உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜயை விமர்சிக்க தி.மு.க.வினருக்கு தடை

விஜயை விமர்சிக்க தி.மு.க.வினருக்கு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தி.மு.க., அரசை விமர்சித்து வரும் த.வெ.க., தலைவர் விஜயை பற்றி பேச, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தி.மு.க., மேலிடம் தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டசபை தேர்தலுக்காக, 'மக்கள் சந்திப்பு பயணம்' துவக்கி உள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமை மட்டும், இரண்டு மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்யும் வகையில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது. அவர், செல்லும் இடங்களில் எல்லாம் தமிழக அரசை விமர்சித்து பேசி வருகிறார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தி.மு.க., நடத்தி வரும் 'ஓரணியில் தமிழ்நாடு' கூட்டத்தில் விஜய் மற்றும் அவரது கட்சியை விமர்சித்து பேசுவதற்கு அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தடை விதித்து கட்சி மேலிடம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, 'த.வெ.க., குறித்து பேசக்கூடாது என எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் எங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால், அதற்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்' என மேலிடத்தின் உத்தரவை வெளிப்படையாக அறிவித்தார். 'திருவாரூரில் தி.மு.க.,முதன்மைச்செயலாளர் கே.என். நேரு பேசும் போது, 'எனது வாய் பிளாஸ்திரி போட்டு ஒட்டப்பட்ட நிலையில் மேடையில் நிற்கிறேன்' என்றார். விஜய் நடத்திய கூட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான பூண்டி கலைவாணன், பெரிய கூட்டத்தைக் கூட்டினார். தி.மு.க., மேலிடத்தின் உத்தரவு தொடர்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறுகையில், 'மாநில அரசின் சாதனையை எடுத்துக்கூறுவதும் மற்றும் மத்திய அரசு தரும் தொந்தரவை விளக்குவதுமே எங்களின் நோக்கம். மற்ற விஷயத்தை பற்றிப் பேசுவது கவனத்தை சிதறடிக்கும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

சிந்தனை
செப் 24, 2025 17:00

தெரியுமே கிறிஸ்தவர்களை நீங்கள் விமர்சிக்க முடியாது


N Srinivasan
செப் 24, 2025 12:39

அப்போதானே பின்னாலே வளைச்சி போடலாம்


திகழ்ஓவியன்
செப் 24, 2025 12:36

கதம் கதம் சாப்டர் கிளோஸ் என்று அர்த்தம்


ram
செப் 24, 2025 12:07

திருட்டு திமுக ஆட்களின் mind வாய்ஸ் நம்ம எழுதி கொடுத்ததைதான் அந்த நடிகர் சொல்லியிருக்கார் இப்போது அவரை விமர்சித்தால் எப்படி.


skrisnagmailcom
செப் 24, 2025 12:05

விஜய் திமுகவின் ஏஜெண்ட் பாஜக அதிமுக கூட்டணியை வலுவிழக்க திமுகவால் உருவாக்கபட்டது


NAGARAJAN
செப் 24, 2025 10:30

இவரெல்லாம் ஒரு ஆளா என்ன.. மதிக்கக்கூடாத மனிதர்.. ரசிகர்களை சுரண்டி பிழைக்கும் சிகாமணி


Svs Yaadum oore
செப் 24, 2025 08:24

சமூக நீதியை விடியல் எப்போது கை விடாது. நடிகனை விமர்சனம் செய்வது விடியலின் சமூக நீதி மத சார்பின்மைக்கு விரோதம் .... அப்படி விமர்சனம் செய்தால் விடியலுக்கு சிறுபான்மை எதிர்ப்பு கட்சி என்று பெயர் வந்திடும் ....


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
செப் 24, 2025 08:11

விடியலுக்கு பயம் காட்டிட்டாங்க


பாலாஜி
செப் 24, 2025 07:59

திமுகவை தரமற்ற விமர்சனங்கள் செய்யும் "தவெக" புஸ்ஸி ஜோசப் விஜய்யை திமுகவினர் விமர்சனம் செய்வதை திமுக தலைமை ஏன் தடை செய்யவேண்டும்? "தவெக" அசுர வளர்ச்சியை பார்த்து மு.க.ஸ்டாலினின் பயம் காரணமா?


Svs Yaadum oore
செப் 24, 2025 08:23

நடிகனை விமர்சனம் செய்வது விடியலின் சமூக நீதி மத சார்பின்மைக்கு விரோதம் ....அப்படி விமர்சனம் செய்தால் விடியலுக்கு சிறுபான்மை எதிர்ப்பு கட்சி என்று பெயர் வந்திடும் ....


Svs Yaadum oore
செப் 24, 2025 07:43

விடியல் கட்சி நடத்துவதே ஆபாச சினிமா ட்ராமா தொலைக்காட்சி யு டுபர், ஆபாச மேடை பேச்சாளர், தமிழ் கலாச்சார எதிர்ப்பு, ஹிந்து கலாச்சார எதிர்ப்பு, அப்ரஹாமிய மதங்களை இங்கு பரப்புவது என்று இந்த வகையில்தான்.. அதனால் ஆபாச நடிகனை எதிர்த்து பேசினால் விடியலுக்கு சமூக நீதி மத சார்பின்மை அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவிடும் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை