருகனுக்கு தி.மு.க., திடீர் அழைப்பு

மத்திய அமைச்சர் முருகனுக்கு தி.மு.க., திடீர் அழைப்பு

சென்னை: ''மத்திய அரசிடம், கல்வித்துறைக்கு நிதி பெற்றுத்தர, 'ஓரணியில் தமிழகம்' இயக்கத்தில் சேர, மத்திய அமைச்சர் முருகனையும் அழைக்கிறோம்,'' என, தி.மு.க., மாணவர் அணி செயலர் ராஜிவ்காந்தி தெரிவித்தார்.சென்னை அறிவாலயத்தில், அவரது பேட்டி:தமிழகத்தின் மண், மானம், மொழி காக்கும் போராட்டத்தில், தமிழர்களாகிய நாம் ஓரணியில் திரள வேண்டும் என, முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில், கட்சி, மதங்களை கடந்து, ஓரணியில் தமிழர்கள் நின்றனர். ஒரு தாய் பிள்ளையாக வாழ்ந்த நிலத்தில், மீண்டும் ஜாதிய வன்மத்தை துாண்டும் வேலையை, அண்ணாமலை செய்கிறார். பா.ஜ.,வில் சேருவதற்கு முன், அண்ணாமலை 'நீட்' தேர்வு வேண்டாம் என்றும், இடஒதுக்கீடு சரி என்றும் பேசினார். பா.ஜ.,வில் சேர்ந்த பின், அவற்றை எதிர்க்கிறார். அண்ணாமலை பட்டம் படித்தவரா, தமிழக மக்களின் உணர்வை புரிந்தவரா என, சந்தேகம் வருகிறது. பள்ளி, கல்லுாரிகள், அனைவருக்கும் ஒன்றுதான். ஓரணியில் தமிழகம் இயக்கத்தில் சேர, மத்திய அமைச்சர் முருகனையும் அழைக்கிறோம். மத்திய அமைச்சராக, தமிழக கல்வித் துறைக்கு நிதியை பெற்றுத் தாருங்கள். கருத்தில் எங்களுடன் ஒன்றிணைந்து கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Tetra
ஜூலை 01, 2025 10:49

OK. Understood. Will you please explain what did they do with the money they already received?


Naresh Kanda
ஜூலை 01, 2025 09:01

this is politics. however Dmk wants to grab legitimate rights from blind central govt. for our tamils. you should understand


GOVINDASAMY MURUGESAN
ஜூன் 30, 2025 17:19

நீங்கள் முதலில் கூட்டணி கட்சிகளை அனுசரித்து மரியாதை கொடுத்து சொல்லுங்கள் எதிர்க்கட்சிக்காரர்கள் நியாயமாக நடந்து கொள்வார்கள் வருவார்கள்.


Yasararafath
ஜூன் 30, 2025 13:55

இதில் ஏதோ உள்குத்து இருக்குது போல


venkatapathy
ஜூன் 30, 2025 13:50

மத்திய அரசிடம் நியாயமாக சொல்ல வேண்டியதை சொல்லி பெற வேண்டியதை பெற முடியவில்லையா ராஜினாமா செய்து விட்டு போகலாம் யாராவது வாங்கி கொடுத்து நீங்கள் கமிஷன் அடிக்க அனுமதிக்க முடியாது.முருகன் கட்சியே ஆண்டு விட்டு போகட்டும்.


Gunavathy R
ஜூன் 30, 2025 13:22

இவர்கள் பேசிய வீர வசனங்கள் வெத்து வேட்டா.இப்ப கூட்டம் சேக்குறாங்க.


Ravi Kulasekaran
ஜூன் 30, 2025 13:04

மத்திய அரசின் நோக்கம் மூலம் மொழி கொள்கை அதனை எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது


திகழும் ஓவியன், AJAX, ஓட்டேரி
ஜூன் 30, 2025 12:01

தம்பி அப்டியே டாஸ்மாக் ஒழிப்பு, இளம் விதவைகள், நீட்டு ரகசியம், எய்ம்ஸ் செங்கல், 95% 4000 கோடி, போதை மருந்து, யார் அந்த சார், சைவம், சனாதன், வைணவம் 21 ஆம் பக்கம் இது பத்தியெல்லாம் இயக்கம் நடத்தியனால் தமிழகமே ஒன்று திரண்டு வருவேன். எப்போ எங்கே..?


Chandan
ஜூன் 30, 2025 11:48

கட்சி மாறினார் பேச்சும் மாறுது....


RAMESH
ஜூன் 30, 2025 11:25

இந்த நபர் சீமான் கட்சியில் இருந்த போது ஒரு வாய் இப்போது நார் வாய்.... இவர்கள் பின்னால் நின்றால் தமிழகம் இனி பிச்சை எடுக்க வேண்டும்.... எல்லாம் தேர்தல் பொய் நாடகங்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை