உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலை நிமிர முடியாத அளவிற்கு தி.மு.க.,தோல்வியடையணும்: கவுதமி நடிகை கவுதமி பேட்டி

தலை நிமிர முடியாத அளவிற்கு தி.மு.க.,தோல்வியடையணும்: கவுதமி நடிகை கவுதமி பேட்டி

ஸ்ரீவில்லிபுத்துார்: ''2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் தலை நிமிர முடியாத அளவிற்கு தி.மு.க.,வை தோல்வியடைய செய்ய வேண்டும்,'' என, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கவுதமி கூறினார்.நேற்று காலை 11:30 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு வந்த கவுதமி தரிசனம் செய்தார்.பின் அவர் கூறியதாவது: 2026ல் தமிழகத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் அமைய வேண்டும் என பிரார்த்தனை செய்தேன். தமிழகம் முழுக்க அனைத்து தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து பேசுவேன். ராஜபாளையம் தொகுதியில் நிற்பது குறித்து நான் ஒன்றும் யோசிக்கவில்லை. தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா என்பது குறித்து இந்த நேரத்தில் பெரிய ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 4 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையுள்ளது. 2026 தேர்தலில் தி.மு.க., மீண்டும் தலை நிமிர முடியாத அளவிற்கு பாடம் புகட்ட வேண்டும். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெற பிரசாரம் செய்வேன் என்றார்.தி.மு.க., கூட்டணியில் இணைந்து ராஜ்யசபா சீட் பெற்ற கமல் குறித்த கேள்விக்கு, மனிதர்கள் யாராக இருந்தாலும் சொன்னதை செயல்படுத்துவதில் திடமாக இருக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lakshminarasimhan
ஜூன் 10, 2025 07:12

கமல் ஒரு ஜடம் எனவே ஒரு செயலை செய்யும் திடம் அவர் இடத்தில் இல்லை எனவே அவர் ஒரு அரசியலின் குழப்பம் அவரால் எதுவும் செய்ய இயலாது


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 10, 2025 06:55

உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் தாயீ... பெண்கள் பாதுகாக்கப்படும் அரசு அமையட்டும்