உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., எம்.பி.,க்கள் இரட்டை வேடம்; வீடியோ வெளியிட்டு அண்ணாமலை குற்றச்சாட்டு

தி.மு.க., எம்.பி.,க்கள் இரட்டை வேடம்; வீடியோ வெளியிட்டு அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: ''இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க., எம்.பி.,க்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள்'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.இது குறித்து, சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசியதாவது: மும்மொழியப்பட்ட குடியேற்ற மசோதாவானது, இந்தியாவில் வாழும் 90 ஆயிரம் இலங்கை வாழ் தமிழர்களை கணிசமாக பாதிக்கும். அதில் பெரும்பாலானோர் கிட்டத்தட்ட 30 வருடங்களாக, நம் நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xvixizg9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மறுவாழ்வு மையங்கள்

இந்த ஆண்டின் மார்ச் மாதம் வரை 19,949 குடும்பங்கள், தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 103 மறுவாழ்வு மையங்களில் வாழ்கின்றனர். தமிழகத்தில் நாங்கள் அகதிகள் முகாம் என்று அழைப்பதில்லை, மாறாக தமிழக முதல்வர் அதற்கு மறுவாழ்வு மையங்கள் என்று பெயரிட்டுள்ளார். இந்த மசோதா, இலங்கை வாழ் தமிழர்களை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி தங்களை பாதுகாத்துக்கொள்ள வந்தவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு பதில் அளித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது: தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறினார். இத்தனை தமிழ் அகதிகள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கான இந்திய அரசின் கொள்கை என்ன வென்று, அகதிகளை நினைத்த கவலை எனக்கும் இருக்கிறது. கனிமொழிக்கு இருப்பதை போலவே, அவர் கேட்டார் கொள்கை என்னவென்று, நான் கொள்கையை கூறுகிறேன்.

புல் ஸ்டாப், கமா

1986ம் ஆண்டு முதல் எந்த கொள்கை இருக்கிறதோ, நீங்கள் 10 ஆண்டுகள் யு.பி.ஏ., அரசில் இருந்த போது என்ன கொள்கை இருந்ததோ, அதுதான் எங்களின் கொள்கையும். தமிழ் அகதிகள் கொள்கையில் நாங்கள் புல் ஸ்டாப், கமா கூட மாற்றவில்லை. தி.மு.க., அங்கம் வகித்த அரசின் கொள்கையை தான் நாங்கள் அப்படியே பின்பற்றுகிறோம். மாற்றம் செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள் நாங்கள் ஆலோசிப்போம். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இரட்டை வேடம்

இந்த வீடியோவை பதிவிட்டு அண்ணாமலை கூறியதாவது: காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சர்களாகப் பதவி வகித்தபோது, தமிழகத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் மக்கள் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பல முறை தன்னைச் சந்தித்தபோதும் அது குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தி.மு.க., எம்பிக்கள் இரட்டை வேடம் போடுவதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்லிமென்டில் வெளிச்சம் போட்டுக் காட்டினார். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

சிட்டுக்குருவி
மார் 28, 2025 18:45

அவர்களை எல்லாம் பாரதிய பிரஜைகளாக மாற்றுங்கள் என்று கூறவேண்டியது தானே.ஏன் கூறவில்லை.புதிய குடியுரிமை சட்டத்தில் இடமிருக்கின்றதே இனிமேல் அவர்களை அகதிகள் என்று யாருமே சொல்லகூடாது.வேண்டுமானால் புலம் பெயர்ந்த தமிழர்கள் என்று வேண்டுமானால் கூறலாம்.


Kasimani Baskaran
மார் 28, 2025 14:51

தீமக்காவினர் கபட வேடதாரிகள்... நிமிடத்துக்கு ஒரு வேடம் போடுவார்கள்.


Rajarajan
மார் 28, 2025 12:21

இதெல்லாம் விடுங்க பாஸ். இந்த அமளி துமளியிலும், ரணகளத்திலும், பாராளுமன்றத்தின் வெளியில், திரு.வைகோ நடத்திய கிளுகிளுப்பு நிகழ்ச்சி பாத்திங்களா. மன்னிப்பு கேள், மன்னிப்பு கேள், மத்திய அரசே கனிமொழியிடம் மன்னிப்பு கேள்னு அடிச்சார் ஒரு சூப் அந்தர் பல்டி. நாங்கெல்லாம் ஆடி போய்ட்டோம். அடேங்கப்பா. என்ன ஒரு ஜிங் ஜாங் அடி. அதை காண கண்கோடி வேண்டும்.


Ganapathy Subramanian
மார் 28, 2025 10:30

கனிமொழி இப்படித்தான் இருவேறு வகையில் பேசுவார். தமிழர்களை கொன்று குவித்தவுடன் ராஜபக்சவின் வீட்டில் விருந்துண்டுவிட்டு கையில் பரிசுப் பொருட்களை வாங்கி வந்தவர்தான் அவர். தற்போது தாங்கள் ஆட்சியில் இருந்ததை மறந்துவிட்டு அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்?


Narayanan Muthu
மார் 28, 2025 10:25

தினம் ஒரு உளறல்.


Mettai* Tamil
மார் 28, 2025 10:53

தினம் ஒரு ஊழல் ......


N.Purushothaman
மார் 28, 2025 14:43

திருட்டு திராவிடன்னா உளறிக்கிட்டு தான் இருப்பான் ..அதுக்கு என்ன பண்ண முடியும் ?


Oviya Vijay
மார் 28, 2025 10:24

திமுக மட்டுமல்ல நேரம் வரும்போது அதிமுக செய்த ஊழல்களையும் வெளியிடுவேன் அப்படின்னு சொன்ன தலைவா... என்ன ஆச்சு... இப்போ என்னடான்னா அவங்களோடயே கூட்டணி வைக்க பேச்சு நடத்திக்கிட்டு இருக்கு உங்க தலைமை... நீங்க என்னடான்னா அடக்கி வாசிச்சுக்கிட்டு இருக்கீங்க... ஏன்... அதிமுக பண்ண ஊழல் பட்டியலை வெளியிட கட்சித் தலைமை இன்னும் க்ரீன் சிக்னல் கொடுக்கலையோ... அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் என் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் அப்படின்னு நீங்க பீலா விட்டதையும் ஞாபகப் படுத்துறேன்... என்னவோப்பா ரொம்ப ஞாபக மறதியாகிகிட்டு இருக்கு...


ஆரூர் ரங்
மார் 28, 2025 10:44

காங்கிரசுடன் இனி ஒட்டும் இல்லை. உறவும் இல்லை ன்னு கட்டுமரம் கூறியதாக ஞாபகம்.


Mettai* Tamil
மார் 28, 2025 11:03

அப்படியே உங்க தேர்தல் அறிக்கையில் கொடநாடு விவகாரம் ,ஜே மரண வழக்கு ,ஊழல் வழக்கு என எல்லாத்தையும் விசாரிச்சு அவர்களை சிறைக்கு அனுப்புவோம் என்று சொன்னதையும் ஞாபகப் படுத்துறேன்...ஆனா, நீங்க தான் விஞ்ஞான ஊழல் வழக்குல உள்ள போய்கிட்டு இருக்கீங்க என்பதையும் ஞாபகப்படுத்துறேன். அதனால நீங்களும் வல்லாரை கீரையை அதிகம் சேத்துக்குங்க .....


vivek
மார் 28, 2025 11:16

பாவம் இது அங்கிட்டும் இங்கிட்டும் சுத்திட்டு இருக்கு... ஓ... ரமா போய் விளையாடு


Rajathi Rajan
மார் 28, 2025 11:22

என்னைக்கு தான் நீங்க ரைட் கு வரப்போறீங்கனு தெரியல?


S.Martin Manoj
மார் 28, 2025 13:44

இவனுங்க வெறும் வாய் சவடால் மட்டும்தான் மத்தபடி ...


Indian
மார் 28, 2025 09:32

பி ஜெ பி கு தமிழ் நாட்டில் என்றும் நோட்டா தான்.. கனவு காண வேண்டாம் ..


Mettai* Tamil
மார் 28, 2025 10:52

நீங்களும் ரொம்பநாளைக்கு ஓட்டுக்கு நோட்டு கிடைக்கும் என்று கனவு காண வேண்டாம் ..பி ஜெ பி தமிழ் நாட்டில் ஆட்சி அமைப்பது காலத்தின் கட்டாயம் .....


VENKATASUBRAMANIAN
மார் 28, 2025 09:23

பொய் சொல்லுவதில் திமுகவினர் வல்லவர்கள். இதுதான்1967 முதல் நடக்கிறது. அடுக்கு மொழியில் உணர்ச்சி பூர்வமாக பேசி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இப்போது அவர்கள் பேசுவது அவர்களுக்கு எதிராக திரும்புகிறது. அதனால்தான் ஒவ்வொன்றையும் மாற்றி பேசுகின்றனர்.


Indian
மார் 28, 2025 09:07

இந்த பருப்பு எல்லாம் இங்க வேகாது வேற எதாவது உருப்படியான வேலைய பாருங்க ..


Tamilselvan,kangeyam638701
மார் 28, 2025 09:30

இதுவரை திமுக எம்பிக்கள் வாயால் சுட்டு வந்த வடைகளை இனிமேல் தமிழகத்தில் சுட முடியாது. அண்ணாமலையிடம் திமுக எம்பிக்களோட பருப்பு வேகாது ஆகவே திமுக கொத்தடிமையே இதை புரிந்து கொண்டு இனிமேல் கருத்தை பதிவிடு.


Kumar Kumzi
மார் 28, 2025 09:32

அதை நீங்க சொல்ல கூடாது


நாஞ்சில் நாடோடி
மார் 28, 2025 09:48

இலங்கை தமிழர்களுக்காக சுடாலின் அரசு இதுவரை செய்தது என்ன?


Mettai* Tamil
மார் 28, 2025 09:50

பருப்பு எல்லாம் தாராளமா வெந்துறும் ...ஆனா உங்க ஊழல் பருப்பு இனி தமிழ்நாட்டில் வேகாதுங்க .....


KavikumarRam
மார் 28, 2025 10:28

பேசுறத விட்டுட்டு திமுக தமிழர்களுக்கு செஞ்சிக்கிட்டு இருக்கிற துரோகத்தை பாஜக சொல்றாங்க. அது இல்லேன்னு நீ தரவுகளோடு பதில் சொல்லு. அத விட்டுட்டு ஊளத்தனமா உளறிக்கிட்டு இருக்க???


சமீபத்திய செய்தி