உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!

காமராஜரை அவதுாறு செய்த திமுக எம்பி: கண்டனம் தெரிவிக்காத காங்., மூத்த தலைவர்கள்: கருத்து எழுதுங்கள் வாசகர்களே...!

தமிழகத்ததின் ஆகச்சிறந்த முதல்வராக கருதப்படும் காமராஜரை திமுக எம்பி திருச்சி சிவா விமர்சித்து பேசிய பிறகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, தங்கபாலு ஆகியோர் சாதாரண கண்டனத்தைக் கூட தெரிவிக்காதது, காமராஜர் மீது அபிமானம் வைத்துள்ளவர்களிடம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநாவுக்கரசு மட்டும் மேம்போக்காக, திமுக கட்சியின் பெயரைக் கூட குறிப்பிடாமல், பெயருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு திமுக மீது என்ன பயம் என்று தெரியவில்லை.இவர்களுக்கு முகவரி தந்ததே அந்த காமராஜர் தான். அந்த நன்றி கூட இவர்களுக்கு இல்லை.காமராஜர், தமிழகத்தின் ஒரு சாதாரண அரசியல் தலைவர் அல்ல. அனைத்து துறைகளிலும் நம்பர் 1 தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்.1. கட்சி வேறுபாடு இன்றி அனைவராலும் மதிக்கப்படுபவர்.2. தமிழகத்தின் மிகச்சிறந்த முதல்வராக கருதப்படுபவர்.3. தமிழகத்தில் பிறந்தாலும், அகில இந்திய அளவில் வட இந்திய தலைவர்களாலும் மதிக்கப்பட்டவர்.4. ‛‛கிங் மேக்கர்'' என அழைக்கப்பட்ட ஒரே தலைவர்.5. கல்வி, தொழில் துறை, வேளாண்மை துறையில் தமிழகம் முதல் இடம் பிடிக்க கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியவர்.6. அரசியலில் ஒழுக்கம், கட்டுப்பாட்டை பேணிப் பாதுகாத்தவர்.7. மாற்றுக் கட்சி தலைவர்களைக் கூட மரியாதையுடன் பேசியவர்.8. ஊழல் இல்லாத, அப்பழுக்கற்ற ஆட்சியை நடத்தியவர் என்று பெயர் வாங்கியவர்.9. தமிழகத்தின் மிக எளிமையான தலைவராக இருந்தவர்.10. இந்திரா கொண்டு வந்த அவசர நிலையை எதிர்த்ததன் மூலம் தேசப்பற்று, ஜனநாயத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் என்று பெயர் எடுத்தவர்.இப்படிப்பட்ட ஒருவரை திமுக எம்பி வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அவதுாறுகளை பரப்பினார். காங்கிரஸ் கட்சியினருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியதோ இல்லையோ ஒட்டு மொத்த தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், காமராஜரை மட்டுமே ஒரே மாபெரும் தலைவராக அனைத்து மக்களும் மதிக்கின்றனர்.சாதாரண மக்களே கொந்தளிக்கும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் காமராஜர் காலத்தில் வாழ்ந்த ப.சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, தங்கபாலு வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன்? திமுக கூட்டணி கட்சி என்பதாலா? திமுகவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரசுக்கு அதிகபட்சம் 20 சீட்டுகள் கிடைக்குமா? அதை விடுத்து, ஆட்சியையா காங்., பிடிக்கப் போகிறது.தமிழகத்தில் காங்., என்று ஒரு கட்சி இருப்பதே காமராஜரால் தான். அவர் பெயரை சொல்லாமல் காங்., கட்சி இருக்க முடியுமா?புலி வாலை பிடித்த கதையாக திமுகவை பிடிக்கவும் முடியாமல், விடவும் முடியாமல் காங்., தவிக்கிறது. எனவே, திமுக கூட்டணியை விட்டு காங்., பிரிந்து வருவதற்கு இது தான் நல்ல நேரம். திமுக அரசின் ஊழலை கண்டிக்கிறோம் என்று வலுவான ஒரு காரணத்தைச் சொல்லி, காங்., வெளியே வந்தால், அக்கட்சியின் மீது மக்கள் மனங்களில் மதிப்பு உயரும். தேய்ந்து வரும் அக்கட்சியின் வாக்கு வங்கியும் உயரும்.காங்கிரசை திமுக உடன் வைத்திருப்பதே தாங்கள் செய்யும் தவறுகளையும் ஊழல்களையும் வெளியே சொல்லக் கூடாது என்பதற்காகத் தான். ஏற்கனவே காங்கிரசாரை திமுகவினர் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதை புரிந்துகொண்டு காங்., இனிமேலாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வாசகர்களே எழுதுங்கள்:

வாசகர்களே, காமராஜர் குறித்து திமுக எம்பியின் விமர்சனம் பற்றியும் காங்கிரஸ் நிலைப்பாடு பற்றியும் உங்கள் கருத்துகளை ‛‛கமென்ட்'' பகுதியில் எழுதுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 213 )

Srinivasa Krishnaswamy
ஆக 16, 2025 15:09

நமக்கு. பேச வாய் illai


Varadharajan Srinivasan
ஆக 13, 2025 08:01

சிறந்த முதல்வரை இகழ்ந்து கருணா பின் செல்லும் காங்கி கும்பலுக்கு இந்த அடி தகும்


M Ramachandran
ஆக 08, 2025 00:25

மூர்க்கணை இனம் காட்டி விட்டது


M Ramachandran
ஆக 08, 2025 00:07

மூர்க்கணினின் முகத்திறைய்ய கிழிந்தது.


M Ramachandran
ஆக 08, 2025 00:07

மூர்க்கணினின் முகத்திறைய்ய கிழிந்தது.


K Anbazhagan
ஆக 05, 2025 15:31

காமராஜர் பற்றி சொல்ல வேண்டுமானால் பழம்பெரும் தலைவர் எந்த ஜாதி பாகு பாடின்றி அனைவர்க்கும் தன் பால் என்ன செய்ய முடியுமோ அனைத்தும் செய்தார் இன்று அப்படி இல்லை அரசியல் வாதிகள் அரசியல் செய்கிறார்கள் நற்பணிகளை யாரும் செய்வதில்லை எல்லாம் பணம் அதனால் தான் யாரும் எதுவும் பேசவில்லை.


மயிலை தொண்டன்
ஜூலை 30, 2025 11:31

பெருந்தலைவர் அவர்களை பற்றி தவறான கருத்து அளிப்பவர்களும், அதை தட்டிக்கேட்காதவர்களும் மற்றும் தவறான கருத்தை அளித்தவர்களை தண்டிக்காதவர்களும், "நாடார்" என்று சொல்லிக்கொள்ள தகுதியற்றவர்கள்.இதற்கான பதில் 2026ல் தெரியும்.


V. SRINIVASAN
ஜூலை 30, 2025 11:10

இன்றும் போட்டோவில் பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்கள் வெளுப்பாக கறைபடியாத மனிதர் அவர்கள் அந்த திருச்சி சிவா ஏற்கெனவே கருப்பு இந்த போட்டோ படு கருப்பாக இர்ருக்கன் உடம்பு முழுவதும் ஊழல் எல்லாம் சேர்ந்து இருக்கு இவன் காமராஜர் ஐயாவை பற்றி பேச அறுகதை இல்லாதவன்


Chandru
ஜூலை 29, 2025 09:23

Ji. It is a surprise that you still consider people like chidambaram, azhagiri and thangabalu as human beings.


M Ramachandran
ஜூலை 25, 2025 11:48

இப்போது உள்ள பெரும்பாலும் உள்ள காங்கரஸ் என்ற பெயரிலுள்ள நபர்கள் வயிற்று பிழைய்யப்பிற்காக பல் வேறு கட்சியிலேயிருந்து வந்து ஒட்டிக்கொண்டவர்கள். அவர்களுக்கு பழைய தலைவர்கள் பற்றி என்ன கவலை? அவர்கள் கவலையையெல்லாம் ராகுலுக்கு ஜால்றா தட்டி ஒரு MLA அல்லது MP பதவி பிடித்து காசு பாக்க வேண்டும். காமாராஜாரா அது யார் என்ற கோணத்தில் சிந்தனையய உள்ளவர்கள். முதலில் அடிமை காங்கரஸ் தலை குடும்பம் மரியாதை கொடுத்தால் தானெ வால் அதை பற்றி சிந்தித்து வாலாட்டும்