உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணை ஜனாதிபதி தேர்தலில் மாற்றி ஓட்டளித்த திமுக எம்பிக்கள்: காங்கிரஸ் புகாரால் ஸ்டாலின் கோபம்

துணை ஜனாதிபதி தேர்தலில் மாற்றி ஓட்டளித்த திமுக எம்பிக்கள்: காங்கிரஸ் புகாரால் ஸ்டாலின் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துணை ஜனாதிபதி தேர்தலில், தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்துவிட் டார். ஆனால், இந்த தேர்தல் முடிவுகள் தி.மு.க.,விற்கும், காங்கிரசுக்கும் இடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. ராதாகிருஷ்ணனுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார் பாக, 438 ஓட்டுகள் கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் 452 ஓட்டுகள் கிடைத்தன. எதிர்த்து நின்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டிக்கு கிடைத்தது, 300 ஓட்டுகள்; இதில், 15 செல்லாதவை.'இண்டி' கூட்டணியிலிருந்து யார் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தது? உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, தி.மு.க., மற் றும் திரிணமுல் காங்., - எம்.பி.,க்கள் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்து விட்டனர். 'அத்துடன், எங்கள் கூட்டணி எம்.பி.,க்கள் வேண்டு மென்றே செல்லாத ஓட்டுகள் அளித்து விட்டனர்' என, சில தலைவர்களிடம் சொன்னாராம் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.இது, தி.மு.க., தலைமைக்கு தெரிய கோபமடைந்த வந்ததும் மிகவும் முதல்வர் ஸ்டாலின், உடனடியாக காங்., தலைமைக்கு போன் செய்து, 'தி.மு.க.,விலிருந்து யாரும் மாறி ஓட்டளிக்கவில்லை; எதற்கு இப் படி தேவையில்லாத பிரச்னையை ஜெய்ராம் கிளப்புகிறார்' என புகார் அளித்தார்கள். அதன்பின், வாயை மூடிக்கொண்டாராம் ஜெய்ராம்.'தன் இஷ்டத்திற்கு சமூக வலைதளங்களில், 'டுவிட்' செய்து கொண்டிருக்கிறார் ஜெய்ராம்.இவருக்கும், காங்., தலைமைக்கும் உறவு சரியில்லை' என்கின்றனர் காங்கிரசார். இருப்பினும், -'தி.மு.க., எம்பிக்கள் தான் ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தனர் என்ற தன் நிலைப்பாட்டை, ஜெய்ராம் மாற்றிக் கொள்ளவில்லையாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Imtiyaz Ahmed K
செப் 15, 2025 07:27

அப்ப சரி ... நடத்து..


N S
செப் 15, 2025 02:29

திராவிட மடலில் இதுவும் ஒரு யுக்தி. எல்லோரும் கவனமாக இருக்கவும்.


Mani P
செப் 14, 2025 20:33

ஒருவேளை ஹிந்தியில் எழுதி இருந்திருந்தால் இங்கு உள்ள திராவிட வம்சத்தினர் தெரியாமல் போட்டாலும் போட்டு இருக்கலாம்.


Anantharaman Srinivasan
செப் 14, 2025 15:38

வெளி மேடையில் நாத்திகம் பேசி வீட்டுக்குள் ரகசியமாக பூஜை திவசம் செய்வதை விட தமிழனுக்கு கட்சி மாறி ஓட்டு போட்டது தேவல..


Sathiesh
செப் 14, 2025 15:31

இதை சொன்னதே காங்கிரஸ்காரர் தான். அப்போ யாரு இந்த கூட்டணி உடையணும் னு நினைக்கிறார்கள்?


Sathya Narayanan Narayanan
செப் 14, 2025 14:40

எதிராக ஒட்டளித்தவர்கள் தி. மு. க.கள். Same side goal. வாழ்க


Sathya Narayanan Narayanan
செப் 14, 2025 14:35

வாழ்க.


Sathya Narayanan Narayanan
செப் 14, 2025 14:29

உள்ளுக்குள்ளே ஆப்படித்து விட்டார்கள் ...


Subramanian
செப் 14, 2025 13:36

இந்த செய்தியை பரப்புவதன் மூலமாவது காங்கிரஸ் திமுக கூட்டணி உடையாதா /விரிசல் வராதா என்று எதிர்பார்ப்பவர்கள் ஏங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான் போலும்


Sivaram
செப் 14, 2025 13:23

கேள்வி எழுப்பிய உடன்பிறப்பு எங்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை