உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அங்கிட்டு ஹிந்தியில் கேள்வி; இங்கிட்டு கனிமொழி ரியாக்சன்: கபடி போட்டியில் கலகல சடுகுடு!

அங்கிட்டு ஹிந்தியில் கேள்வி; இங்கிட்டு கனிமொழி ரியாக்சன்: கபடி போட்டியில் கலகல சடுகுடு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நெல்லை; நெல்லையில் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் இந்தியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எம்.பி., கனிமொழி சுவாரசியமாக பதில் அளித்தார்.

கபடி போட்டி

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தலா 30 ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்ட மின்னொளி கபடி போட்டி தொடங்கியது. போட்டியை தி.மு.க., தூத்துக்குடி எம்.பி., கனிமொழி தொடங்கி வைத்தார்.

இந்தியில் கேள்வி

பின்னர் போட்டியில் பங்குபெற உள்ள அனைத்து வீரர்கள், வீராங்கனைகளுக்கும் கனிமொழி வாழ்த்துக் கூறினார். அப்போது கூட்டத்தின் ஒரு பகுதியில் இருந்த வீராங்கனை ஒருவர் இந்தியில் கேள்வி ஒன்றை அவரிடம் கேட்டுள்ளார். மொத்தக்கூட்டமும் அவர் என்ன சொல்ல போகிறார், எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று ஆவலடன் காத்திருந்தது.

ஆங்கிலத்தில் பதில்

இந்தி கேள்வியை எதிர்கொண்ட கனிமொழி இந்தி தெரியாது என்பதை மட்டும் குறிப்பிடாமல் தெளிவான ஆங்கிலத்தில் அளித்த பதில் தான் சுவாரசியம். கனிமொழி கூறியதாவது; மன்னிக்கவும், நீங்கள் கேட்பது எனக்கு புரியவில்லை. உங்களின் பிரச்னை என்னவென்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. டில்லியில் நான் இருந்த போது ஏற்பட்ட அதே நிலைமை தான் உங்களுக்கும்.

வாழ்த்துகள்

என்னால் இந்தியை புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்கு ஆங்கிலம் புரிந்து கொள்ள முடியும். நம் இருவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று குறிப்பாக பேசி அனைவரையும் கலகலப்பாக்கினார். பின்னர் மேடையில் தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், அனைத்து வீரர்களுக்கும் வாழ்த்துகளையும் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

&2990&3006&2992&3007. &2992&2997&3008&2984&3021&2980&3007&2992&2985&3021.
செப் 09, 2024 19:21

கனிமொழிக்கு நன்றாக ஹிந்தி தெரியும் , தமிழ் மக்களை முட்டாளாக்குகின்றார்


Amruta Putran
செப் 09, 2024 18:10

Lives in Delhi for more than 15 years, didn't Learn Hindi means, she proves Dhathi's sister


S Raman
செப் 09, 2024 19:20

கொள்ளை அடிக்கவே நேரம் not enough. நீ வேற....


Srinivasan Krishnamoorthi
செப் 09, 2024 17:00

இந்தம்மா நல்ல இந்தி பேசும் டில்லியில்.


Ganesun Iyer
செப் 09, 2024 15:59

ஆங்கிலம் தெரியாத மற்றவர்களுக்கு...?


Ganesun Iyer
செப் 09, 2024 15:57

கபடி குழுக்கள் தமிழகத்தை சேர்ந்தது ஆனா யாரோ ஒருவர் ஹிந்தியில் கேள்வி கேட்டாறாம்... அதுக்கு ஆங்கிலத்தில் பதிலாமா, ஏன் தமிழில் சொல்ல வேண்டியதுதானே.. ₹௨௦௦ க்கு செம்மயா வேலை செய்யறாங்கப்பா..


கல்யாணராமன்
செப் 09, 2024 15:53

திஹார் சிறையில் பல மாதங்கள் இருந்தபோது அங்கே மொழி பெயற்பாளர் ஒருவரும் கூடவே சிறையில் இருந்தாரா?


சமூக நல விரும்பி
செப் 09, 2024 15:36

கனிக்கு ஹிந்தி நன்றாக தெரியும். மக்களை ஏமாற்ற நல்லா புருடா விட்ரா. இது தான் திராவிட மாடல் மற்றவர்களை ஏமாற்றும் வேலை.


subramanian
செப் 09, 2024 15:34

தமிழ் நாட்டின் அசிங்கம்


subramanian
செப் 09, 2024 15:33

வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாத திராவிட மாடல்


அருணாசலம்
செப் 09, 2024 14:28

புரூட் லேங்குவேஜ் இல்லை. புருடா....


முக்கிய வீடியோ