உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மொழி குறித்து வீண் விமர்சனங்கள் வேண்டாம்: கட்சி எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

மொழி குறித்து வீண் விமர்சனங்கள் வேண்டாம்: கட்சி எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

சென்னை: ஹிந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம் என தி.மு.க., எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.தி.மு.க, லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம், கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில், இன்று (மார்ச் 09) காலை 11 மணிக்கு, சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொகுதி மறுவரையறை என்பது தனிப்பட்ட ஒரு கட்சியின் பிரச்னை இல்லை. தமிழகத்தின் பிரச்னை. பல மாநிலங்களின் பிரச்னை. எனவே தி.மு.க., எம்.பி.,க்கள் தமிழகத்தின் அனைத்துக் கட்சி எம்.பி.,க்களையும் ஒருங்கிணைத்து முன்னெடுப்புகளை டில்லியில் மேற்கொள்ள வேண்டும். ஒரே ஒரு அனைத்து கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது. தொகுதி மறுசீரமைப்பு குறித்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அமைச்சர், ஒரு எம்.பி., அடங்கிய குழு சென்று விளக்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பில் தேசிய அளவிலான கவனத்தை இருக்க அனைத்து எம்.பி.க்களும் ஒன்றுபட்டு செயலாற்றிட வேண்டும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள 29 கட்சிகளுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையில் நமக்கான உரிமையை பெற இது ஒரு தொடக்கம் தான். உடனடியாக டில்லியில் தமிழக எம்.பி.,க்களின் கூட்டத்தை நடத்தி அவர்களது கருத்துக்களை கேட்டு செயலாற்றிட வேண்டும். மாநிலத்தின் உரிமைகளுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் தி.மு.க., எம்.பி.,க்கள் இருக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு, நிதி பகிர்வு, மும்மொழி கொள்கை என பா.ஜ., அரசு வஞ்சிக்கிறது. நம் கோரிக்கைகள் முழுமையாக வெற்றி அடையும் வரை இந்த போராட்டம், முன்னெடுப்பு தொடர வேண்டும். ஹிந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம். தொகுதி தொகுதி மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும், ஒருங்கிணைத்து களம் காண்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். முன்னதாக, 'தொகுதி மறுசீரமைப்பு குறித்து பார்லியில் குரல் எழுப்புவோம். மாநில உரிமைகளை நிலைநாட்ட அனைத்து எம்.பி.,க்களும் ஒன்றிணைந்து செயல்படுவோம். தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களையும் ஒன்றிணைத்து களம் காண்போம்' உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

ராமகிருஷ்ணன்
மார் 10, 2025 11:35

உடனுக்குடன் பல்டியடிக்கும் கேடுகெட்ட கேவலமான அரசியல் செய்யும் திறனற்ற திமுக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மானங்கெட்ட ஆட்சி.


Vaduvooraan
மார் 10, 2025 07:35

"ஒரு அனைத்து கட்சி கூட்டம் இந்தியா முழுக்க நம்மை நோக்கி கவனத்தை திருப்பி இருக்கிறது"- 100 சதவிகிதம் சரி ஆந்திரா, கேரளம், தெலங்கானா, இந்த தென் மாநிலங்களில் எல்லாம் மும்மொழித் திட்டம் அமலில் இருந்து வருகிறது. ஹிந்தியை தாய்மொழியாக கொள்ளாத மற்ற மாநிலங்களுக்கும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதில் தயக்கமில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, திமுக காற்றில் கத்தி வீசிக் கொண்டிருக்கிறது இதில் குழுகுழுவாக கட்சியின் முக்கிய தலைவர்களை மற்ற மாநிலங்களூக்கு நம் நிலைப்பாட்டை விளக்கும் பொருட்டு முதல்வர் அனுப்புகிறாராம். நம்ப எம்.பிக்கள் பெரும்பான்மையினருக்கு ஆங்கிலத்தை விடுங்க தமிலே தகராறு இதில் எந்த மொளியில் திமுகவின் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லப் போறாங்களோ தெரியலையே? திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றுப் பயணம் போகும்போது ஷேம் ஷேம் என்று தொடர்ந்து கத்த ஏதாவது ஏற்பாடு செய்வது நல்லது


தாமரை மலர்கிறது
மார் 10, 2025 01:00

தமிழர்கள் ஹிந்தி படித்தால், சன் டிவியை மட்டுமே பார்த்து வந்த அவர்கள் வடஇந்திய சேனல்களை பார்ப்பார்கள் ,தமிழகத்தின் லட்சணம் தெரிந்துபோய்விடும். மக்களுக்கு உண்மை புரிந்துவிடும் என்று ஸ்டாலின் பயப்படுகிறார். மும்மொழி விஷயத்தில் நேருவை தண்ணிகுடிக்க வைத்த திருட்டு திராவிடத்தை அமித் ஷா தண்ணிகுடிக்க வைப்பார். திருட்டு திராவிடத்தை அடக்கி ஆள்வதில் அமித் ஷா கில்லாடி.


Bhakt
மார் 09, 2025 23:45

Fedup_with_DMK Getout_DMK


சிட்டுக்குருவி
மார் 09, 2025 21:36

"இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும் " நமது முதல்வருக்கு மிகவும் பொருந்தும். டிராவிடத்தில் சிலர் பிறந்ததில் இருந்தே பாராளுமன்ற உறுப்பினராக இருந்துவந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு தெரியாதா ,தி கான்ஸ்டிடூஷன் திரட்டிபைரஸ்ட் அம்மீன்ட்மென்ட் ஆக்ட். ௧௯௭௩.பாரா இரண்டில் எந்த ஒருகாரணத்திற்காகவும் ,தொகுதி மருவறையின் போது எந்த ஒரு மாநிலத்தின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படமாட்டாது என்று இருப்பது. ஏன் எவரும் முதல்வருக்கு இதை எடுத்து கூறவில்லை ? பயம் பதவி போகும் கூடவே கமிசினும் போகும் என்பதே .இவ்வளவு அறியாமை மற்ற மாநிலங்களில் இருப்பது கடினமே .பொறுத்திருந்து பார்ப்போம்.


V வைகுண்டேஸ்வரன்,Chennai
மார் 09, 2025 20:00

புஸ்வாணம் ...துருப்பிடித்த இரும்புக்கரம் மறுபடியும் உள்ளே வைக்க பட்டது


Nagarajan S
மார் 09, 2025 19:27

ஹிந்தி மொழி, மற்றும் மும்மொழி மொழித்திணிப்பு பற்றி தினமும் ஒரு அறிக்கை வெளியிட்ட முதல்வர் இப்போது திடீரென்று ஹிந்தி உட்பட எந்த மொழி குறித்தும் வீண் விமர்சனங்கள் வேண்டாம் என தி.மு.க., எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளது என்ன காரணம் ? திமுகவினர் நடத்தும் சி பி எஸ் சி பள்ளிகளில் ஏற்கனவே ஹிந்தி மற்றும் பிறமொழிகள் உட்பட மும்மொழிகள் கற்பிக்க படுவது மக்களுக்கு தெரிந்து விட்டதாலா ?


Kjp
மார் 09, 2025 17:13

மத்திய அரசு மும்மொழி கொள்கையில் தமிழகத்தை வஞ்சி கற்கவில்லை.நீங்கள்தான் உங்கள் உங்கள் கட்சியினர் தனியார் நடத்தும் பள்ளிகளில் இந்தியை கட்டணம் வாங்கி கற்றுக் கொடுக்கிறீர்கள்.அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கையை மட்டும் புகுத்தி மாணவர்களை வஞ்சிக்கிறீர்கள்.உங்களை மாணவர்கள் மக்கள் புரிந்து கொண்டார்கள்.உங்கள் ஜம்பம் பலிக்கவில்லை.


Kasimani Baskaran
மார் 09, 2025 16:58

அந்தக்கட்சியில் ஹிந்திக்கும் ஆங்கிலத்துக்கும் வித்தியாசம் தெரியாத PhD க்கள் நிறைய இருக்கிறார்கள் என்ற உண்மையை மோடியிடம் யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்களோ என்று சந்தேகம் வந்து விட்டது போல.


raja
மார் 09, 2025 16:01

திருட்டு திராவிட கொள்ளை கூட்ட கூமுட்டைகளின் கருத்தை எந்த அறிவார்ந்த சமூகமும் கேட்காது..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை